வியாழன், 4 செப்டம்பர், 2008

கட்டட விதி மீறல்: தமிழக அரசின் நிலை என்ன?

சென்னை, செப். 3: விதி மீறல் கட்டடங்கள் விவகாரத்தில் தமி ழக அரசு எடுத்துவரும் நிலைப் பாடு முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாக பல்வேறு தரப்பின ரும் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட் டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதி மீறல்களை அங்கீகரிக்கும் அர சின் வரன்முறைப்படுத்தும் திட் டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விதி களை மீறி கட்டப்பட்ட சுமார் 30 ஆயிரம் கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டது.

இது தொடர்பான புகார்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணிக ளுக்காக 30 உறுப்பினர் கொண்ட கண்காணிப்புக்கு ழுவை நீதிமன்றம் அமைத்தது.

உச்ச நீதிமன்றத்தில்...:

எனி னும் மக்கள் நலன்கருதி அளிக் கப்பட்ட நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நிறைவேற்றாமல், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசின் இந்த முயற்சியை கடுமை யாகச் சாடிய உச்ச நீதிமன்ற நீதிப திகள் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தனர்.

அவசரச் சட்டம்:

இதையடுத்து வேறு வழி இல்லாமல் கட்ட டத்தை இடிக்க வேண்டிய தமி ழக அரசு, உயர் நீதிமன்றத் தீர்ப் பின்படி விதிமீறல் கட்டடங் களை இடிப்பது தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து, விதி மீறலுக்கு ஆதர வாக அவசரச் சட்டத்தை 2007 ஜூலையில் பிறப்பித்தது.

இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவ சரச் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. ஆனால் விதி மீறல் கட்டடங்களை பாதுகாப்ப தில் விடாப்பிடியாக இருந்த தமி ழக அரசு இதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு, தற்போது நிலுவையில் உள்ள நிலையில் அவசரச் சட் டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக் கப்பட்டுள்ளது.

மேலும் கட்டட விதிகளை மாற்றி அமைப்பதற்காக 1971-ம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊர மைப்புச் சட்டத்தை திருத்துவ தற்கு உரிய பரிந்துரைகளை அளிக்குமாறு நீதிபதி மோகன் தலைமையில் ஒரு குழுவை தமி ழக அரசு அமைத்தது.

கட்டுமான வல்லுநர்களிட மும், நகரமைப்பு வல்லுநர்களிட மும் கருத்துக் கேட்க வேண்டிய நீதிபதி மோகன் குழு, தியாகராய நகர் உஸ்மான் சாலை வணிக வளாகங்களின் உரிமையாளர் களை அண்மையில் அழைத்து அவர்களது கருத்துகளை கேட் டுப் பெற்றுள்ளது.

இருப்பினும் தற்போது விதி களை மீறி கட்டப்பட்டுள்ள கட் டடங்களை இடிப்பது என்பது தவிர்க்க முடியாதது என்பதே அந்தக் குழுவில் இடம் பெற்றுள் ளவர்களின் பொதுவான கருத் தாக இருந்து வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் விபத்து:

இந்த நிலையில், காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத் தில் திங்கள்கிழமை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கடை யின் ஊழியர்கள் இருவர் இறந் துள்ளனர். இது தொடர்பாக கடையின் மேலாளரும், கண்கா ணிப்பாளரும் கைது செய்யப்பட் டுள்ளனர்.இருப்பினும், விதி மீறலுக்குக் காரணமான உண்மையான குற்ற வாளிகள் இதுவரை கைது செய் யப்படவில்லை.

தற்போதைய சூழலில் இந்தக் கட்டடத்தை இடிப்பது தவிர்க்க முடியாதது.

அரசின் குழப்பம்:

இந்த நிலை யில் சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து குறித்து கருத்துத் தெரி வித்த முதல்வர் கருணாநிதி, ""விதி முறைகளின்படி கட்டப்பட்டி ருந்தால் இத்தகைய பெரும் விபத்தை தவிர்த்திருக்கலாம். நீதி மன்றங்களில் தடை பெறலாம், விதிமுறைகளை மீறி செயல்பட லாம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை அடுக்குமாடிகள் மட்டு மல்ல சாதாரணக் கட்டடத்தின் பாதுகாப்பைக்கூட உறுதிப்ப டுத்த முடியாது என்பதற்கு இந் தச் சம்பவம் ஓர் உதாரணம்.'' என கூறியுள்ளார்.

விபத்துக்குக் காரணம் விதி மீறல்தான் என கருத்துத் தெரி விக்கும் முதல்வர் கருணாநிதி, இதே விதிமீறல் கட்டடங்களைப் பாதுகாக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பித்தது ஏன் என பல்வேறு தன்னார்வ அமைப்பி னரும், கட்டுமான வல்லுநர்க ளும் கேள்வி எழுப்புகின்றனர்.

தீர்வு என்ன?

விதி மீறல் கட்ட டங்களுக்கு ஆதரவாக உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடு வதை விடுத்து நேர்மையான முறையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்ப டுத்த வேண்டும்.

இவ்வாறு முன்னர் ஒரு விதமா கவும், விபத்து ஏற்பட்ட சமயத் தில் ஒரு விதமாகவும், கருத்துத் தெரிவிப்பதை விடுத்து, விதி மீறல் கட்டடங்களை அடுத்த கட்டடத்துக்கும், அங்கு வந்து செல்லும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு இடிப்ப தற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு முன்வர வேண்டும் என்பதே தற்போதைய தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக