சென்னை, ஜூன் 5: நகர்ப்புற வளர்ச்சி காரண மாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இந்திய நக ரங்களில் ஒளி மாசு அளவு அதிகரித்து வருகி றது. இந்த நிலை மேலும் அதிகரித்தால் நமது அடுத்த தலைமுறையினர் இரவு நேரங்களில் வானில் நட்சத்திரங்களை காண முடியாத நிலை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.
நகர்ப்புற வளர்ச்சி காரணமாக உயரமான பெரிய கட்டடங்களின் எண்ணிக்கை வெகு வாக அதிகரித்துள்ளன. இந்த கட்டடங்களை இரவிலும் பிரகாசமாக வைத்துக்கொள்ள ஒளி உமிழும் பிரமாண்டமான பல்வேறு வகை மின் சார விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக பொருத்தப்படும் விளக்குகள் பெரும் பாலும் மேல் நோக்கியே அமைக்கப்படுகின் றன. இதனால், விளக்கின் ஒளிக்கதிர்கள் பரவ லாக அனைத்து இடங்களுக்கும் பரவுகிறது.
குறைந்த எண்ணிக்கையில் இத்தகைய விளக் குகள் இருந்தவரை எவ்வித பிரச்னையும் இல்லை, இந்த விளக்குகளின் எண்ணிக்கை கோடிகளை தாண்டும்போது அது ஒட்டு மொத்த புவி பரப்பையும் இரவு நேரங்களில் பிர காசமாக்குகின்றன.
பாதிப்பு என்ன?
மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் தனித்தனி உயிர் நேரகால அட்டவணை (ஆண்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் ஸ்ரீப்ர்ஸ்ரீந்) உள்ளது. இதன்படி குறிப்பிட்ட மணி நேரங்கள் அதா வது பகல் நேரத்தில் பிரகாசமான வெளிச்சத் தையும், குறிப்பிட்ட மணி நேரங்கள் அதாவது தூங்கும் நேரத்தில் இருட்டையும் விரும்பும் குணம் பொதுவாக உள்ளது. நாம் கண்களை மூடித்தூங்குவதும் இதன் அடிப்படையிலேயே அனிச்சை செயலாக நிகழ்கிறது.
கடலோரக் குடியிருப்புகள், பொழுதுப் போக்கு பூங்காக்கள் என்ற பெயர்களில் கட லோரப் பகுதிகளில் நாளுக்குநாள் இரவு நேரங் களில் அதிகரித்து வரும் ஒளி வெள்ளம் காரண மாக, இருட்டில் முட்டையிட்டு இனப்பெருக் கம் செய்யும் கடலாமைகள் பாதிக்கப்பட்டுள் ளன.
இனப்பெருக்கம், இரைதேடுவது ஆகிய செயல்கள் பாதிக்கப்படுவதால் இவற்றின் எண் ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது என்கின்ற னர் ஆய்வாளர்கள்.மேலும், வெüவால் உள்ளிட்ட உயிரினங்க ளும் வெளிச்சம் காரணமாக இரவில் உணவு தேட முடியாமல் அழிந்து வரும் சூழல் உருவா கியுள்ளது.
ஒளி வெள்ளம் அதிகரிப்பு காரண மாக ஏராளமான இரவு நேரப் பறவைகள் இல் லாமல் போய்விட்டன என்றும் அவர்கள் கூறு கின்றனர்.வனப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் மின் இணைப்பு மூலம் பிரகாசமான விளக்குகள் ஒளிர்வதால் இரவு நேரங்களில் காட்டு யானை, காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகள் குழப்பம டைந்து மக்கள் வசிக்கும் பகுதி அல்லது விவ சாய நிலங்களுக்குள் புகுகின்றன என சுற்றுச்சூ ழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதிபலிப்பு ஏன்?
பகல் நேரத்தில் சூரிய கதிர்கள் காற்றில் உள்ள மூலக்கூறுகள் மூலம் பிரதிபலிப்பு அடைவதால் நிலபரப்பு வெளிச்ச மாக இருக்கிறது. இதனால் வானில் உள்ள நட் சத்திரங்களை நாம் பகலில் காண முடிவ தில்லை.
ஆனால், இரவு நேரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் நிலவின் ஒளிக்கதிர் கள் அதிக அளவில் பிரதிபலிக்கப்படுவதில்லை எனவே, நிலபரப்பில் இருந்து ஒளி பிரதிபலிக் காத நிலையில் வானில் உள்ள நட்சத்திரங்களை நாம் வெறும் கண்களாலேயே காணமுடிகிறது.
இந்த நிலையில் நிலப்பரப்பில் செயற்கையாக விளக்குகள் மூலம் ஏற்படும் வெளிச்சம் அதிக ரித்தால் இரவு நேர இருளை நம்பியுள்ள உயிரி னங்கள் பாதிக்கப்படுவதோடு, நமது எதிர்கால தலைமுறையினர் வானில் உள்ள நட்சத்திரங் களை காணமுடியாத நிலை ஏற்படும்.
இப்போதாவது...:
நமது நாட்டில் காற்று, நீர், ஒலி மாசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை கட் டுப்படுத்த விதிமுறைகள் வகுக்கப்பட்டு மாசு கட்டுப்பாடு வாரியங்கள் மூலம் இவற்றை அம லாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வரு கின்றன.
இப்போதாவது, தமிழ்நாடு மாசு கட் டுப்பாடு வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப் புகள் ஒளி மாசு கட்டுப்பாடுக்கான விதிமுறை களை உருவாக்கி அமலாக்க வேண்டிய கட் டாய சூழல் உருவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக