தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளின் விலை ஒரே வாரத்தில் டன்னுக்கு ரூ. 10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.திடீரென ஏற்பட்ட இந்த விலை உயர்வு அதிர்ச்சி அளிப்பதாக விற்பனையாளர்கள் மற்றும் கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.
செயில் (எஸ்.ஏ.ஐ.எல்.), விசாக், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இரும்பு கம்பிகள் வார்க்கப்பட்டு கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பப்படுகின்றன. அண்மைக்காலமாக சிறிய வார்ப்பாலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
விலை உயர்வு:
கடந்த 2007}ம் ஆண்டின் இறுதியில் ஒரு டன் ரூ. 25 ஆயிரமாக இருந்த கம்பிகளின் விலை 2008}ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு டன் ரூ. 40 ஆயிரம் வரை அதிகரித்தது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டுமானப்பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
2008}ம் ஆண்டின் மத்தியில் அதிகபட்சமாக ஒரு டன் ரூ. 48 ஆயிரம் வரை உயர்ந்தது. பல்வேறு தரப்பினரின் வற்புறுத்தலை ஏற்று இரும்பு இறக்குமதிக்கான வரி விகிதங்களில் மத்திய அரசு சில மாற்றங்களை செய்தது. இருப்பினும் இந்த முயற்சிகள் உரிய பலனை அளிக்கவில்லை.ஏற் றுமதி தொடர்பாகவும் மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
இதனையடுத்து கம்பி விலை படிப்படியாக குறையத் தொடங்கியது.படிப்படியாக குறைந்த கம்பி விலை கடந்த வாரம் டன்னுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 28 ஆயிரம் வரை இருந்தது.இந்த நிலையில், தற்போது ஒரு டன் கம்பி விலை ரூ. 38 ஆயிரமாக அதிகரித்தது.
பெரிய நிறுவனங்கள் தங்களது கம்பிகளின் விலையில் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை அதிகரித்துள்ளன.
கார ணம் என்ன?
தமிழகத்தில் தற்போதைய நிலையில் சுமார் 80 தனியார் வார்ப்பாலைகள் செயல்படுகின்றன. தமிழகத்தின் கம்பி தேவையில் 70 சதவீதம் இந்த ஆலைகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.
கச்சா இரும்பு தாதுவை நிலக்கரியுடன் சேர்த்து உருக்கி கம்பிகளாக வார்க்கும் வசதி பெரிய ஆலைகளில் மட்டும் உள்ளது. இத்தகைய வசதி இல்லாத சிறிய ஆலைகள் கச்சா இரும்பை நிலக்கரியுடன் சேர்த்து உருக்கும் பணியை எளிதாக்க "ஸ்பான்ச் அயன்' என்ற பொருளை பயன்படுத்த வேண்டும்.
ஆந்திரம்} கர்நாடக எல்லையில் உள்ள ரெய்ச்சூர், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் மட்டுமே ஸ்பான்ச் அயன் கிடைக்கிறது.தெலங் கானா பிரச்னை காரணமாக ஸ்பான்ச் அயன் வரத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சிறிய வார்ப்பாலைகள் தரப்பில் கூறப்படுகிறது.
அரசு தலையிடுமா?
""கம்பி விலையேற்றத்துக்கு ஆலைகள் தரப்பில் உறுதியான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதால் நுகர்வோரிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது'' என திருச்சி டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாகி வி. முருகன் தெரிவித்தார்.
பெரிய ஆலைகளின் விலை உயர்வை காரணம் காட்டி சிறிய ஆலைகள் செய்திருக்கும் இந்த திடீர் விலை உயர்வு செயற்கையானதாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கட்டுமானத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.