சென்னையில் அடுக்குமாடி குடியிருப் புகள் வாங்கும் விலையில் கார் களை நிறுத்தும் இடத்திற்காக ரூ. 9 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.இதனால், கார்கள் இல்லாதவர்களும் வீடு வாங்கும்போது கார் நிறுத்துமிடத்துக்கான தொகையாக பல லட்ச ரூபாய்களை செலவ ழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சென்னையில் தற்போது அடுக்குமாடி குடி யிருப்புகள் விலை அவற்றில் உள்ள கூடுதல் வசதிகளைப் பொருத்து ஒரு சதுர அடி ரூ.3,500 முதல் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரத்துக் கும் மேலும் விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வகுத்துள்ள வளர்ச்சிக் கட்டுப் பாட்டு விதிகளின்படி அடுக்குமாடி குடியிருப் புக் கட்டடங்கள் கட்டும்போது அவற்றில் கார் கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடவசதி ஏற்படுத்த வேண்டியது கட்டா யம்.
இவ்வாறு இடவசதி ஏற்படுத்தாத கட்டடங் கள் விதி மீறல் புகாருக்கு ஆளாகியுள்ளன.இந்த பிரச்னை ஒருபுறம் இருக்க விதிகளின் படி வாகனங்களுக்கான இட வசதியுடன் ஏரா ளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவ தும் நடைபெறுகின்றன.
புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி குடியி ருப்புகளில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார் நிறுத்தும் அளவுக்கு 120 சதுர அடி அளவுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கப்ப டும் இடங்களுக்கு வீடு விற்பனையின்போது, சென்னையில் ரூ. 2 லட்சம் வரையும், புறநகர்ப் பகுதிகளில் ரூ. 75 ஆயிரம் வரையும் வசூலிக் கப்படுகிறது என இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மையத் தலைவர் எம்.கே.சுந்தரம் தெரிவித்தார்.
இவ்வாறு ஒதுக்கப்படும் இடத்தின் அளவை விற்பனை ஆவணத்திலும் குறிப் பிட்டு வாகன நிறுத்தும் இட வசதியை உறுதிப் படுத்துகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.இவ்வாறு ஒதுக்கப்படும் இடங்களுக்காக எவ்வளவு தொகை வசூலிக்கலாம் என்பது குறித்து எந்த வரையறையும் நிர்ணயிக்கப்படா மல் உள்ளது.
நியாயமாக நடக்க நினைக்கும் சில கட்டுமான நிறுவன உரிமையாளர்கள், தங் களுக்குள் பேசி வைத்துக் கொண்டு ஒரு குறிப் பிட்ட தொகையை வசூலிக்கின்றனர்.
கார் நிறுத்த ரூ. 9 லட்சம்:
சென்னை அடையாறில் பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றிடமிருந்து அனைத்து வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு விற்ப னையின்போது கார் நிறுத்தும் இடத்துக்காக மட்டும் ரூ. 9 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ரூ.80 லட்சம் என்பதால் கார் நிறுத்தும் இடத்துக் கும் இவ்வாறு அதிகபட்ச தொகை வசூலிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது.ரூ. 30 லட்சம், ரூ. 40 லட்சம் விலைகளில் விற்பனை செய்யப்படும் குடியிருப்புகளில் கூட கார் நிறுத்தும் இடத்துக்காக ரூ. 5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
கார் இல்லாதவர்கள்...:
கார் இருப்பவர்கள் மட்டுமல்லாது கார் இல்லாதவர்களும் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கினால் நிறுத் தும் இடத்துக்கான தொகையாக பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.
இடம் ஒதுக்க வேண்டும் என விதி வகுப் பது போல இவ்வளவு தொகைதான் வசூலிக்க லாம் என்று அரசு நிர்ணயிக்க வேண்டும் என் கிறார் கோடம்பாக்கத்தில் அண்மையில் வீடு வாங்கிய ராமன்.
கார் இல்லாத நடுத்தர வருவாய்ப் பிரிவு மக் களின் நலன் கருதி அடுக்குமாடி குடியிருப்புக ளில் வாகன நிறுத்தும் இடத்துக்கான தொகையை ஒரு குறிப்பிட்ட அளவாக வரை யறை செய்ய அரசு முன்வர வேண்டும் என் பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.
வி. கிருஷ்ணமூர்த்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக