திங்கள், 4 ஆகஸ்ட், 2008

குறையும் நீர்மட்டம்; தவிப்பில் விவசாயிகள்

சென்னை, ஜூலை 28: பருவமழை பாதிப்பு, நீர் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத் தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பிரச் னைகளுக்கிடையில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்னதாகவே இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், மழைப் பொழிவு பற்றாக்குறையாகவே உள்ளது. தமிழ கத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் கேரளம், கர் நாடகத்தில் இருந்து வரும் தண்ணீரையே நம்பியுள் ளன.

இந்த நிலையில் நடப்பாண்டில் கேரளத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும், கர்நாடகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் பருவமழை இயல் பைவிட வெகுவாக குறைந்துள்ளது.ஏற்கெனவே, இந்த மாநிலங்கள் தமிழகத்துக்கு திறந் துவிடும் தண்ணீரின் அளவை குறைப்பதற்கான பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பருவமழை பற்றாக்குறை தமிழ கத்தை நேரடியாக பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்கு தண்ணீர் வழங்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கர்நாடகத்தில் இருந்து கடந்த இரு மாதங்களில் 30 டி.எம்.சி. தண்ணீர் வர வேண்டிய நிலையில் 9.5 டி.எம்.சி. தண்ணீர் மட் டுமே வந்துள்ளது.

அணையில் தற்போது உள்ள தண் ணீரில் 22 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே பாசனத்துக்கு திறந்து விட முடியும். அதுவும், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மட்டுமே இவற்றை பாசனத்துக்கு பயன்ப டுத்த முடியும். இதனால், டெல்டா மாவட்டங்களில் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப் பட்டுள்ள குறுவை பயிர்களின் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அறுவடைக் காலமான செப்டம்பர் முதல் வாரம் வரை இந்த பயிர்க ளுக்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போதைய சூழல் விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியாறு, கோவி லாறு, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை, சோத்துப் பாறை, மஞ்சளாறு, பரம்பிக்குளம் ஆழியாறு அணைத் திட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலை யாறு, ஆழியாறு, திருமூர்த்தி, தூணக்கடவு, பெருவா ரிப்பள்ளம், நீராறு, மேல்ஆழியாறு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோமுகி, நெல்லை மாவட்டத் தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள் ளிட்ட முக்கிய அணைகளில் அவற்றின் முழு கொள் ளளவைவிட சுமார் 20 முதல் 40 சதவீதம் குறைவான அளவிலேயே தற்போதைய நீர்மட்டம் உள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், விழுப்புரம் உள் ளிட்ட மாவட்டங்களில் முக்கிய பாசன ஆதாரங்க ளான ஏரிகள், கண்மாய்கள் ஆகியவற்றின் நீர்மட்ட மும் நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

மின் வெட்டு காரணமாக பம்ப்செட்களை இயக்க முடியாததால், கிடைக்கும் குறைந்த அளவு நிலத்தடி நீரையும் பாசனத்துக்கு முறையாக பயன்படுத்த முடி யாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அரசு மின் வெட்டை கிராமங்களில் அதிக அளவில் அமல் படுத்துவது அவர்களின் பாதிப்பை மேலும் அதிகரிக்கும் வகையி லேயே அமைந்துள்ளது.

பருவமழை பாதிப்பு மட்டுமல்லாது, பெரும்பாலான நீர்த்தேக்கங்களும், கண்மாய்களும், பாசன கால்வாய்க ளும் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளில் பெய்த மழை நீரையும் சேமிக்க முடி யாமல் போயுள்ளது.

அதிக மழை பெய்த காலங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து கிடைத்த உபரி நீரை யும் தேக்கிவைக்கும் பணிகளில் நிர்வாகத்தின் அலட்சி யமும் இந்த நிலைக்கு முக்கிய காரணம்.பல மாவட்டங்களில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் அணைகளில் இருந்து கிடைக்கும் குறைந்தபட்ச நீரை யும் கடைமடை பகுதி விவசாயிகள் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

""தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு பருவமழை பொய்த்து போவதை மட்டும் காரணமாக கூறிக்கொண்டு இருக்காமல் குறைந்த அளவு நீரும் விவசாயிகளுக்கு உரிய முறையில் கிடைக்க தேவை யான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மேலும், மின் வெட்டு, உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்தும் விவசாயிகளை பாதுகாப்ப தன் மூலமே ஏற்கெனவே, வீழ்ச்சிப்பாதையில் உள்ள விவசாய உற்பத்தியை மீட்டெடுக்க முடியும்'' என்று டெல்டா விவசாயிகள் குரலெழுப்புகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக