திங்கள், 4 ஆகஸ்ட், 2008

செராமிக் டைல்ஸ் வாங்கும்போது...

தனியார் கட்டுமான நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையில் தாங்கள் கட்டும் வீடுகளை வாங்க நடுத்தர வருவாய்ப் பிரிவினரை ஈர்ப்பதில் போட்டி ஏற்பட் டது.இதன் விளைவாக, பங்களாக்களில் மட்டும் இருந்து வந்த டைல்ஸ், பளிச்சென வண்ணங்களை பூசுவது, மாடு லர் சமையல் அறை கட்டமைப்புகளை அமைப்பது உள் ளிட்ட வசதிகள் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீடு களிலும் கிடைக்கும் சூழல் உருவானது.

உங்கள் வீட்டை கட்டும் பணியை ஒப்பந்ததாரரிடம் ஒப் படைத்திருந்தாலும், வீட்டிற்கு போடப்படும் டைல்ஸ்களை தேர்வு செய்ய வேண்டியது நீங்கள் தான்.எனவே, இவ்வாறு செராமிக் டைல்ஸ்களை தேர்வு செய் யும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் விவரம்:

(1) ஒரு அடிக்கு ஒரு அடி முதல் 2 அடிக்கு 2 அடி நீள அகலத்தில் உள்பட பல்வேறு அளவுகளில் டைல்ஸ்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

(2) உங்கள் வீட்டு அறையின் பரப்பளவை பொறுத்து அங்கு போடுவதற்கான டைல்ஸின் அளவை முடிவு செய்ய வேண்டும்.

(3) பெரும்பாலும் நிறுவன தயாரிப்புகளாக வரும் டைல்ஸ்களை வாங்குவது நல்லது.

(4) இணைப்புகள் தெரியக் கூடியது, இணைப்புகள் தெரியாதது என இரு வகையில் டைல்ஸ்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அழகாக இருக்கும் வகையை தேர்வு செய்வது நல்லது.

(5) மார்பிள் போன்ற வடிவங்களிலும் டைல்ஸ்கள் விற் பனைக்கு வந்துள்ளன. உங்கள் பட்ஜெட் மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ற வகையை தேர்வு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு.

(6) பொதுவாக மொசைக் போடுவதை விட டைல்ஸ்கள் போடுவதற்கும், பராமரிப்பதிலும் செலவு குறைவானது என கூறப்படுகிறது. ஒரு முறை போடப்படும் டைல்ஸ்கள் முறையாக பராமரித்தால் 10 ஆண்டுகள் வரை பயன்பாட் டில் இருக்கும்.

(7) மேலும், ஒப்பந்ததாரர் கூறும் நிதி நிலைமைக்குள் தேர்வு செய்வது என்று இல்லாமல் சற்று கூடுதல் செலவா னாலும் உங்கள் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகை டைல்ஸ்களை தேர்வு செய்வது திருப்திகரமாக இருக்கும்.

(8) வீட்டுக்கு பளிச்சென இருக்கும் என்பதற்காக அதிக வெண்மை நிற டைல்ஸ்களை தேர்வு செய்வதை விட வெண்மை குறைவான வகையை தேர்வு செய்வது பராம ரிப்புக்கு எளிதானதாக இருக்கும்.

(9) நீங்கள் தேர்வு செய்யும் வடிவமைப்பு அடுத்த சில ஆண்டுகளில் மார்க்கெட்டில் இல்லாமல் போக வாய்ப்புள் ளது. எனவே, வீட்டில் ஏதாவது பொருள் விழுந்து டைல்ஸ் உடைந்தால் அதற்கு மாற்றாக வேறு வடிவமைப்பு டைல்ûஸ அங்கு பயன்படுத்தும் நிலையைத் தவிர்க்க, தேர்வு செய்யும் போதே முன்யோசனையுடன் கூடுதலாக 10- டைல்ஸ்களை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

(10) நிறுவன தயாரிப்புகள் பெரும்பாலும் சதுர அடி ரூ.20 முதல் வகைக்கு ஏற்ப பல்வேறு விலைகளில் கிடைக் கின்றன. எனினும், விலை குறைவு என்பதற்காக நிறுவன தயாரிப்புகள் அல்லாத வகைகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக