விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில், ஐகோர்ட் உத்தரவு காரணமாக, தன் மவுனத்தை
கலைக்க வேண்டிய கட்டாய சூழல், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த
வழக்கில், அரசு வெளிப்படுத்தும் நிலைப்பாடு தான், சென்னையில் உள்ள
ஆயிரக்கணக்கான விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கைக்கு அடிப்படையாக
அமையும்.
சென்னை தி.நகரில், விதிமீறல் புகார் காரணமாக, சுப்ரீம் கோர்ட்
உத்தரவுப்படி, 25 வணிக வளாகங்களுக்கு வைக்கப்பட்ட சீல், கடந்த 10ம் தேதி,
தற்காலிகமாக அகற்றப்பட்டது. இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு,
சென்னை ஐகோர்ட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு, கடந்த
திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "கடைகள் மீது எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை, தமிழக அரசும்,
சி.எம்.டி.ஏ.,வும், வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என,
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசின் நிலை என்ன? விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான வழக்கில், கடந்த ஓராண்டு காலமாக, தன் நிலைப்பாடு குறித்து தமிழக அரசு சார்பில், எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யபடவில்லை என்பது, விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில், 2006ல், ஐகோர்ட் தீர்ப்பளித்தபோது, ஆட்சிப் பொறுப்பில் தி.மு.க., இருந்தது. இதனால், விதிமீறல் கட்டடங்களுக்கு ஆதரவான நிலையை, தமிழக அரசு எடுத்தது. இதற்காக, முதலில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பின், 2007ல், அவசர சட்டம் கொண்டு வந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு, இந்த சட்டத்தை நீட்டிப்பும் செய்தது. இவ்வாறு, கடந்த ஐந்தாண்டு காலமாக, விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கையை, முந்தைய தி.மு.க., அரசு தடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம், அ.தி.மு.க., அரசு பதவியேற்றது. இதன்பின், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுகள், கண்காணிப்புக்குழு பிறப்பித்த உத்தரவுகளை தடுக்கும் வகையில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இதில் தங்களது நிலைப்பாடு குறித்து, கோர்ட்டில் எவ்வித பதில் மனுவையும், தமிழக அரசு தாக்கல் செய்யாமல் உள்ளது. இந்நிலையில், ஐகோர்ட் அண்மையில் பிறப்பித்த உத்தரவின் மூலம், இந்த வழக்கில், தன் மவுனத்தை கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
என்ன நடக்கும்? இப்போதைய சூழலில், கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய பதில் மனுவுக்கான குறிப்புகளை இறுதி செய்வதற்கான பணிகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், ஐகோர்ட் மற்றும் கண்காணிப்புக்குழு உத்தரவுகளை நிறைவேற்ற, அரசின் சார்பு நிறுவனங்களான, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி ஆகியவை எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகவே, அரசின் பதில் மனு இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும், விதிமீறல் கட்டடங்களை கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அதில் தெரிய வந்த விவரங்கள், பதில் மனுவில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
சி.எம்.டி.ஏ., என்ன செய்யும்? கோர்ட் உத்தரவுப்படி, சி.எம்.டி.ஏ., சார்பில், வரும் 30ம் தேதி, தாக்கல் செய்வதற்கான பதில் மனுவை இறுதி செய்யும் பணிகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தி.நகரில், கண்காணிப்புக்குழு உத்தரவின்படி நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையில், குறிப்பிடப்பட்ட, 64 வணிக வளாகங்களில் உள்ள விதிமீறல்கள் குறித்த விவர அறிக்கை, அதன் அடிப்படையில் கட்டடங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள், அதன்பின் சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த விவரங்கள், இந்த பதில் மனுவில் சேர்க்கப்படுகின்றன. விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக, ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவுக்கும், இதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறினர்.
"அதிகாரிகள் தான் பொறுப்பு': தி.நகரில், விதிமீறல் கட்டடங்கள் குறித்த ஆய்வறிக்கையில், கட்டடங்களின் எண், நிலத்தின் பரப்பளவு, கட்டடத்தின் பரப்பளவு போன்ற தகவல்களில் பிழைகள் இருப்பதாக, வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் மேலும் கூறுகையில், ""இதன் காரணமாக, சில கட்டடங்கள், மாற்றி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட சில கட்டடங்களுக்கு, ஏற்கனவே ஆறு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், அந்த கட்டடத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளே, இத்தவறுகளுக்கு காரணம்'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக