வெள்ளி, 30 மே, 2008

தேவையா இந்தத் தனியார்மயம்?

சென்னை, மே. 24: மணல் குவாரிகளை "டெண்டர்' (பொது ஏலம்) மூலம், மீண்டும் தனியாருக்கு வழங்குவது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அரசின் கட்டுப்பாட்டில் மணல் குவாரிகள் இருந்தபோது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக பாமக உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்ததாலேயே இந்த முடிவு எடுக்கப் பட்டதாக உயர் கல்வி மற்றும் கனிமத் துறை அமைச்சர் க.பொன்முடி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் 2003-ம் ஆண்டு மணல் குவாரிகள் அரசு டைமை ஆனதன் பின்னணி என்ன என்பதை நினைவுப டுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பொது விசாரணை:
ஒப்பந்த முறையில் அரசு மணல் குவாரிகள் தனியாருக்கு அளிக்கப்பட்டு வந்தபோது, ஏராள மான முறைகேடுகள் நடைபெற்றன.இது தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், மும்பை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எச். சுரேஷ், நீர்வள தொழில்நுட்ப வல்லுநர் டாக் டர் சிவனப்பன், காந்திகிராம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் என். மார்கண்டன், தமிழ்நாடு மக ளிர் ஆணையத்தின் அப்போதைய தலைவர் வி. வசந்தி தேவி, இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் முன்னாள் மூத்த இயக்குநர் கே. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தமிழகம் முழுவதும் 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொது விசாரணை நடத்தினர்.

இந்தப் பொது விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடு கள் குறித்து பொது மக்கள், விவசாய சங்க நிர்வாகிகள், சுற் றுச்சூழல் ஆர்வலர்கள், அரசின் பல்வேறு துறை அதிகாரி கள் உள்ளிட்டோர் கருத்துகள் தெரிவித்தனர்.

மணல் குவாரி ஒப்பந்தம் பெற்றவர்கள் செய்த அத்துமீறல் கள், முறைகேடுகள் குறித்து தொடரப்பட்ட வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங் கள் அளித்த தீர்ப்புகள், இது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்ததற்கான காரணங்கள் ஆகியவையும் விசாரணைக் குழுவினரின் கவ னத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

நடைமுறைக்கு வராத அரசாணைகள்:

தமிழக அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் தங்கள் நிலை குறித்த அறிக் கையை இந்தக் குழுவினரிடம் தாக்கல் செய்தனர்.டெண்டர் முறை நடைமுறையில் இருந்தபோது குவாரிக ளில் மண் எடுப்பது தொடர்பாக அரசு பிறப்பித்த எந்த ஆணையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பரிந்துரை:

இந்தக் குழுவினர், குவாரிகளைத் தனியாருக்கு குத்தகை அளிக்க வகை செய்யும் 1959-ம் ஆண்டு தமிழ்நாடு கனிம வள சலுகை சட்டம், 1957-ம் ஆண்டு தமிழ்நாடு கனிம வள ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் ஆகியவற் றில் திருத்தங்கள் செய்ய பரிந்துரை செய்தனர்.

குவாரிகள் தனியாரிடம் இருப்பது விதி மீறலுக்கும் முறை கேடுகளுக்கும் அது தொடர்பான குற்ற செயல்களுக்கும் வழி வகுப்பதாகவும், குவாரிகளைக் கண்காணித்து கட்டுப்ப டுத்தும் அதிகாரம் அரசு அமைப்பிடமே இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், குவாரிகளை கட்டுப்படுத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆற் றுப்படுகைகளில் வரைமுறையின்றி மணல் எடுக்கப்படுவ தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓர் உயர் நிலைக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்கு 26-7-2002-ல் உத்தரவிட்டது.

இதன்படி 25-9-2002-ல் அண்ணா பல்கலைக்கழக புவிய மைப்பு அறிவியல் மற்றும் பொறியியல் துறை இயக்குநர் சி.மோகன்தாஸ் தலைமையில் உயர் நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது.இந்தக் குழு 31-7-2003-ல் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது.

அதன் பிறகு காஞ்சிபுரத்தில், குவாரிகளில் நடை பெற்ற முறைகேடுகளுக்கு ஒத்துப்போகாத வட்டாட்சியர் மீது லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றது.அதையடுத்து, மோகன்தாஸ் குழுவின் அறிக்கையை 2003 அக்டோபர் 1-ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை ஆய்வு செய்து மணல் குவா ரிகளை அரசுடைமையாக்க முடிவு செய்தது.

அரசின் இந்த முடிவு 2003-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குவாரிகளில் நடைபெ றும் தவறுகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதே தற்போதைய தேவை.

அதைவிடுத்து மீண்டும் தனியாரிடமே குவாரிகளை ஒப்படைப்பது புதிய பிரச்னைகளை உருவாக்குமே தவிர தீர்வுக்கு வழி வகுக்காது என்பதே அனைத்து தரப்பினரின் கருத்து.எனவே தேவையா இந்தத் தனியார் மயம் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஓங்கி ஓலிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக