கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய கட்டுமானத் திட்டங்களில் மட் டுமே "எலிவேஷன்ஸ்' எனப்படும் கட் டட மாதிரி வடிவமைப்புகள் பயன்பாட்டில் இருந்தன. தற்போது இந்த முறை தனி வீடுகள் கட்டுவதிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
கட்டடங்களுக்கான வரைபடங்களை உரு வாக்கிய பின்னர், இதன் அடிப்படையில் கட்ட டத்தின் வடிவமைப்பை கணினி துணையுடன் உருவாக்கலாம். நீங்கள் விரும்பிய விதத்தில், உங்கள் வீட்டின் வடிவமைப்பை உருவாக்க லாம்.
என்ன பயன்?
இவ்வாறு வடிவமைப்பை உருவாக்கும் பணிகளை அஸ்திவாரம் போடும் முன்னரே மேற்கொள்வது நல்லது.இவ்வாறு செய்வதால் அஸ்திவாரம் முதல் தளம் வரை அனைத்துப் பணிகளையும் திட்ட மிட்டபடி மேற்கொள்ள முடியும்.
வரைபடத் தில் உள்ள அம்சங்களை வடிவமைப்பில் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.உங்கள் வீட்டின் வெளிப்புற வடிவ மைப்பு, தேவையான இடங்க ளில் கூடுதல் ஜன்னல், தாழ்வா ரங்கள் அமைப்பது போன்ற பணி களை முன்கூட்டியே திட்ட மிட்டு மேற்கொள்ள இந்த வடிவமைப்பு உதவும்.
மேலும், உங்கள் கனவு இல்லத் துக்கான பெயின்டை தேர்வு செய்வது, கதவு கள் எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும், மேல் தளத்துக்கான படிக்கட்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு அம்சங்களை முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கலாம்.
குறைந்தபட்சம் ரூ. 2,500 முதல் அதிகபட் சம் ரூ. 50 ஆயிரம் வரை பல்வேறு தொகை களில் அவரவர் நிதி நிலைமைக்கு ஏற்ப வடி வமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
புகைப்படமாகவும், சி.டி. வடிவத்திலும் இந்த வடிவமைப்புகளை பெற்றுக் கொள்ள லாம்.இவ்வாறு வடிவமைப்புகளை உரு வாக்கும் போது கட்டுமான பொறி யியல் படித்தவர்களை வைத்தே கட்டடத்தை முடிக்க முடியும் என கட் டுமான வல்லுநர்கள் தெரிவித்தனர்.
வி. கிருஷ்ணமூர்த்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக