சென்னை, மே. 30: மத்திய அரசின் பல்வேறு நடவடிக் கைகளுக்கு பின்னர் குறைந்த உருக்கு விலை தற்போது மீண் டும் உயரத் தொடங்கியுள் ளது.
கடந்த மாதம் ஒரு டன் ரூ.50 ஆயிரம் வரை உயர்ந்த கம்பி விலை சில வாரங்க ளுக்கு முன்னர் ஒரு டன் ரூ.35 ஆயிரம் வரை குறைந்தது.இது தற்போது ஒரு டன் விலை ரூ. 46 ஆயிரம் ஆக மீண்டும் அதிகரித்துள்ளது.
கம்பி விலை உயர்வைக் கட் டுப்படுத்துவது தொடர்பாக மத் திய அரசு மேற்கொண்ட நடவ டிக்கை ஒரு தாற்காலிக தீர்வாக அமைந்ததே இதற்கு காரணம் என கட்டுமானத்துறை உள் ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதியாகும் இரும்பு தாது மீதான வரியை உயர்த்த வேண் டும் என தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வந்த நிலையில் தற் போது, டி.எம்.டி. கம்பிகள் உள் ளிட்ட இரும்புப் பொருள்கள் ஏற்றுமதிக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் ஏற்றுமதியா கும் இரும்பு தாதுவுக்கு வரி விதிக்காமல் குறைந்த அளவில் ஏற்றுமதியாகும் இரும்பு அடிப் படையிலான பொருள்களுக்கு வரிவிதிக்கப்பட்டுள்ளதாக இரும்பு ஆலை நிர்வாகங்கள் தரப்பில் கூறப்படுகிறது.டி.எம்.டி. கம்பிகள் உள் ளிட்ட இரும்பை அடிப்படை யாகக் கொண்டு உற்பத்தி செய் யப்படும் பொருள்கள் மீதான 14 சதவீத உற்பத்தி வரி ரத்து செய் யப்படுவதாக அரசு அறிவித்துள் ளது.
ஆனால், இந்த வரி ரத்து இறக்குமதி செய்யப்படும் இரும் புப் பொருள்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இந்த அறிவிப்பால் எந்த பய னும் இல்லை.
நாட்டில் இரும்பு கம்பி உற்பத் தியில் 60 சதவீதம் அரசின் பொதுத்துறை நிறுவனங்க ளான "செயில்', "விசாக்' ஆகியவற் றின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆனால், அரசின் நடவடிக்கை காரணமாக இரும்பு தாது ஏற் றுமதி அதிகரிப்பால் இந்த ஆலைகளுக்கு கச்சா இரும்பு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது.
மூலப் பொருள்கள் கிடைப் பதில் தட்டுப்பாடு ஏற்படுவ தால் அரசின் நடவடிக்கைக்கு பின்னரும் கம்பி உள்ளிட்ட வற்றின் விலைகளை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளதாக உருட்டாலை நிர்வா கங்கள் தரப்பில் தெரிவிக்கப்ப டுகிறது.
இரும்பு மற்றும் இரும்பு அடிப்படையிலான பொருள் கள் மீதா வரி விகிதங்களை மத் திய அரசு மாற்றியது ஒரு தாற் காலிக நடவடிக்கையாகவே உள் ளது.
மூலப் பொருள்கள் ஏற்றும தியை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்னைக்கு நிரந் தரத் தீர்வு ஏற்படும் என திருச்சி டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி. முருகன் தெரிவித் தார்.
எனவே, ஏற்றுமதியின் போது ஒரு டன்னுக்கு ரூ. 50 என உள்ள இரும்பு தாது மீதான வரியை, பொருளின் மதிப்பு அடிப்படை யில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக