சனி, 5 ஜூலை, 2008

ஓய்வு நாளில் "ஆண்டவர்' இடைநீக்கம்

சென்னை, ஜூலை 1: தலைமைச் செயலக ஊழியர்க ளுக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முக்கிய எதிரியான தனி அலுவலர் ஆர்.ஆண்டவர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் (திங்கள்கிழமை) இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், இந்த முறைகேட்டை நியாயமாக விசா ரித்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு இன்ஸ்பெக்டரும், காவ லரும் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு ஒக்கி யம் துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக 4 அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால், இந்த முறைகேட்டில் முக்கிய எதிரியாக புகார் கூறப்பட்ட தனி அலுவலர் ஆர். ஆண்டவர் எவ்வித நடவடிக்கைக்கும் உட்படாமல் இருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

இந்த நிலையில், ஆர். ஆண்டவர் தனது செல் வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கில் எவ்வித நடவ டிக்கைக்கும் ஆளாகாமல் திங்கள்கிழமை ஓய்வு பெற இருப்பது குறித்து "தினமணியில்' செய்தி வெளியானது.

இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கா தது ஏன் என அரசின் பல்வேறு நிலைகளில் இருந் தும் கேள்வி எழுப்பப்பட்டது.இத்தகைய சூழலில், ஆர். ஆண்டவர் ஓய்வு பெறும் நாளான திங்கள்கிழமை (ஜூன் 30) அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கான உத் தரவு வழக்கத்துக்கு மாறாக இரவு 7 மணிக்கு அவரி டம் அளிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக ஒரு அலுவலர் முறைகேடு செய்துள் ளது தெரியவந்தால் அவர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் அலுவலக வேலை நேரமான மாலை 5.45 மணிக்குள் அதற்கான உத்தரவு வழங் கப்பட வேண்டும்.

ஆனால், ஆண்டவர் மீது நடவடிக்கை எடுப் பதை தவிர்க்க வேண்டும் என விரும்பிய சில உயர் அதிகாரிகள், இந்த நடவடிக்கையும் அவருக்குச் சாதகமாக வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு 7 மணிக்கு பணி இடைநீக்க உத்தரவை வழங்கியிருக்க லாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தக் காலதா மதத்தையே காரணம் காட்டி இடைக்காலத் தடை பெற அவர் முயற்சிக்கலாம் என்று தெரிகிறது.

நியாயமாக நடந்ததால் தண்டனையா?

ஆர்.ஆண்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலை யில், இந்த வழக்கில் நியாயமாக விசாரணையை நடத்திய லஞ்ச ஒழிப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் நல் லதுரை மற்றும் காவலர் விஜயகுமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது காத்திருப் போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பது ஏன் என்று தலைமைச் செயலகப் பணியாளர்கள் மத்தி யில் பரவலாகப் பேசப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் லஞ்சம் வாங்கிய புகா ருக்கு ஆளாகும் நிலையில் மட்டுமே ஒரு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டு துறையைவிட்டு காவல் துறை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம்.

ஆனால், இதுபோல எவ்விதப் புகாருக்கும் ஆளா காத நிலையில் நல்லதுரையும், விஜயகுமாரும் இடமாற் றம் செய்யப்பட்டிருப்பது இவர்களைப் போல நியாய மாக நடக்க விரும்பும் அதிகாரிகளை சோர்வடையச் செய்வதாக உள்ளது என்கின்றனர் போலீஸôர்.

புதன், 2 ஜூலை, 2008

அட, ஆண்டவா.... !

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு

சென்னை, ஜூன் 29: தலைமைச் செயலக பணியா ளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்தது தொடர்பாக 4 அதிகாரிகள் சனிக்கிழமை தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.ஆனால், இந்த முறைகேட்டில் முக்கியக் குற்றவா ளியாக புகார் கூறப்பட்ட பதிவுத்துறை அதிகாரி ஆர். ஆண்டவர் எவ்வித நடவடிக்கைக்கும் உட்ப டாமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சி அளிப்ப தாக உள்ளது.

சென்னையை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத் தில், கடந்த 1999-ம் ஆண்டு தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கான வீட்டுமனைத் திட் டம் உருவாக்கப்பட்டது.56 ஏக்கர் பரப்பளவில் இந்த திட்டத்தை மேற் கொள்ள தலைமைச் செயலக பணியாளர்கள் கூட்டு றவு வீட்டுமனை சங்கம் ஏற்படுத்தப்பட்டது.

ஆர். ஆண்டவர் தனி அலுவலராகவும், ஆர். பத்மநாபன், ஜி.தேவதாஸ், ஆர். கோபால், இளஞ்செழியன், இளமதி, விஜய லட்சுமி, தேவராஜ் ஆகியோர் இயக்குநர்களாகவும் இருந்துவந்தனர்.

இத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிலத்தை இவர்கள் முறைகேடாக பினாமி பெயரில் ஒதுக்கீடு செய்துள்ளதாக தலைமைச் செயலக ஊழியர்களின் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட் டது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில், தலை மைச் செயலக பணியாளர்களின் புகார்களில் உண்மை உள்ளது என்று கண்டறிந்து தவறுக ளுக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவ டிக்கை மேற்கொள்ளுமாறு அரசுக்கு லஞ்ச ஒழிப் புத்துறை பரிந்துரை செய்தது.

இடம் மாறிய ஆண்டவர்:

இந்த நிலையில் தலை மைச் செயலக பணியாளர்கள் கூட்டுறவு வீட்டு மனை சங்கத்தின் சிறப்பு அலுவலராக இருந்த ஆர்.ஆண்டவர், லஞ்ச ஒழிப்புத்துறை பணியாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் சிறப்பு அலுவல ராக பொறுப்பேற்றார்.

ஆனால், ஆர். ஆண்டவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டாம் என்றும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பணியா ளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் அலுவல் சாரா தலைவரும் மத்திய சரக எஸ்.பி.யுமான ஆசி யம்மாள் விசாரணை அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.


இந்த நிலையில் ஏற்கெனவே பணி புரிந்த இடத் தில் முறைகேடுகள் செய்ததாக புகார் கூறப்பட்ட ஆர். ஆண்டவர் லஞ்ச ஒழிப்புத்துறை பணியாளர் கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் சிறப்பு அலு வலராக இருக்கக் கூடாது என்றும் அவர் மீது விசா ரணை நடத்த வேண்டும் என்றும் இந்த சங்கத்தின் உறுப்பினர்களே புகார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்த இந்தத் துறை யின் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ். கிரிமுருக னுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் இந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையின் உயர் அதிகா ரிக்கு தொடர்பு இருப்பதால் இதனை வேறு அதிகா ரிக்கு மாற்றுமாறு துறையின் இயக்குநருக்கு ஜூன் 25-ம் தேதி கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் சார்பு செயலாளர் ஆர்.கோபால், கைத்தறி மற்றும் கதர் துறையில் சார்புச் செயலாளராக பணிபுரிந்து வரும் ஜி. தேவதாஸ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் உதவிப் பிரிவு அலுவலராக உள்ள விஜய லட்சுமி ஆகியோர் தாற்காலிகப் பணி நீக்கம் செய் யப்பட்டதாக அரசு சனிக்கிழமை (ஜூன் 28) அறிவித்தது.

இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த வீட்டு மனைச் சங்கத்தின் அப்போதைய தனி அலு வலர் லட்சுமணன் தாற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். ஆர்.பத்மநாபன் உள்ளிட்ட ஏனைய இயக்குநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசின் அறிவிப் பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று ஓய்வு:

ஆனால், வீட்டுமனை ஒதுக்கீட் டில் முறைகேடு செய்தவர்களில் முக்கிய நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள தனி அலுவலர் ஆர்.ஆண்டவர் எவ்வித நடவடிக்கைக்கும் ஆளாகா மல் இருப்பது ஏன்? என தலைமைச் செயலக ஊழி யர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தனி அலுவலர் ஆர். ஆண்டவர் எந்த நடவடிக் கைக்கும் ஆட்படாமல் திங்கள்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.