திங்கள், 1 செப்டம்பர், 2008

தலைமைச் செயலகத்தில் நிம்மதிப் பெருமூச்சு!

சென்னை, ஆக. 31: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த எல்.கே.திரிபாதி ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெற்றதை அடுத்து, பல்வேறு துறை அமைச் சர்களும், உயர் அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சுவிடத் தொடங்கியுள்ளனர்.

1971-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எல்.கே. திரிபாதி 1972-ம் ஆண்டு நில வருவாய்த்துறை அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார்.தமிழக அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் பணி புரிந்திருந்த அவர் 2005-ம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றவுடன், முதல்வர் பதவியேற்ற நாளிலேயே தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

முதல்வர் கருணாநிதியிடம் தனக்கு இருந்த நெருக்கம் மூலம் அரசின் அதி கார மையங்களாக இருந்த மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, முதல்வரின் துணை வியார் ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோரிடம் நெருங்கிய தொடர்பு கொண் டிருந்தார் திரிபாதி.

இதனால், அரசு நிர்வாகத்தில் இவர்கள் தெரிவிக்கும் அனைத்து விருப்பங்களும் திரிபாதி மூலமே மற்ற அமைச்சர்களுக்கும், அதிகா ரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு அந்தந்த பணிகள் முடிக்கப்பட்டன.

தலைமைச் செயலர் என்ற முறையில் அனைத்துத் துறைகளின் நிர்வாக நடவ டிக்கைகளில் திரிபாதி அளவுக்கு அதிகமாக தலையிட்டதாகவும், இதனால் அமைச்சர்களும், பல்வேறு அதிகாரிகளும் சுயமாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு துறைகளில் பல்வேறு விதங்களில் திரிபாதியின் தலையீடு இருந்தாலும், குறிப்பாக, சி.எம்.டி.ஏ., நகர் மற்றும் ஊர மைப்புத் துறைகளில் இது அதிகமாகவே இருந்துள்ளது. சென்னைக்கு அருகே துணை நகரங்கள் அமைப்பது குறித்த அரசின் அறிவிப்புக்கு மூலகார ணமாக இருந்த திரிபாதி, அத் திட்டம் கைவிடப்படுவதாக அரசு அறிவித்த பிற கும் தான் பங்கேற்ற கூட்டங்களில் துணை நகரங்களின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

தலையீடு:

இது மட்டுமின்றி, புதிய குடியிருப்புத் திட்டங்கள், பெரிய அள விலான மனைப் பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள் ஆகியவற் றுக்கு அனுமதி அளிப்பதற்கான நிர்வாக நடைமுறைகளில் திரிபாதியின் தலை யீடு சற்று அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தங்களுக்குள் குமுறிக் கொண்டிருந்தனர்.

உதாரணமாக, சென்னை அமைந்தகரையில் கட்டப்படும் ஒரு மல்டி பிளக்ஸ் கட்டடத்தில் இருந்த சில விதிமீறல்கள் இருந்தன. இவற்றை சரி செய் தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறிவந் தனராம்.

ஆனால், திரிபாதியின் தலையீட்டால் அனுமதி அளிக்கப்பட்டது என்றும் சி.எம்.டி.ஏ. அலுவலகம் தரப்பில் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக