ஊழல் வழக்குகளில் பூர்வாங்க விசாரணையில், முழு விவரங்கள்
தெரியவந்தாலும், விரிவான விசாரணைக்கு பிறகே, வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட
நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஊழல் வழக்குகளில்
சிக்கியவர்கள் எளிதில் தப்பிவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க
லஞ்ச ஒழிப்புத் துறை உருவாக்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகளை
கொண்டிருந்தாலும், இப்பிரிவானது பணியாளர் மற்றும் நிர்வாக
சீர்திருத்தத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஊழல் புகார்கள் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்துவதற்கான அளவுகோல் குறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் இருந்து, கடந்த மாதம் 22ம் தேதி அனைத்துத் துறை செயலர்கள், துறை தலைமை அதிகாரிகள், தலைமை செயலக அனைத்துத் துறை தலைமை அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடிதத்தின் விவரம்
ஊழல் புகார்கள் தொடர்பாக, பூர்வாங்க மற்றும் விரிவான விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் உத்தரவிடுவது தொடர்பாக, இதுவரை எந்த அளவுகோலும் இல்லை. இதை கருத்தில் கொண்டு, இத்தகைய விசாரணைகளை எப்படி மேற்கொள்வது என்பதற்கான அளவுகோல்கள் பின்வருமாறு நிர்ணயிக்கப்படுகின்றன.இதில் பூர்வாங்க விசாரணையை எப்படி மேற்கொள்வது என்பது தொடர்பாக, ஐந்து அடிப்படை விதிமுறைகளும், விரிவான விசாரணை தொடர்பாக, ஆறு விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.இதன்படி, ஒரு நேர்மையான அதிகாரி மீது யாராவது ஊழல் புகார் தெரிவித்தால், அது தொடர்பாக அந்த அதிகாரியின் நற்பெயருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அவரது நடத்தை குறித்து, கடிதம் உள்ளிட்ட எந்த ஆவணத்திலும் அவரது பெயரை குறிப்பிடாமல் ரகசியமாக விசாரிக்க வேண்டும். அந்த அதிகாரியின் அந்தஸ்து மற்றும் புகாரில், அவரது பங்கு ஆகியவற்றை விசாரணையின் போது கருத்தில் கொள்ள வேண்டும்.அடுத்தகட்டமாக, பூர்வாங்க விசாரணைக்கு முந்தைய நிலையில், புகார் கூறப்பட்ட அதிகாரியின் செயல்பாடுகள் குறித்து தலைமை அதிகாரியின் விருப்பத்தின் அடிப்படையில் மிக ரகசிய விசாரணை நடத்தலாம்.
விரிவான விசாரணை
ஒரு குறிப்பிட்ட அதிகாரி மீது வந்த புகாரின் அடிப்படையில் பூர்வாங்க விசாரணையின் போது, அந்த வழக்கை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைத்தாலும், விரிவான விசாரணை நடத்திய பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.சொத்து குவிப்பு தொடர்பான புகார்கள் தொடர்பான பூர்வாங்க விசாரணையில், அந்த நபர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்தது உறுதியானாலும், விரிவான விசாரணை நடத்தி தான் உரிய ஆவணங்களை திரட்ட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்பு என்ன?
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பூர்வாங்க விசாரணையில் முக்கிய தடயங்கள் சிக்கும் நிலையில், அவற்றை வைத்து வழக்கு பதிவு செய்து, அந்த நபரின் வீட்டை சோதனையிட்டால் வழக்குக்குத் தேவையான பெருமளவு ஆவணங்களை கைபற்றலாம்.ஆனால், இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, பூர்வாங்க விசாரணையில் முக்கிய தடயங்கள் குறித்து தெரியவந்தால், வழக்கு பதிவு செய்து அவற்றை கைபற்றாமல், விரிவான விசாரணை நடத்தப்பட்டால் ஏற்படும் காலதாமதம் தடயங்களை மறைக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு உதவும். இதனால், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், தடயங்களையும் கைபற்றுவதற்கான வாய்ப்புகள் பறிபோகும். இதனால், ஊழல் புகார்கள் நிரூபிக்க முடியாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க நிறைய வாய்ப்புண்டு.ஏற்கெனவே, லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணை நடைமுறைகள் தொடர்பான வழிக்காட்டி கையேடு உள்ளது. இதன்படியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் புதிய அளவுகோலுக்கான தேவை என்ன என்பது புரியவில்லை.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக