வெள்ளி, 30 மே, 2008

தேவையா இந்தத் தனியார்மயம்?

சென்னை, மே. 24: மணல் குவாரிகளை "டெண்டர்' (பொது ஏலம்) மூலம், மீண்டும் தனியாருக்கு வழங்குவது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அரசின் கட்டுப்பாட்டில் மணல் குவாரிகள் இருந்தபோது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக பாமக உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்ததாலேயே இந்த முடிவு எடுக்கப் பட்டதாக உயர் கல்வி மற்றும் கனிமத் துறை அமைச்சர் க.பொன்முடி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் 2003-ம் ஆண்டு மணல் குவாரிகள் அரசு டைமை ஆனதன் பின்னணி என்ன என்பதை நினைவுப டுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பொது விசாரணை:
ஒப்பந்த முறையில் அரசு மணல் குவாரிகள் தனியாருக்கு அளிக்கப்பட்டு வந்தபோது, ஏராள மான முறைகேடுகள் நடைபெற்றன.இது தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், மும்பை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எச். சுரேஷ், நீர்வள தொழில்நுட்ப வல்லுநர் டாக் டர் சிவனப்பன், காந்திகிராம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் என். மார்கண்டன், தமிழ்நாடு மக ளிர் ஆணையத்தின் அப்போதைய தலைவர் வி. வசந்தி தேவி, இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் முன்னாள் மூத்த இயக்குநர் கே. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தமிழகம் முழுவதும் 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொது விசாரணை நடத்தினர்.

இந்தப் பொது விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடு கள் குறித்து பொது மக்கள், விவசாய சங்க நிர்வாகிகள், சுற் றுச்சூழல் ஆர்வலர்கள், அரசின் பல்வேறு துறை அதிகாரி கள் உள்ளிட்டோர் கருத்துகள் தெரிவித்தனர்.

மணல் குவாரி ஒப்பந்தம் பெற்றவர்கள் செய்த அத்துமீறல் கள், முறைகேடுகள் குறித்து தொடரப்பட்ட வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங் கள் அளித்த தீர்ப்புகள், இது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்ததற்கான காரணங்கள் ஆகியவையும் விசாரணைக் குழுவினரின் கவ னத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

நடைமுறைக்கு வராத அரசாணைகள்:

தமிழக அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் தங்கள் நிலை குறித்த அறிக் கையை இந்தக் குழுவினரிடம் தாக்கல் செய்தனர்.டெண்டர் முறை நடைமுறையில் இருந்தபோது குவாரிக ளில் மண் எடுப்பது தொடர்பாக அரசு பிறப்பித்த எந்த ஆணையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பரிந்துரை:

இந்தக் குழுவினர், குவாரிகளைத் தனியாருக்கு குத்தகை அளிக்க வகை செய்யும் 1959-ம் ஆண்டு தமிழ்நாடு கனிம வள சலுகை சட்டம், 1957-ம் ஆண்டு தமிழ்நாடு கனிம வள ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் ஆகியவற் றில் திருத்தங்கள் செய்ய பரிந்துரை செய்தனர்.

குவாரிகள் தனியாரிடம் இருப்பது விதி மீறலுக்கும் முறை கேடுகளுக்கும் அது தொடர்பான குற்ற செயல்களுக்கும் வழி வகுப்பதாகவும், குவாரிகளைக் கண்காணித்து கட்டுப்ப டுத்தும் அதிகாரம் அரசு அமைப்பிடமே இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், குவாரிகளை கட்டுப்படுத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆற் றுப்படுகைகளில் வரைமுறையின்றி மணல் எடுக்கப்படுவ தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓர் உயர் நிலைக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்கு 26-7-2002-ல் உத்தரவிட்டது.

இதன்படி 25-9-2002-ல் அண்ணா பல்கலைக்கழக புவிய மைப்பு அறிவியல் மற்றும் பொறியியல் துறை இயக்குநர் சி.மோகன்தாஸ் தலைமையில் உயர் நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது.இந்தக் குழு 31-7-2003-ல் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது.

அதன் பிறகு காஞ்சிபுரத்தில், குவாரிகளில் நடை பெற்ற முறைகேடுகளுக்கு ஒத்துப்போகாத வட்டாட்சியர் மீது லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றது.அதையடுத்து, மோகன்தாஸ் குழுவின் அறிக்கையை 2003 அக்டோபர் 1-ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை ஆய்வு செய்து மணல் குவா ரிகளை அரசுடைமையாக்க முடிவு செய்தது.

அரசின் இந்த முடிவு 2003-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குவாரிகளில் நடைபெ றும் தவறுகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதே தற்போதைய தேவை.

அதைவிடுத்து மீண்டும் தனியாரிடமே குவாரிகளை ஒப்படைப்பது புதிய பிரச்னைகளை உருவாக்குமே தவிர தீர்வுக்கு வழி வகுக்காது என்பதே அனைத்து தரப்பினரின் கருத்து.எனவே தேவையா இந்தத் தனியார் மயம் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஓங்கி ஓலிக்கிறது.

சனி, 24 மே, 2008

ஆக்கிரமிப்புகளை அகற்ற கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

சென்னை, மே. 20: ஏரி, குளங்க ளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை அரசி யல் கட்சிகள் எதிர்ப்பது ஏன் என பல்வேறு சுற்றுச்சூழல் பாது காப்பு அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு அரசின் நடவடிக்கையை சீர்கு லைப்பதுடன், இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பையும் அவமதிப்ப தாக உள்ளன என்று அந்த அமைப்புகள் கருத்துத் தெரிவித் துள்ளன.

தமிழகத்தில் ஏரி, குளங்கள் உள் ளிட்ட நீர் நிலைகளை சட்டத்துக் குப் புறம்பாக ஆக்கிரமித்து லட் சக்கணக்கான குடியிருப்புகள் உரு வாகியுள்ளன.

நீதிமன்ற உத்தரவு:
இது தொடர்பான வழக்குகளை கடந்த ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து கடந்த நவம்பருக்குள் தக வல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது குறித்த விவர அறிக்கையை மே மாத இறுதிக் குள் முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

குறிப்பாக திருவள்ளூர் மாவட் டத்தில் காக்களூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் 2008 மே மாதத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும் என்றும் நீதிமன்றம் உத்தர விட்டது.

அரசு நடவடிக்கை:
இந்த உத்த ரவின்படியும், தமிழக அரசின் ஏரி, குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக் கிரமிப்புகள் அகற்றும் சட்டத் தின் படியும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான பணிகளை திரு வள்ளூர் மாவட்ட வருவாய்த்து றையினர் தீவிரப்படுத்தினர்.இதன்படி ஆக்கிரமிப்பாளர்க ளுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையால் வீடுகளை இழப்பவர்களுக்கு வழங்குவதற் காக மாற்று இடத்தையும் வரு வாய்த்துறையின தேர்வு செய்த னர். இதன் பின்னரே தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக் கைகள் தொடங்கப்பட்டன.

தலைவர்கள் தலையீடு:
இந்த நிலையில் திட்டமிட்டபடி ஆக்கி ரமிப்புகளை அகற்றும் நடவடிக் கைகளுக்கு ஆக்கிரமிப்பாளர்களு டன் சேர்ந்துக் கொண்டு சில அர சியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர். மக்களுக் கும், அரசுக்கும் ஆதரவாக இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள் சிலர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தங்கள் பணிகளை பாதிப்பதாக வரு வாய்த்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அப்பாவி மக்கள் யாரும் பாதிக் கப்படாத வகையில் உரிய மாற்று இடத்தை ஏற்பாடு செய்த பின் னரே ஆக்கிரமிப்புகள் அகற்றப்ப டுகின்றன என்றும் அவர்கள் கூறி னர்.நீர் நிலை புறம்போக்கு நிலங் களை வளைத்துப் போட்டு லாபம் பார்த்த அரசியல் பின் னணி கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர்களே கட்சித் தலைவர் களை தங்களுக்கு ஆதரவாக போராட அழைத்து வருவதாக வும் வருவாய்த் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏரி, குளங்களை பாதுகாக்க நீதி மன்ற தீர்ப்பை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு மேற் கொள்ளும் நடவடிக்கையை கட் சித் தலைவர்கள் தடுப்பதும் நீதி மன்றத்தை அவமதிக்கும் செயலா கும் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

யாருக்காக இந்த நடவடிக்கை?

சென்னை, மே 20: மணல் குவாரி களை மீண்டும் தனியாருக்கு டெண்டர் மூலம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளதற்கு கட்டுமா னத் துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.டெண்டர் முறைப்படி மணல் குவாரிகளை எடுத்த தனியார் தங்க ளுக்குள் பேசி வைத்துக்கொண்டு குறைந்த விலையில் ஒப்பந்தம் எடுத்து, எவ்வித கட்டுப்பாடும் இன்றி அதிக விலைக்கு மணலை விற்று வந்தனர்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில், அதிக பரப் பில் மணல் எடுப்பது, மணல் எடுக் கப்பட்ட அளவு குறித்து தவறான தகவல் அளிப்பது போன்ற முறை கேடுகளால் பல்வேறு பிரச்னை கள் ஏற்பட்டன.இந்த முறைகேடுகளுக்கு முடிவு கட்ட 2003 அக்டோபர் 2-ம் தேதி முதல் பொதுப் பணித் துறை மூலம் அரசே குவாரிகளை நடத்த முடிவு செய்தது.அதிமுக அரசு எடுத்த நடவ டிக்கை என்றாலும், இந்த நடவ டிக்கை உள்ளிட்ட மக்களுக்கு நன்மை தரும் நடவடிக்கைகள் தொடரும் என திமுக அரசு பொறுப்பேற்ற போது முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.இதன்படி அரசு மூலமே குவாரி கள் நடத்தப்பட்டு வந்தாலும், பல் வேறு இடங்களில் குவாரிகளில் இருந்து அரசு கிடங்குகளுக்கு மணலை கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து தனியார் மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.

மேலும், அரசு நிர்ணயித்த விலை பெயரளவில் மட்டுமே இருந்தது. அரசு கிடங்குகளில் இருந்து கட்டுமானப் பணி நடை பெறும் இடம் வரையிலான போக்குவரத்து செலவு ஆகியவை சேர்த்து தற்போதைய நிலவரப் படி ஒரு லோடு மணல் ரூ.5 ஆயி ரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற் கப்பட்டு வருகிறது.இருப்பினும், 2007-08-ம் நிதி ஆண்டில் பொதுப் பணித் துறை யின் நீர்வள ஆதாரத் துறை மூலம் 130 மணல் குவாரிகளில் இருந்து மணல் விற்பனை செய்ததன் மூலம் ரூ.121 கோடி வருவாய் கிடைத்துள்ளது என சட்டப்பேர வையில் தாக்கல் செய்யப்பட்ட 2008-09-ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.

மேலும் 2003 அக்டோபர் முதல் 2006-07 நிதி ஆண்டு வரை மணல் குவாரிகள் மூலம் அரசுக்கு ரூ.446 கோடி வருவாய் கிடைத்துள்ளது.இது தனியாருக்கு குவாரிகளை ஒப்பந்தம் அளித்த காலத்தில் கிடைத்ததை விட பல மடங்கு அதிகம் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டுமானத் துறையினர்...: அரசின் கட்டுப்பாட்டில் குவாரி கள் இருந்த நிலையிலேயே ஒரு லோடு மணல் விலை ரூ.7 ஆயிரம் வரை அதிகரித்தது. தமிழகத்தில் அரிசி விலையைவிட மணல் விலை அதிகமாக உள்ளது என அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொட ரில் பங்கேற்ற சில உறுப்பினர்கள் பேசினர்.இத்தகைய நிலையில் மணல் விலையை கட்டுப்படுத்தாமல் குவாரிகளை மீண்டும் தனியார் வசமே அளிக்கும் அரசின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக பல்வேறு கட்டுமான வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மையத் தலைவர் எம்.கே.சுந்தரம்: தனியா ருக்கு நேரடியாக குவாரிகளை ஒப் பந்தம் மூலம் அளித்தால் மணல் விலை மேலும் அதிகரிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முறைகேடுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு என்றார்.அரசின் இந்த முடிவு கள்ளச் சந் தையில் மணல் விற்பனையை ஊக் குவிக்கும். உள்ளூர் அரசியல் பிர முகர்களைத் திருப்திப்படுத்தவே இது வழி வகுக்கும் என திருச்சி யைச் சேர்ந்த பிரபல கட்டுமான வல்லுநர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

தற்போதைய நிலையை மாற்று வதற்கு என்ன காரணம் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் அல்லது இந்த முடிவைக் கைவிட வேண்டும் என பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த கட்டுமான வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ள னர்.

ஞாயிறு, 11 மே, 2008

அமைச்சரவை ஒப்புதல் எப்போது?

சென்னை, மே 10: தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்காததால் சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) உருவாக்கியுள்ள 2- வது மாஸ்டர் பிளான் நடைமு றைக்கு வருவதில் தாமதம் ஏற்பட் டுள்ளது.சென்னை பெருநகரில் அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படும் வளர்ச் சியை முறைப்படுத்த 2-வது மாஸ் டர் பிளான் உருவாக்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல் வேறு இடங்களில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆயி ரத்துக்கு மேற்பட்டோரின் கருத் துகள் பெறப்பட்டன.மேலும், நகரமைப்பு வல்லுநர் கள், கட்டுமானத்துறை வல்லுநர் கள், தன்னார்வ அமைப்புகள், அரசின் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை, வீட்டுவசதித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களிடமும் கருத்துகள் பெறப்பட்டன.

இந்த கருத்துகளின் அடிப்ப டையில் 2-வது மாஸ்டர் பிளா னின் இறுதி அறிக்கை தயாரிக்கப் பட்டது. இதற்கு சி.எம்.டி.ஏ.- வின் கூட்டத்திலும் சில மாதங்க ளுக்கு முன்னர் ஒப்புதல் வழங்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அறிக்கை அரசின் ஒப்புத லுக்காக அனுப்பி வைக்கப்பட் டது.அறிக்கையில் இடம்பெற் றுள்ள சில அம்சங்கள் தொடர் பாக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்ட திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டு இறுதி அறிக்கை மீண் டும் அரசின் ஒப்புதலுக்கு அனுப் பப்பட்டது.

அமைச்சர் உறுதி:

இந்த நிலை யில் சட்டப்பேரவையில் வீட்டுவ சதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை தாக் கல் செய்யப்பட்ட போது பேசிய சி.எம்.டி.ஏ. தலைவரும் செய்தித் துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி, 2-வது மாஸ்டர் பிளான் இறுதி அறிக்கை அமைச் சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றார்.

அமைச்சரவைக் கூட்டம்:

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2- வது மாஸ்டர் பிளான் குறித்து விவாதிக்கப்பட இருந்தது.ஆனால், மாஸ்டர் பிளான் விவா தத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை என்று தெரிகிறது.பாதிப்பு என்ன? 2-வது மாஸ் டர் பிளான் நடைமுறைக்கு வரு வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் 20 ஆண்டுகளுக்கு முந்தைய கட் டட விதிகளையே மக்கள் கடை பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது என்றார் இந்திய கட்டு மான வல்லுநர் சங்கத்தின் தென் னக மைய தலைவர் எம்.கே. சுந்த ரம்.இதனால், கட்டட விதிகளை முறையாக பின்பற்ற நினைக்கும் மக்களும், கட்டுமான வல்லுநர்க ளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதிய விதிகள் நடைமுறைக்கு வராததால் மனைப்பிரிவுகள், கட் டுமான திட்டங்களுக்கு அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள் ளது என்றார் சுந்தரம்.