சென்னை, மே 20: மணல் குவாரி களை மீண்டும் தனியாருக்கு டெண்டர் மூலம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளதற்கு கட்டுமா னத் துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.டெண்டர் முறைப்படி மணல் குவாரிகளை எடுத்த தனியார் தங்க ளுக்குள் பேசி வைத்துக்கொண்டு குறைந்த விலையில் ஒப்பந்தம் எடுத்து, எவ்வித கட்டுப்பாடும் இன்றி அதிக விலைக்கு மணலை விற்று வந்தனர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில், அதிக பரப் பில் மணல் எடுப்பது, மணல் எடுக் கப்பட்ட அளவு குறித்து தவறான தகவல் அளிப்பது போன்ற முறை கேடுகளால் பல்வேறு பிரச்னை கள் ஏற்பட்டன.இந்த முறைகேடுகளுக்கு முடிவு கட்ட 2003 அக்டோபர் 2-ம் தேதி முதல் பொதுப் பணித் துறை மூலம் அரசே குவாரிகளை நடத்த முடிவு செய்தது.அதிமுக அரசு எடுத்த நடவ டிக்கை என்றாலும், இந்த நடவ டிக்கை உள்ளிட்ட மக்களுக்கு நன்மை தரும் நடவடிக்கைகள் தொடரும் என திமுக அரசு பொறுப்பேற்ற போது முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.இதன்படி அரசு மூலமே குவாரி கள் நடத்தப்பட்டு வந்தாலும், பல் வேறு இடங்களில் குவாரிகளில் இருந்து அரசு கிடங்குகளுக்கு மணலை கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து தனியார் மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
மேலும், அரசு நிர்ணயித்த விலை பெயரளவில் மட்டுமே இருந்தது. அரசு கிடங்குகளில் இருந்து கட்டுமானப் பணி நடை பெறும் இடம் வரையிலான போக்குவரத்து செலவு ஆகியவை சேர்த்து தற்போதைய நிலவரப் படி ஒரு லோடு மணல் ரூ.5 ஆயி ரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற் கப்பட்டு வருகிறது.இருப்பினும், 2007-08-ம் நிதி ஆண்டில் பொதுப் பணித் துறை யின் நீர்வள ஆதாரத் துறை மூலம் 130 மணல் குவாரிகளில் இருந்து மணல் விற்பனை செய்ததன் மூலம் ரூ.121 கோடி வருவாய் கிடைத்துள்ளது என சட்டப்பேர வையில் தாக்கல் செய்யப்பட்ட 2008-09-ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.
மேலும் 2003 அக்டோபர் முதல் 2006-07 நிதி ஆண்டு வரை மணல் குவாரிகள் மூலம் அரசுக்கு ரூ.446 கோடி வருவாய் கிடைத்துள்ளது.இது தனியாருக்கு குவாரிகளை ஒப்பந்தம் அளித்த காலத்தில் கிடைத்ததை விட பல மடங்கு அதிகம் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டுமானத் துறையினர்...: அரசின் கட்டுப்பாட்டில் குவாரி கள் இருந்த நிலையிலேயே ஒரு லோடு மணல் விலை ரூ.7 ஆயிரம் வரை அதிகரித்தது. தமிழகத்தில் அரிசி விலையைவிட மணல் விலை அதிகமாக உள்ளது என அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொட ரில் பங்கேற்ற சில உறுப்பினர்கள் பேசினர்.இத்தகைய நிலையில் மணல் விலையை கட்டுப்படுத்தாமல் குவாரிகளை மீண்டும் தனியார் வசமே அளிக்கும் அரசின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக பல்வேறு கட்டுமான வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மையத் தலைவர் எம்.கே.சுந்தரம்: தனியா ருக்கு நேரடியாக குவாரிகளை ஒப் பந்தம் மூலம் அளித்தால் மணல் விலை மேலும் அதிகரிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முறைகேடுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு என்றார்.அரசின் இந்த முடிவு கள்ளச் சந் தையில் மணல் விற்பனையை ஊக் குவிக்கும். உள்ளூர் அரசியல் பிர முகர்களைத் திருப்திப்படுத்தவே இது வழி வகுக்கும் என திருச்சி யைச் சேர்ந்த பிரபல கட்டுமான வல்லுநர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
தற்போதைய நிலையை மாற்று வதற்கு என்ன காரணம் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் அல்லது இந்த முடிவைக் கைவிட வேண்டும் என பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த கட்டுமான வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ள னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக