திங்கள், 4 ஆகஸ்ட், 2008

கழுத்தை நெரிக்கும் கட்டுமானச் செலவு

பெ ட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு கட்டுமானத்துறையையும் விட்டு வைக்கவில்லை.

சிமென்ட், கம்பி, மணல், ஜல்லி போன்ற அத்தியாவசிய கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவில் ஏற்படும் சிறு மாற்றங்களும் கட்டுமானத் துறையை பாதிக்கும் சூழல் தற்போது உருவாகியுள் ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்த பட்ச கட்டுமானச் செலவு ஒரு சதுர அடிக்கு ரூ. 900-ஆக இருந்தது.சிமென்ட், கம்பி போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டு இறுதி யில் இது ரூ. 1,100-ஆக அதிகரித்தது.இது தற்போதைய விலை உயர்வு கார ணமாக ரூ. 1,500 வரை அதிகரித்துள்ளது.

சிமென்ட்:

கடந்த ஆண்டு தொடக்கத் தில் ஒரு மூட்டை ரூ. 200-ஆக இருந்த சிமென்ட் விலை ஆண்டு இறுதியில் ஒரு மூட்டை ரூ. 280 -ஆக அதிகரித்தது.இதனால் நாடு முழுவதும் கட்டுமானப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, மலிவு விலையில் சிமென்ட் விற்பனை, வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்வது உள்ளிட்ட தமிழக அரசின் சில நடவடிக் கைகள் காரணமாக சிமென்ட் விலை ஒரு மூட்டை ரூ. 235- ஆக குறைந்தது.

ஓரிரு மாதங்களில் சிமென்ட் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. இதைய டுத்து சென்னை உள்ளிட்ட தமிழக நகரங் களில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.280 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரித்து ஒரு மூட்டை விலை ரூ. 300 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.டி.எம்.டி. கம்பி விலை கடந்த 6 மாதங் களில் டன்னுக்கு ரூ. 10 ஆயிரம் அதிக ரித்துள்ளது.

மணல் விலை கடந்த 6 மாதங்களில் ஒரு லோடுக்கு ரூ. 2 ஆயிரம் வரை அதி கரித்துள்ளது.இதேபோல ஜல்லி உள்ளிட்டவற்றின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது.அதிக ஆடம்பரம் இல்லாமல் அடிப்ப டைத் தேவைகளுடன் கட்டுவது என் றால் ஒரு சதுர அடிக்கு குறைந்த பட்ச செலவு ரூ. 1,500 ஆகிறது என இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மையத் தலைவர் எம்.கே. சுந்தரம் கூறுகிறார்.

கட்டடத்தின் வரைபடத்துக்கு அனுமதி வாங்குவது, குடிநீர்- கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட விவகாரங்களை வீட்டின் உரி மையாளரே பார்த்துக் கொண்டால் மட் டுமே இந்தத் தொகையில் வீடு கட்ட முடி யும்.

கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு மட்டுமல்லாது தொழிலாளர்க ளின் ஊதியம், அரசின் அபிவிருத்திக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயர் வும் கட்டுமானச் செலவுகள் அதிகரிக்க காரணம் என்றார் சுந்தரம்.

இப்படியும் முடியும்:

கட்டுமானப் பணி யின் போது மரம் வாங்குவது, தரை போடுவது, வண்ணம் பூசுவது ஆகியவற் றில் சில சிக்கன வழிமுறைகளை கடைபி டித்தால் தற்போதைய நிலையில் ஒரு சதுர அடிக்கு 1,200க்குள் வீடு கட்ட முடியும் என்றார் கட்டுமான வல்லுநர் குமணன்.

முறையான திட்டமிடலுடன், தரத்தில் எவ்வித சமாதானமும் செய்து கொள் ளாமல் சிக்கன நடவடிக்கைகளை கடை பிடித்தால் குறைந்த செலவில் வீடுகட்ட முடியும் என்றார் அவர்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது கட்டுமானச் செலவுகள் அதிக ரித்திருப்பது சென்னையில் புதிய வீடுகள் கட்டும் பணிகளை பெருமளவில் பாதித் துள்ளது.ஒப்பந்ததாரரிடம் பணியை ஒப்படைக்காமல் நிலத்தின் உரிமையா ளரே அனைத்து பணிகளையும் கண்காணித்து கட்டுமானப் பணியை மேற்கொண்டால் சதுரஅடி ரூ.900த்தில் வீடு கட்ட முடியும். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதே தற்போதைய கேள்வி?

வி. கிருஷ்ணமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக