சனி, 24 மே, 2008

ஆக்கிரமிப்புகளை அகற்ற கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

சென்னை, மே. 20: ஏரி, குளங்க ளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை அரசி யல் கட்சிகள் எதிர்ப்பது ஏன் என பல்வேறு சுற்றுச்சூழல் பாது காப்பு அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு அரசின் நடவடிக்கையை சீர்கு லைப்பதுடன், இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பையும் அவமதிப்ப தாக உள்ளன என்று அந்த அமைப்புகள் கருத்துத் தெரிவித் துள்ளன.

தமிழகத்தில் ஏரி, குளங்கள் உள் ளிட்ட நீர் நிலைகளை சட்டத்துக் குப் புறம்பாக ஆக்கிரமித்து லட் சக்கணக்கான குடியிருப்புகள் உரு வாகியுள்ளன.

நீதிமன்ற உத்தரவு:
இது தொடர்பான வழக்குகளை கடந்த ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து கடந்த நவம்பருக்குள் தக வல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது குறித்த விவர அறிக்கையை மே மாத இறுதிக் குள் முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

குறிப்பாக திருவள்ளூர் மாவட் டத்தில் காக்களூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் 2008 மே மாதத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும் என்றும் நீதிமன்றம் உத்தர விட்டது.

அரசு நடவடிக்கை:
இந்த உத்த ரவின்படியும், தமிழக அரசின் ஏரி, குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக் கிரமிப்புகள் அகற்றும் சட்டத் தின் படியும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான பணிகளை திரு வள்ளூர் மாவட்ட வருவாய்த்து றையினர் தீவிரப்படுத்தினர்.இதன்படி ஆக்கிரமிப்பாளர்க ளுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையால் வீடுகளை இழப்பவர்களுக்கு வழங்குவதற் காக மாற்று இடத்தையும் வரு வாய்த்துறையின தேர்வு செய்த னர். இதன் பின்னரே தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக் கைகள் தொடங்கப்பட்டன.

தலைவர்கள் தலையீடு:
இந்த நிலையில் திட்டமிட்டபடி ஆக்கி ரமிப்புகளை அகற்றும் நடவடிக் கைகளுக்கு ஆக்கிரமிப்பாளர்களு டன் சேர்ந்துக் கொண்டு சில அர சியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர். மக்களுக் கும், அரசுக்கும் ஆதரவாக இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள் சிலர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தங்கள் பணிகளை பாதிப்பதாக வரு வாய்த்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அப்பாவி மக்கள் யாரும் பாதிக் கப்படாத வகையில் உரிய மாற்று இடத்தை ஏற்பாடு செய்த பின் னரே ஆக்கிரமிப்புகள் அகற்றப்ப டுகின்றன என்றும் அவர்கள் கூறி னர்.நீர் நிலை புறம்போக்கு நிலங் களை வளைத்துப் போட்டு லாபம் பார்த்த அரசியல் பின் னணி கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர்களே கட்சித் தலைவர் களை தங்களுக்கு ஆதரவாக போராட அழைத்து வருவதாக வும் வருவாய்த் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏரி, குளங்களை பாதுகாக்க நீதி மன்ற தீர்ப்பை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு மேற் கொள்ளும் நடவடிக்கையை கட் சித் தலைவர்கள் தடுப்பதும் நீதி மன்றத்தை அவமதிக்கும் செயலா கும் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக