ஞாயிறு, 8 ஜூன், 2008

விதிகளை மதிக்காமல் வீடு கட்டினால்...

சென்னை புறநகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ரவி.தனியார் நிறுவன ஊழியரான இவர் படப்பையிலிருந்து ஒரக டம் செல்லும் வழியில் பிரதான சாலையில் இருந்து 2 கிலோ மீட் டர் தொலைவில் ஒரு கிரவுண்ட் நிலத்தை சில ஆண்டுகள் முன்பு வாங்கியிருந்தார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீட்டு வாடகை நாளுக்குநாள் அதிகரித்துள்ள நிலையில், இனி வாடகை கொடுத்து மாளாது என்பதால், தொலைவில் இருந்தாலும் பரவா யில்லை என தனது சொந்த நிலத் தில் வீடு கட்ட முடிவெடுத்தார் ரவி.

தனது வங்கி சேமிப்பில் உள்ள பணம் மற்றும் தெரிந்தவர்களி டம் பெற்ற கடன் ஆகியவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை திரட்டிய ரவி, வீடு கட்டுவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை தொடங்கினார்.இதற்காக கட்டுமான பொறி யாளர் ஒருவரை அணுகி தனது வீட்டிற்கான வரைபடத்தை உரு வாக்கினார்.

பின்னர் அந்த வரை படத்துக்கு அரசின் விதிப்படி உள்ளாட்சி அமைப்பின் அனு மதி பெற அவர் முடிவெடுத்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் அலுவலகத்துக்கு சென்றார்.உள்ளூர் பிரமுகர்களையும், உள்ளாட்சி அலுவலக ஊழியர் கள் யாரையும் தெரிந்திராத நிலையில், கட்டட அனுமதிக் காக விண்ணப்பிக்க சென்றவரி டம், கட்டட அனுமதியா? அதற்கு இப்போது என்ன அவச ரம், வீட்டை கட்டி முடியுங்கள் பிறகு பார்க்கலாம் என அங்கி ருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

உள்ளாட்சி அமைப்பு ஊழியர் களின் இந்த அறிவுரை விதிப்படி நடக்க நினைத்த ரவிக்கு அதிர்ச்சி அளித்தது. இவரை போல நம்மில் பலரும் இத்த கைய அனுபவத்தை சந்தித்திருக் கலாம். சிலருக்கு இதைவிட மாறுபட்ட அனுபவமும் ஏற்பட் டிருக்கலாம்.

ரவிக்குக் கிடைத்த அனுபவம் சென்னைக்கு வெளியே.சென்னை மாநகராட்சி எல்லைக் குள் பெரம்பூருக்கு அருகில் ராமு வுக்கு கிடைத்த அனுவத்தைப் பார்ப்போம். இவர் வங்கிக்கடன் பெற வேண்டிய தேவை இல்லா மல், தன்னிடம் உள்ள பணத் தைக்கொண்டு வீடு கட்டுவதால், யாரையும் எதிர்பார்க்காமல், எதைப்பற்றியும் கவலைப்படா மல் கட்டுமானப் பணிகளை தொடங்கினார்.

கட்டட அனுமதி வாங்கிவிட் டீர்களா என்று அவரிடம் கேட்ட போது, "நான் அக்கம்பக்கத்தில் விசாரித்தேன். எனது நிலத்தை சுற்றியுள்ள பகுதியில் யாரும் கட் டட அனுமதி வாங்கவில்லை.எனவே, நானும் அனுமதி வாங் கவில்லை' என்றார் அப்பாவி யாக.மாநகரம் முதல் குக்கிராமம் வரை வீடு கட்டும் தனி நபர்க ளால் ஏற்படும் விதிமீறல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகு திகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) அதிகார எல் லைக்குள் வருகின்றன.சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் புதிய கட்டடங்களுக்கான வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறை யில் உள்ளன.

அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளிட்ட பெரிய கட்டடங்க ளின் வரைபடங்களை ஆய்வு செய்து அனுமதி அளிக்கும் அதி காரம் சி.எம்.டி.ஏ.விடம் உள் ளது. இதேபோல, சிறு கட்டடங்க ளுக்கான (இரண்டு மாடி வரை) வரைபடங்களை ஆய்வு செய்து அனுமதி அளிக்கும் அதிகாரம் அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கப்பட் டுள்ளன.

சி.எம்.டி.ஏ. வின் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின்படி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி களில் கட்டப்படும் அனைத்துக் கட்டடங்களும் உரிய அனுமதி பெறுவது கட்டாயம். இந்த விதி களை நடைமுறைப்படுத்த உள் ளாட்சி அமைப்புகளுக்கு போதிய அதிகாரம் வழங்கப்பட் டுள்ள நிலையில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதி கரித்து வருவது பல்வேறு கேள் விகளை எழுப்பியுள்ளது.

விதிகளை மதித்து கட்டட அனுமதி வாங்க செல்லும் நபர் கள் அந்தந்த உள்ளாட்சி அமைப் புகளால் அலைக்கழிக்கப்படு வது, சட்டம்- விதிகளை பேசா மல் அமைதியாக இருந்தால் லஞ் சம் கேட்பது என உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்படும் கசப் பான அனுபவங்களே விதி மீறல் களுக்கு அடிப்படைக் காரணம்.

மேலும், சி.எம்.டி.ஏ.வின் தற் போதைய விதிகளின்படி 900 சதுர அடிக்கு குறைவான அளவு நிலத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி களில் பெரும்பாலும் தனி வீடு கட்டுவோர் ஒரு கிரவுண்ட், அரை கிரவுண்ட் அளவுகளில் நிலம் வாங்குவது கிடையாது.

நிலத்தின் விலை வெகுவாக அதி கரித்துள்ள நிலையில் இந்த அள வுக்கு நிலம் வாங்கவும் முடி யாது.சென்னை மாநகராட்சி, அதனை ஒட்டியுள்ள நகராட்சி கள், பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே ஓரளவு கட் டட விதிகளை பற்றிய விழிப்பு ணர்வு இருக்கிறது.

சென்னை யைச் சுற்றி சுமார் 100-க்கும் அதிகமான ஊராட்சிகள் உள் ளன. இவற்றில் கட்டட அனும திக்கான விதிகள் குறித்து போதிய அளவு விழிப்புணர்வு அதிகாரிகள் நிலையிலேயே இல்லை.இதனால் மக்களும், கட்டட அனுமதி குறித்து கவலைப்படா மல் விதிகளை மீறி வருகின்ற னர்.

கட்டட அனுமதிக்கான விதி கள் தற்போதைய நடைமுறைக்கு ஏற்றதாக இல்லாதது விதி மீற லுக்கு முக்கிய காரணமாக உள் ளது. குறைந்த பரப்பில் வீடு கட் டுவதற்கான விதிகளை உள்ளடக் கிய 2-வது மாஸ்டர் பிளானும் அரசின் பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சிறிய கட்ட டங்கள் தானே என பெரிய அள வில் முக்கியத்துவம் அளிக்கத் தவறினால் அடுத்த சில ஆண்டு களில் இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதே நகர மைப்பு வல்லுநர்களின் அச்சம்.

வி.கிருஷ்ணமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக