வீட்டுவசதி வாரியத்தில் அதிகரிக்கும் முறைகேடுகள்
சென்னை, ஜூன் 21: தமிழ்நாடுவீட்டுவசதி வாரியத் தலைவர்,நிர்வாக இயக்குநர் உள்ளிட்டஉயர் அதிகாரிகள் தொலைபேசி மூலம் அளிக்கும் உத்தரவின் படியே மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இத்தகைய செயல்பாடுகள்வீட்டுவசதி வாரிய நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வீட்டுமனைகள் மட்டுமல்லாது வணிக மனைகள், பள்ளிகளுக்கான மனைகள் ஆகியவற்றையும் உருவாக்கி,அதனை மேம்படுத்தி உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.
இவ்வாறு மனைகளைஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்என்பதற்காக மனைகளைஒதுக்குவது தொடர்பானநடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால், இந்த நடைமுறைகள் எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகின்றன என்பது தான்தற்போது எழுந்துள்ளகேள்வி.
எந்த ஒரு மனையானாலும்பொது அறிவிப்பு வெளியிட்டுஏலம் மூலமே ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது வீட்டுவசதி வாரியத்தின் விதியாக உள்ளது. ஆனால், இந்த விதிகள்முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதாகமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வீட்டுவசதி வாரியத்தில்வணிக பகுதிக்கான மனைகளை பெறுவதற்கு எப்போதுமே பலத்த போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக இந்தமனைகளை பெற விரும்புவோர் தங்களது அனைத்துவிதமான பலத்தினையும் பிரயோகப்படுத்துவதாக பரவலாக புகார் கூறப்படுகிறது.
இந்தப் புகார்களை உறுதிப்படுத்தும் விதமாக சில ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதிகாரி வெளியிட்ட ஆதாரம்:
சென்னை மேற்கு அண்ணாநகர் பஸ் நிலையம் அருகில்தந்தை பெரியார் சமுதாயமைய வளாகத்தின் ஒரு மூலையில் கோபாலன் என்பவர்கடை நடத்தி வருகிறார்.இந்தக் கடை ஆக்கிரமிப்பாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எழுந்தபுகார்களுக்கு பதில் அளித்துதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயலர் சி.காமராஜ் அளித்த விவரம்:
மேற்கு அண்ணா நகர் பஸ்நிலையம் அருகில் உள்ளதந்தை பெரியார் சமுதாயமைய வளாகத்தில் 60 சதுரஅடி நிலம் எஸ்.கே. கோபாலனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த நிலத்தை எஸ்.கே. கோபாலன் என்பவருக்கு ஒதுக்குமாறு வீட்டுவசதி வாரிய தலைவர் தொலைபேசி மூலம் உத்தரவிட்டதால்இதற்கான ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஒதுக்கீட்டுக்கானஆணையில் (எண்:பி8.89249.84-1) வீட்டுவசதிவாரியத்தின் அண்ணா நகர்கோட்ட செயற் பொறியாளர்குறிப்பிட்டுள்ளார்.
1984-ம் ஆண்டு இந்த ஒதுக்கீடு நடைபெற்று இருந்தாலும், இது தொடர்பான உத்தரவு தொலைபேசி மூலம்அளிக்கப்பட்ட விவரம் தற்போது தான் வெளியாகியுள்ளது.
தொடரும் முறைகேடுகள்:
இது மட்டுமல்லாமல்,சென்னை உள்பட தமிழகம்முழுவதும் ஏராளமான வீட்டுமனைகள், வணிக மனைகள்,பள்ளி வளாகங்களுக்கானமனைகள் உயர் அதிகாரிகளின் தொலைபேசி உத்தரவுகள் அடிப்படையிலேயே ஒதுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் புகார்தெரிவித்துள்ளனர்.
இதனால், விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மனைகள் கிடைக்காமல் போகிறது. விதிகளுக்குமுரணான இந்த அணுகுமுறைகள் வீட்டுவசதி வாரியத்தின்ஊழலுக்கு வழிவகுப்பதாகவேஉள்ளது என ஊழலுக்கு எதிரான பிரசார இயக்கமான "ஐந்தாவது தூணின்' சென்னைமாவட்ட செயலர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக