சென்னை, செப். 21: லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணைக்கு பல் வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வலுக்கிறது.
இவ்வாறு விலக்கு அளிக்கப்படுவதால் ஊழல் மற் றும் முறைகேடுகள் அதிகரிக்கும் என முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் என். விட்டல் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித் துள்ளார்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் 24(4) பிரி வின் படி மாநில அரசு எந்தெந்த துறைகளுக்கு விலக்கு அளிக்கலாம் என அதிகாரம் வழங்குகிறது.
ஆனால், இந்த பிரிவின்படி மாநில அரசு தனது அதி காரத்தை பயன்படுத்தி உளவு மற்றும், தேச பாது காப்பு அடிப்படையிலான துறைகளுக்கு மட்டுமே தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க முடியும்.
இவ்வாறு, விலக்கு அளிக்கப்பட்ட துறையில் ஊழல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக தக வல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட் பதை தடுக்க முடியாதுமேலும், உளவு, தேச பாதுகாப்பு தொடர்பானவை மற்றும் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர் பான கேள்விகளுக்கும் பதில் அளிப்பதில் இருந்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் 8 (1) (எச்) பிரி வின்படி ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஊழல் புகார்களின் மீதான புலனாய்வின் ஒரு பகு தியாக புகார் தெரிவிக்கப்படும் நபர் / அலுவலகத் தின் பணிகளை ரகசியமாக கண்காணிப்பது என்ற நிலையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறையின் உளவுப் பணிகள் அமைகின்றன.
இந்த நிலையில், தேச பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான உளவு பணிகளில் ஈடுபடாத லஞ்ச ஒழிப்புத் துறை, கண்காணிப்பு ஆணையத்துக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டு அதிக எண்ணிக்கையில் மனுக்கள் வருவதால் அது லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கமான பணிகளை பாதிக்கும் என்பதால் இந்த விலக்கு அளிக்கப்படுவதாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர் திருத்தத் துறை அரசாணையில் (எம்.எஸ். 158) குறிப் பிடப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
என். விட்டல்:
மத்திய அரசின் முன்னாள் தலைமை கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற என். விட்டல் கூறியது:
தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப் பட்ட ஆரம்ப நிலையில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தில் விசாரணையில் இருக்கும் வழக்குக ளில் தொடர்புள்ளவர்கள் தங்களைப் பற்றி யார் புகார் அளித்தது என்பது உள்ளிட்ட விவரங்களை பெறுவதற்கு இந்தச் சட்டத்தை தவறாக
பயன்படுத்தினர்.
இதற்காக மட்டுமே, விசாரணையில் இருக்கும் வழக்குகள் தொடர்பான விவரங்களை இந்த சட்டத் தின் படி அளிப்பது தடை செய்யப்பட்டது.
ஆனால், பொது மக்களுக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ள துறைகளுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால் அது அங்கு நிர்வாக வெளிப்படைத் தன்மையை குறைத்து ஊழல் அதிகரிக்க வழிவகுக்கும் என்றார் விட்டல்.
விலக்கு ஏன்?
மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு மற் றும் கண்காணிப்பு துறை, விசாரணையில் இருக்கும் வழக்குகள் நீங்கலாக மற்ற வழக்குகள் குறித்த விவரங் களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்து வருகிறது.
அந்த துறைக்கு தேவைப்ப டாத விலக்கு ஒரு மாநிலத்தில் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எந்த வகையில் தேவைப்படுகிறது என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர்.
போராட்டம்:
நீதி மன்றங்களில் விசாரணை முடிவ டைந்த வழக்குகள் குறித்த அனைத்து விவரங்களும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்ப டும் போது மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மட்டும் விலக்கு அளிப்பது தேவையற்ற ஒன்று என ஐந்தாவ துத் தூண் அமைப்பின் தலைவர் விஜய்ஆனந்த் தெரி வித்தார்.
மேலும், தமிழகத்தில் செயல்படும் பல்வேறு ஊழல் எதிர்ப்பு இயக்கங்களை ஒருங்கிணைத்து இந்த அரசாணையை நீக்கக் கோரி போராடுவோம் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக