ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

தியாகராய நகரில் ஒரு கிரவுண்ட் நில மதிப்பு ரூ. 5.57 லட்சம்?

சென்னை, செப். 27: சென்னையில் தியாக ராய நகர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு ரூ. 5.57 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை கிரையம் பெற்றவர்களுக்கு வரன்முறைப்படுத்தி அளிப்பது குறித்து தமிழக அரசு வெளி யிட்ட அரசாணையில் நிலத்தின் மதிப்பாக குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

1978-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல் சட் டத்தின் கீழ் உச்சவரம்புக்கு மேல் மிகை நிலம் வைத்திருந்த நில உரிமையாளர்களிடம் இருந்து ஏராளமான நிலங்கள் அர சால் கையகப்படுத்தியது.

ஆனால், இந்த நிலங்களை அவை உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டவை என்பது தெரியாமல் பலரும் வாங்கியுள்ளனர்இவ்வாறு, கிரயம் பெறப்பட்ட நிலங் களை பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட மண்டல மதிப்பின் அடிப்படையில் நிலமதிப்புத் தொகை யினை பெற்றுக் கொண்டு வரன்முறைப்படுத்தலாம் என கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் வரு வாய்த்துறை முதன்மைச் செயலர் அம்புஜ் சர்மா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அர சாணை (எண்: 565) விவரம்:

உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்ப டுத்தப்பட்டவை என்று அறியாமல் கிரயம் பெற்றவர்களது நிலத்தை வரன்முறைப்ப டுத்த 29-7-1998 தேதியிட்ட அரசாணை யின் (எண்: 649) கீழ் நிர்ணயிக்கப்பட்ட நில மதிப்புத் தொகையை செலுத்த வேண்டும்.

இதன்படி, சென்னை நகரக் கூட்டுப்பகுதி யில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நில மதிப்பு விவரங்கள் (ஒரு கிரவுண்ட்): தியாகராய நகர், எழும்பூர், தண்டையார் பேட்டை: ரூ.5,57,500அம்பத்தூர்: ரூ. 22,300; குன்றத்தூர், பூந்த மல்லி, தாம்பரம், ஆலந்தூர், மாதவரம்: ரூ55,750.

மற்ற நகரக்கூட்டுப் பகுதிகளில் நிர்ணயிக் கப்பட்ட விலை விவரம்: திருச்சிராப்பள்ளி: ரூ. 47,388; சேலம்: ரூ1,42,162; கோவை: ரூ. 30.105; திரு நெல்வேலி: ரூ. 12,544.

அரசாணை வெளியிடப்படும் நாளில் நிலத் தின் தற்போதைய உரிமையாளர்கள் இந்த ஆணையின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள். குடியிருப்பு நோக்கத்திற்காக பயன்படுத் தப்படும் நிலம் மட்டுமே வரன்முறைப்படுத் தப்படும் என்ற முந்தைய விதிகள், 31.12.1994- க்குள் வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் தளர்த்தப்படுகின்றன.

குழப்பம்:

உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்திய பின்னர் அந்த நிலம் மோசடியாக கிரயம் செய்யப்பட்டதை தடுக்கத் தவறிவிட்டு, தற்போது நடுத்தரப் பிரிவு மக்களுக்காக என்று கூறி வரன்மு றைப்படுத்துவதாக அரசு முடிவெடுத்ததே பல்வேறு தரப்பினருக்கும் சந்தேகத்துக்குரி யதாக உள்ளது.

நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்காக என்று கூறி 3 கிரவுண்ட் மற்றும் அதற்கு மேலும் வைத்துள்ளவர்களின் நலனுக்காகவே அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக பரவலாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழ கத்தின் நிலத்தின் விலை கடந்த சில ஆண்டு களில் வெகுவாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் விலை கோடிகளில் மதிப்பிடப்படும் தற்போதைய சூழலில் தமிழக அரசோ, 1998-ம் ஆண்டு நிர்ணயிக் கப்பட்ட நிலமதிப்புத் தொகையை வசூலிக்கப் போவதாக அரசாணை வெளியிட்டிருப்பது முதலில் ஏற்பட்ட சந்தேகங்களை உறு திப்படுத்துவதாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சொந்த வீட்டிலும் தொடரும் சிக்கல்...

சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் ராமன். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊரை விட்டு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடியேறிய லட்சக்கணக்கானோரில் இவரும் ஒருவர்.

தனது நிதி நிலை, விலைவாசி உள்ளிட்ட காரணங்களால் ராமன் தனது குடும்பத்தினருடன் புறநகரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.

கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கும் வீட்டு வாடகை, கூடுதல் மின் கட்டணம், அபரிமிதமான முன்பணம் என வருமானத்தில் பெரும் பகுதியை வீட்டின் உரி மையாளருக்கே கொடுக்க வேண்டிய நிலை, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆர்வம் ராமனுக்கும் வந்தது.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலத் தின் விலையை கருத்தில் கொண்டு புறநக ரில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 1000 சதுர அடி பரப் பளவில் 2 படுக்கை அறை வீடு ஒன்றை ரூ20 லட்சத்துக்கு ராமன் வாங்கினார்.

நிலத்தின் உரிமையாளரிடம் அதிகாரம் பெற்ற கட்டுமான ஒப்பந்ததாரரிடம் இருந்து, முறைப்படி ஒப்பந்தம் போட்டு விற்பனையை பதிவு செய்து வாங்கிய அவ ருக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தன.

காரணம், இவர் அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 8 வீடுகள் கட்டப்பட்டதில் 3 வீடு களை அந்த நிலத்தின் உரிமையாளர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்ராமன் உள்பட 6 பேர் இங்கு வீடுகளை வாங்கியுள்ளனர்.

ஆனால், அந்த குடியி ருப்பில் காலியாக உள்ள இடங்கள், மொட்டை மாடி உள்ளிட்ட பொது உப யோக பகுதிகள் தனது கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறி அதிகாரம் செய்ய ஆரம் பித்தார் உரிமையாளர்.

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய வீட்டில் வாகன நிறுத்தும் இடம் உள்பட எந்த இடத்தையும் வீடு வாங்கியவர்கள் முறை யாக பயன்படுத்த அனுமதிக்காமல் உரி மையாளர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்இவர் மட்டுமல்ல இவரைப் போல பலரும் சொந்த வீடு வாங்கியும் வாடகை வீட் டில் இருப்பது போன்ற உணர்விலேயே செய்வதறியாது நிற்கின்றனர்.

சில இடங்களில் உரிமையாளர்கள் வீடு வாங்கியவரின் அனுமதியை பெறாம லேயே அவரது தளத்துக்கு மேல் கூடுதலாக கட்டடம் கட்ட முயற்சிப்பது உள்ளிட்ட பல்வேறு அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறைந்த எண்ணிக்கை வீடுகள் உள்ள குடியிருப்புகள் மட்டுமின்றி 20 மற்றும் 30 வீடுகள் உள்ள குடியிருப்புகளிலும் இத்த கைய அத்துமீறல்கள் நடைபெறுகின்றன.

சொந்த வீடு வாங்கும் போது இது போன்ற பிரச்னைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

நீங்கள் வாங்கும் நிலத்தின் மொத்த பரப் பளவு. அதில் எத்தனை வீடுகள் என் னென்ன அளவுகளில் கட்டப்படுகின்றனஅந்த குடியிருப்பு அமைந்துள்ள நிலத் தில் உங்களுக்கான பங்கு எவ்வளவு என் பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மொத்த நிலத்தில் பங்கிடப்படாத பகுதி களின் அளவு, நிலத்தின் உரிமையாளருக்கு சிறப்பு ஒதுக்கீடு உள்ளதா என்பது குறித்த விவரங்கள் கட்டுமான ஒப்பந்ததாரருட னான ஒப்பந்த ஆவணத்தில் உள்ளதா என் பதை சரிபார்க்க வேண்டும்.

அவ்வாறு ஆவணத்தில் குறிப்பிடப்பட் டுள்ளபடி பொது பயன்பாட்டு இடங்கள் உள்ளனவா என்பதையும் நேரில் பார்த்து உறுதிச் செய்துக் கொள்ள வேண்டும்.

அந்த வளாகத்தில் உங்களுக்குள்ள உரிமைகளை முழுமையாக தெரிந்து கொள்வது அவசி யம்.

4-க்கும் அதிகமான வீடுகள் இருக்கும் பட்சத்தில் வீடு வாங்கியவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற் படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் உரிமையாளரின் தொல்லைகளை ஒற் றுமையுடன் சமாளிக்கலாம்.

இது போன்ற பிரச்னைகளில் சிக்கி அவ திப்படுபவர்கள் அந்த வீட்டை தங்களுக்கு விற்ற கட்டுமான ஒப்பந்ததாரரிடம் போட்ட ஒப்பந்த விதிகளின் அடிப்படை யில் நீதிமன்றத்தை அணுகி பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

சங்கம் இல்லாவிட்டா லும், வீடு வாங்கிய அனைவரும் இத்த கைய பிரச்னைகளுக்காக தனித்தனியாக வும் நீதிமன்றத்தை அணுகலாம்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

லஞ்ச ஒழிப்புத்துறை உளவுப் பிரிவா?

சென்னை, செப். 21: லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணைக்கு பல் வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வலுக்கிறது.

இவ்வாறு விலக்கு அளிக்கப்படுவதால் ஊழல் மற் றும் முறைகேடுகள் அதிகரிக்கும் என முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் என். விட்டல் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித் துள்ளார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் 24(4) பிரி வின் படி மாநில அரசு எந்தெந்த துறைகளுக்கு விலக்கு அளிக்கலாம் என அதிகாரம் வழங்குகிறது.

ஆனால், இந்த பிரிவின்படி மாநில அரசு தனது அதி காரத்தை பயன்படுத்தி உளவு மற்றும், தேச பாது காப்பு அடிப்படையிலான துறைகளுக்கு மட்டுமே தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க முடியும்.

இவ்வாறு, விலக்கு அளிக்கப்பட்ட துறையில் ஊழல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக தக வல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட் பதை தடுக்க முடியாதுமேலும், உளவு, தேச பாதுகாப்பு தொடர்பானவை மற்றும் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர் பான கேள்விகளுக்கும் பதில் அளிப்பதில் இருந்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் 8 (1) (எச்) பிரி வின்படி ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஊழல் புகார்களின் மீதான புலனாய்வின் ஒரு பகு தியாக புகார் தெரிவிக்கப்படும் நபர் / அலுவலகத் தின் பணிகளை ரகசியமாக கண்காணிப்பது என்ற நிலையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறையின் உளவுப் பணிகள் அமைகின்றன.

இந்த நிலையில், தேச பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான உளவு பணிகளில் ஈடுபடாத லஞ்ச ஒழிப்புத் துறை, கண்காணிப்பு ஆணையத்துக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டு அதிக எண்ணிக்கையில் மனுக்கள் வருவதால் அது லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கமான பணிகளை பாதிக்கும் என்பதால் இந்த விலக்கு அளிக்கப்படுவதாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர் திருத்தத் துறை அரசாணையில் (எம்.எஸ். 158) குறிப் பிடப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

என். விட்டல்:

மத்திய அரசின் முன்னாள் தலைமை கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற என். விட்டல் கூறியது:

தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப் பட்ட ஆரம்ப நிலையில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தில் விசாரணையில் இருக்கும் வழக்குக ளில் தொடர்புள்ளவர்கள் தங்களைப் பற்றி யார் புகார் அளித்தது என்பது உள்ளிட்ட விவரங்களை பெறுவதற்கு இந்தச் சட்டத்தை தவறாக
பயன்படுத்தினர்.

இதற்காக மட்டுமே, விசாரணையில் இருக்கும் வழக்குகள் தொடர்பான விவரங்களை இந்த சட்டத் தின் படி அளிப்பது தடை செய்யப்பட்டது.

ஆனால், பொது மக்களுக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ள துறைகளுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால் அது அங்கு நிர்வாக வெளிப்படைத் தன்மையை குறைத்து ஊழல் அதிகரிக்க வழிவகுக்கும் என்றார் விட்டல்.

விலக்கு ஏன்?

மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு மற் றும் கண்காணிப்பு துறை, விசாரணையில் இருக்கும் வழக்குகள் நீங்கலாக மற்ற வழக்குகள் குறித்த விவரங் களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்து வருகிறது.

அந்த துறைக்கு தேவைப்ப டாத விலக்கு ஒரு மாநிலத்தில் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எந்த வகையில் தேவைப்படுகிறது என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர்.

போராட்டம்:

நீதி மன்றங்களில் விசாரணை முடிவ டைந்த வழக்குகள் குறித்த அனைத்து விவரங்களும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்ப டும் போது மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மட்டும் விலக்கு அளிப்பது தேவையற்ற ஒன்று என ஐந்தாவ துத் தூண் அமைப்பின் தலைவர் விஜய்ஆனந்த் தெரி வித்தார்.

மேலும், தமிழகத்தில் செயல்படும் பல்வேறு ஊழல் எதிர்ப்பு இயக்கங்களை ஒருங்கிணைத்து இந்த அரசாணையை நீக்கக் கோரி போராடுவோம் என்றார் அவர்.

லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளைமூடிமறைக்க அரசாணை?

சென்னை, செப். 20: லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கு தகவல் பெறும் உரிமைச் சட் டம் பொருந்தாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் அண்மைக்காலமாக அதிக ரித்து வரும் முறைகேடுகள் தொடர்பான புகார்களுக்கு பதில் அளிப்பதை தவிர்ப்பதற் காகவே இந்த அரசாணை பிறப் பிக்கப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

அரசு நிர்வாகத்தில் வெளிப்ப டைத் தன்மையை உறுதி செய் வது மற்றும் லஞ்ச ஊழலை ஒழிக்க உதவும் வகையில் தக வல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு நிறைவேற்றப் பட்டது.

2-வது சுதந்திரம்:

அரசின் நிர்வாக நடைமுறையை மக்கள் தெரிந்து கொள்வதைத் தடுத்த இரும்புத்திரையை விலக்கும் வகையில் இந்தச் சட்டம் அமைந்திருந்தது.

பல்வேறு துறைகளில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட பல பிரச்னைகளுக்கு இதனால் தீர்வு ஏற்பட்டதுஇந்தச் சட்டத்தின் 24 (2) வது பிரிவின்படி, நாட்டின் பாது காப்பு தொடர்பான தகவல்க ளும், 8 (1) (எச்) பிரிவின்படி விசாரணையில் குற்ற வழக்குக ளின் முக்கிய தகவல்களும் அளிக்க முடியாது என்று விலக்கு தரப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் விசாரணை அமைப்புகளின் சுதந்திரத் தன்மையை உறுதி செய்வதற்காக இந்த விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

லஞ்ச ஒழிப்புத்துறை:

மற்ற துறைகளில் லஞ்ச ஊழலை ஒழிப்பதற்காக தனி அதிகாரத் துடன் லஞ்ச ஒழிப்புத்துறை யும், மாநில கண்காணிப்பு ஆணையமும் ஏற்படுத்தப்பட் டனபுகாரின் உண்மைத் தன்மை யைப் பொறுத்து அரசின் எந்த நிலையில் இருப்பவரானாலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவ தற்கான அதிகாரம் இந்தத் துறைக்கு அளிக்கப்பட்டுள் ளது.

ஆனால், அண்மைக்கா லமாக லஞ்ச ஒழிப்புத் துறை யில் முறைகேடுகள் அதிகரித் துள்ளதாக புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.

கடிதம் வாங்க மறுப்பதா?

இந்தத் துறையின் செயல்பாடு கள் குறித்து விவரங்களை தெரி விக்குமாறு, சில மாதங்களுக்கு முன்னர் தகவல் பெறும் உரி மைச் சட்டத்தின் கீழ் அனுப்பப் பட்ட கடிதத்தை துறையில் பொதுத் தகவல் அதிகாரியாக உள்ள மத்திய சரக எஸ்.பிவாங்க மறுத்தார்.

மாநில தகவல் ஆணையம், லஞ்ச ஒழிப்புத் துறையின் உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு இது தொடர்பாகப் புகார் தெரி விக்கப்பட்டது. இந்தப் பிரச்னையின் தீவி ரத்தை உணர்ந்த அப்போதைய தலைமைச் செயலர் எல்.கேதிரிபாதி, தகவல் பெறும் உரி மைச் சட்டத்தின் கீழ் வரும் கடி தங்களை வாங்க அதிகாரிகள் மறுக்கக்கூடாது, அவ்வாறு மறுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று குறிப்பிட்டு சுற்ற றிக்கை அனுப்பினார்.

கடந்த சில மாதங்களாக அமைச்சர்கள், அதிகாரிகள் மீது பல்வேறு தரப்பில் இருந்து ஊழல் புகார்கள் வருவது அதிக ரித்து வருவதாகக் கூறப்படுகி றது.

அதிகாரிகள் மீதான ஏராள மான வழக்குகள் அந்தந்த துறையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் நிலுவையில் கிடக் கின்றனபணியாளர் மற்றும் நிர்வாகத் துறை சார்பில் அமைக்கப் பட்ட குழுவினர், முதல்வர் அலுவலகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட முக்கிய துறை அலு வலகங்களை இந்த சட்டத்தில் இருந்து விடுவிப்பது குறித்து ஆய்வு செய்ததாகவும், இதில் தற்போதைக்கு லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் கண்காணிப்பு ஆணையத்தை மட்டும் முதலில் விடுவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகி றது.

எதிர்ப்பு:

சட்டத்தில் குறிப்பி டப்பட்டுள்ள விதிமுறைக ளுக்கு உட்பட்டு உரிய
தகவல்களைப் பெற மக்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் விதமாக இந்த அரசாணை அமைந்துள்ளது என ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு இயக்கமான ஐந் தாவது தூண் அமைப்பின் பொதுச் செயலாளர் ரத்தின பாண்டியன் தெரிவித்தார்.

மக்கள்நலனுக்கு விரோத மான இந்த ஆணையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே அனைத் துத் தரப்பினரின் கருத்து என் றார் அவர்.

வியாழன், 4 செப்டம்பர், 2008

கட்டட விதி மீறல்: தமிழக அரசின் நிலை என்ன?

சென்னை, செப். 3: விதி மீறல் கட்டடங்கள் விவகாரத்தில் தமி ழக அரசு எடுத்துவரும் நிலைப் பாடு முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாக பல்வேறு தரப்பின ரும் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட் டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதி மீறல்களை அங்கீகரிக்கும் அர சின் வரன்முறைப்படுத்தும் திட் டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விதி களை மீறி கட்டப்பட்ட சுமார் 30 ஆயிரம் கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டது.

இது தொடர்பான புகார்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணிக ளுக்காக 30 உறுப்பினர் கொண்ட கண்காணிப்புக்கு ழுவை நீதிமன்றம் அமைத்தது.

உச்ச நீதிமன்றத்தில்...:

எனி னும் மக்கள் நலன்கருதி அளிக் கப்பட்ட நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நிறைவேற்றாமல், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசின் இந்த முயற்சியை கடுமை யாகச் சாடிய உச்ச நீதிமன்ற நீதிப திகள் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தனர்.

அவசரச் சட்டம்:

இதையடுத்து வேறு வழி இல்லாமல் கட்ட டத்தை இடிக்க வேண்டிய தமி ழக அரசு, உயர் நீதிமன்றத் தீர்ப் பின்படி விதிமீறல் கட்டடங் களை இடிப்பது தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து, விதி மீறலுக்கு ஆதர வாக அவசரச் சட்டத்தை 2007 ஜூலையில் பிறப்பித்தது.

இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவ சரச் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. ஆனால் விதி மீறல் கட்டடங்களை பாதுகாப்ப தில் விடாப்பிடியாக இருந்த தமி ழக அரசு இதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு, தற்போது நிலுவையில் உள்ள நிலையில் அவசரச் சட் டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக் கப்பட்டுள்ளது.

மேலும் கட்டட விதிகளை மாற்றி அமைப்பதற்காக 1971-ம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊர மைப்புச் சட்டத்தை திருத்துவ தற்கு உரிய பரிந்துரைகளை அளிக்குமாறு நீதிபதி மோகன் தலைமையில் ஒரு குழுவை தமி ழக அரசு அமைத்தது.

கட்டுமான வல்லுநர்களிட மும், நகரமைப்பு வல்லுநர்களிட மும் கருத்துக் கேட்க வேண்டிய நீதிபதி மோகன் குழு, தியாகராய நகர் உஸ்மான் சாலை வணிக வளாகங்களின் உரிமையாளர் களை அண்மையில் அழைத்து அவர்களது கருத்துகளை கேட் டுப் பெற்றுள்ளது.

இருப்பினும் தற்போது விதி களை மீறி கட்டப்பட்டுள்ள கட் டடங்களை இடிப்பது என்பது தவிர்க்க முடியாதது என்பதே அந்தக் குழுவில் இடம் பெற்றுள் ளவர்களின் பொதுவான கருத் தாக இருந்து வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் விபத்து:

இந்த நிலையில், காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத் தில் திங்கள்கிழமை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கடை யின் ஊழியர்கள் இருவர் இறந் துள்ளனர். இது தொடர்பாக கடையின் மேலாளரும், கண்கா ணிப்பாளரும் கைது செய்யப்பட் டுள்ளனர்.இருப்பினும், விதி மீறலுக்குக் காரணமான உண்மையான குற்ற வாளிகள் இதுவரை கைது செய் யப்படவில்லை.

தற்போதைய சூழலில் இந்தக் கட்டடத்தை இடிப்பது தவிர்க்க முடியாதது.

அரசின் குழப்பம்:

இந்த நிலை யில் சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து குறித்து கருத்துத் தெரி வித்த முதல்வர் கருணாநிதி, ""விதி முறைகளின்படி கட்டப்பட்டி ருந்தால் இத்தகைய பெரும் விபத்தை தவிர்த்திருக்கலாம். நீதி மன்றங்களில் தடை பெறலாம், விதிமுறைகளை மீறி செயல்பட லாம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை அடுக்குமாடிகள் மட்டு மல்ல சாதாரணக் கட்டடத்தின் பாதுகாப்பைக்கூட உறுதிப்ப டுத்த முடியாது என்பதற்கு இந் தச் சம்பவம் ஓர் உதாரணம்.'' என கூறியுள்ளார்.

விபத்துக்குக் காரணம் விதி மீறல்தான் என கருத்துத் தெரி விக்கும் முதல்வர் கருணாநிதி, இதே விதிமீறல் கட்டடங்களைப் பாதுகாக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பித்தது ஏன் என பல்வேறு தன்னார்வ அமைப்பி னரும், கட்டுமான வல்லுநர்க ளும் கேள்வி எழுப்புகின்றனர்.

தீர்வு என்ன?

விதி மீறல் கட்ட டங்களுக்கு ஆதரவாக உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடு வதை விடுத்து நேர்மையான முறையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்ப டுத்த வேண்டும்.

இவ்வாறு முன்னர் ஒரு விதமா கவும், விபத்து ஏற்பட்ட சமயத் தில் ஒரு விதமாகவும், கருத்துத் தெரிவிப்பதை விடுத்து, விதி மீறல் கட்டடங்களை அடுத்த கட்டடத்துக்கும், அங்கு வந்து செல்லும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு இடிப்ப தற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு முன்வர வேண்டும் என்பதே தற்போதைய தேவை.

திங்கள், 1 செப்டம்பர், 2008

தலைமைச் செயலகத்தில் நிம்மதிப் பெருமூச்சு!

சென்னை, ஆக. 31: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த எல்.கே.திரிபாதி ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெற்றதை அடுத்து, பல்வேறு துறை அமைச் சர்களும், உயர் அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சுவிடத் தொடங்கியுள்ளனர்.

1971-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எல்.கே. திரிபாதி 1972-ம் ஆண்டு நில வருவாய்த்துறை அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார்.தமிழக அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் பணி புரிந்திருந்த அவர் 2005-ம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றவுடன், முதல்வர் பதவியேற்ற நாளிலேயே தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

முதல்வர் கருணாநிதியிடம் தனக்கு இருந்த நெருக்கம் மூலம் அரசின் அதி கார மையங்களாக இருந்த மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, முதல்வரின் துணை வியார் ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோரிடம் நெருங்கிய தொடர்பு கொண் டிருந்தார் திரிபாதி.

இதனால், அரசு நிர்வாகத்தில் இவர்கள் தெரிவிக்கும் அனைத்து விருப்பங்களும் திரிபாதி மூலமே மற்ற அமைச்சர்களுக்கும், அதிகா ரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு அந்தந்த பணிகள் முடிக்கப்பட்டன.

தலைமைச் செயலர் என்ற முறையில் அனைத்துத் துறைகளின் நிர்வாக நடவ டிக்கைகளில் திரிபாதி அளவுக்கு அதிகமாக தலையிட்டதாகவும், இதனால் அமைச்சர்களும், பல்வேறு அதிகாரிகளும் சுயமாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு துறைகளில் பல்வேறு விதங்களில் திரிபாதியின் தலையீடு இருந்தாலும், குறிப்பாக, சி.எம்.டி.ஏ., நகர் மற்றும் ஊர மைப்புத் துறைகளில் இது அதிகமாகவே இருந்துள்ளது. சென்னைக்கு அருகே துணை நகரங்கள் அமைப்பது குறித்த அரசின் அறிவிப்புக்கு மூலகார ணமாக இருந்த திரிபாதி, அத் திட்டம் கைவிடப்படுவதாக அரசு அறிவித்த பிற கும் தான் பங்கேற்ற கூட்டங்களில் துணை நகரங்களின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

தலையீடு:

இது மட்டுமின்றி, புதிய குடியிருப்புத் திட்டங்கள், பெரிய அள விலான மனைப் பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள் ஆகியவற் றுக்கு அனுமதி அளிப்பதற்கான நிர்வாக நடைமுறைகளில் திரிபாதியின் தலை யீடு சற்று அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தங்களுக்குள் குமுறிக் கொண்டிருந்தனர்.

உதாரணமாக, சென்னை அமைந்தகரையில் கட்டப்படும் ஒரு மல்டி பிளக்ஸ் கட்டடத்தில் இருந்த சில விதிமீறல்கள் இருந்தன. இவற்றை சரி செய் தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறிவந் தனராம்.

ஆனால், திரிபாதியின் தலையீட்டால் அனுமதி அளிக்கப்பட்டது என்றும் சி.எம்.டி.ஏ. அலுவலகம் தரப்பில் கூறப்படுகிறது.

யாருக்காக இந்த நில உச்சவரம்பு சலுகை?

சென்னை, ஆக. 31: தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங் களை வரன்முறைப்படுத்தி கிரை யம் பெற்றவர்களுக்கே அளிப் பது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆளும்கட்சியி னர் உள்ளிட்ட அரசியல் பிரமு கர்கள் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நில உரிமை காரணமாக சமு தாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு களை போக்கவும், நிலச் சுவான் தார்களிடம் முடங்கிக்கிடக்கும் ஏராளமான நிலங்களை விவசா யிகள் உள்ளிட்ட ஏழை மக்க ளுக்கு பிரித்தளிக்கவும் 1961-ம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத் தச் சட்டம் (உச்சவரம்பு நிர்ண யத்துக்காக) கொண்டுவரப்பட் டது.

இருப்பினும், 1960-களின் பிற்ப குதியில் திமுக ஆட்சிக்கு வந்தவு டன் இந்த சட்டத்தில் 1970, 1972 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு உச்சவரம்புக்குட் பட்டு அனுமதிக்கப்படும் நிலத் தின் அளவு குறைக்கப்பட்டது.

இந்த சட்டத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு நிலச்சுவான்தார்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் கள் கையகப்படுத்தப்பட்டன.இதில், மத்திய அரசின் 1976-ம் ஆண்டு நகர்ப்புற நில உச்சவரம் புச் சட்டத்தை பின்பற்றி 1978-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற் றப்பட்டது.

முன்தேதியிட்டு 1976-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத் தப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் 2,381 ஹெக்டேர் நிலம் கையகப் படுத்தப்பட்டது. இதில் 109 ஹெக்டேர் நிலங்கள் தொடர் பான வழக்குகள் நீதிமன்றங்க ளில் நிலுவையில் உள்ளன.

அரசின் கொள்கை விளக்க குறிப்புகளில் தெரிவிக்கப்பட் டுள்ள விவரங்களின் அடிப்படை யில், 343 ஹெக்டேர் நிலம் பல் வேறு அரசுத் துறைகளின் திட் டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள் ளது. 55 ஹெக்டேர் நிலங்கள் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் உள் ளன.

538 ஹெக்டேர் நிலம் அரசி யல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல் வேறு தரப்பினரால் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளன. 1,336 ஹெக் டேர் நிலம் உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக வைக் கப்பட்டன.

1999-ம் ஆண்டு திமுக ஆட்சி யில், 1978-ம் நகர்ப்புற நில உச்சவ ரம்பு சட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட திருத்தத்தின் மூலம் 1266.68 ஹெக்டேர் நிலம் அதன் உரிமையாளர்களுக்கே திருப்பி அளிக்கப்பட்டன.

அமைச்சரவை முடிவு:

சனிக் கிழமை நடைபெற்ற அமைச்ச ரவை கூட்டத்தில், 1978-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ் நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல் சட் டத்தின்படி கையகப்படுத்தப் பட்டு மேல் மிகை வெற்று நிலம் என்று அறிவிக்கப்பட்ட நிலங் களை கிரையம் பெற்றவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு வரன்முறை செய்துவிடலாம் என முடிவெ டுக்கப்பட்டுள்ளது.

யாருக்காக?

உச்சவரம்பு சட் டப்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் கிரையம் செய்யப்பட் டுள்ளது என அரசு கூறியுள்ளது.இவ்வாறு கிரையம் பெறுவது செல்லாது என்றும் அப்படி கிரை யம் பெற்றவர் அதில் உரிமை கோர முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் 2000-ம் ஆண்டு ஒரு வழக்கில் தீர்ப்பளித் துள்ளது.

ஆனால், சட்டவிரோதமாக நடைபெற்றுள்ள கிரையங்களை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசின் தற்போதைய முடிவு உள் ளது. இவ்வாறு சட்டவிரோத மாக யார், யார் அரசு நிலத்தை கிரையம் செய்தார்கள் என கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை உரியவர் களுக்கு ஒதுக்க வேண்டிய அரசு கிரையத்தை அங்கீகரிப்பது ஏன்?

நிலங்களை தெரியாமல் வாங்கி அதில் வீடு கட்டி குடியி ருக்கும் நடுத்தர மக்களின் நலன் கருதி முடிவெடுப்பதாக கூறுவ தென்றால், ஒன்றரை கிரவுண்டு வரையிலான நிலங்களை மட்டும் மதிப்புத் தொகை கூட வாங்கா மல் வரன்முறை செய்து தரலாம்.

நிலத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் நகர்ப்புறத்தில் நடுத்தர மக்கள் அரை கிரவுண்டு நிலத்தை கூட வாங்க முடியாத நிலையில் ஒன்றரை கிரவுண்டு நிலம் வைத்திருப்பவர்களை நடுத் தர பிரிவு மக்களாக அரசு கருது வது வியப்பாக உள்ளது.

ஒன்றரை கிரவுண்டுக்கு மேல் மூன்று கிரவுண்டு வரையும் அதற்கு மேலும் பரப்பளவு கொண்ட (அரசு கையகப்படுத்தி வைத்துள்ள) நிலங்களை பெரும் பாலும் அரசியல் பிரமுகர்களே கிரையம் செய்து வைத்திருக்கின் றனர்.

இதனால், நில உச்சவரம்பு சட் டத்தின் அடிப்படை அம்சத் துக்கு எதிராக நடப்பவர்களை, அங்கீகரித்து அந்த நிலங்களை அவர்களுக்கே வரன்முறைப்ப டுத்தி அளிக்க வேண்டிய அவசர அவசியம் என்ன என்பதே அனைத்து தரப்பினரிடம் தற் போது எழுந்துள்ள கேள்வி.

அரசியல் பின்னணி கொண்ட பலர் கல்வி நிறுவனம், அறக்கட் டளை, தொழிற்சாலை உள்ளிட் டவை பெயரில் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலங்களை அவர்க ளுக்கே அளிப்பதற்காகவே அரசு இவ்வாறு முடிவெடுத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அடுக்குமா டிக் கட்டடங்களை ஏழைகளின் நலனுக்காக என்று கூறி வரன்மு றைபடுத்திய விவகாரம் நீதிமன் றத்தில் நிலுவையில் உள்ள நிலை யில் இந்த அடுத்த வரன்முறை தேவையா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.