திங்கள், 30 ஜூன், 2008

கட்டடம் கட்ட சிறப்பு விதிகள் அறிவிப்பு

சென்னை, ஜூன் 24: சென்னை திருவான்மியூரை அடுத்துள்ள கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையிலான பகுதிகளில் கட்டப்படும் புதிய கட்ட டடங்களுக்கான சிறப்பு விதிகளை அரசு அறிவித் துள்ளது.

கடலோர பகுதி நிலத்தடி நீர் வளம் மற்றும் கனிம வளம் ஆகியவற்றை பாதுகாக்கும் விதமாக கடலின் உயர் அலை மையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத் துக்கு அப்பாலும், பக்கிங்காம் கால்வாயில் இருந்து 100 மீட்டர் தூரத்திலும் உள்ள பகுதிகளில் புதிய கட்டடங்கள் வருவதை ஒழுங்குப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

தடை விதிப்பு:

இதன்படி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், உத்தண்டி ஆகிய கிராமங்களில் புதிய கட்டடங்க ளுக்கு அனுமதி வழங்குவதற்கு தடை விதித்து அரசு 23-12-1980-ல் உத்தரவிட்டது.

நகர்ப்புற வளர்ச்சி, புதிய குடியிருப்புகள் தேவை மற்றும் நீர்வளம், கனிமவள வல்லுநர்கள் மேற் கொண்ட ஆய்வு முடிவுகளின் படி இந்தப் பகுதியில் புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

தடை நீக்கம்:

இந்த கோரிக்கைகள் அடிப்படை யில் கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையி லான பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்க விதிக்கப்பட்டிருந்த தடை 27 ஆண்டுக ளுக்கு பின்னர் 13-3-2007-ல் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், இந்தப் பகுதியில் புதிய கட்டடங்க ளுக்கு அனுமதி வழங்குவதற்கான சிறப்பு விதிகளை உருவாக்குமாறு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) கேட்டுக் கொள்ளப்பட்டது.இதன்படி, சி.எம்.டி.ஏ. அனுப்பிய புதிய சிறப்பு விதிகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

அரசின் ஒப்புதலை அடுத்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் ஆர். செல்லமுத்து இதற் கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.

புதிய விதிகள்:
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு உட்பட்டு இந்த விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதன்படி சாதாரண குடியிருப்புகள் கட்டிக்கொள்ள நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்படும்.

மேலும், அலுவலகக் கட்டடங்கள், சிறு கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கான கட்டடங் கள் 40 சதுர மீட்டர் பரப்பளவிலும், தரை தளம் மற் றும் முதல் தளத்துடன் கூடிய கட்டடங்களாக இருக்க வேண்டும்.

பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கான கட்டடங்கள் 100 சதுர மீட்டர் பரப்பளவிலும் 15 மீட்டர் உயரத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.மக்கள் கூடும் அரங்குகள், அரசு கட்டடங்கள், வங்கிகள், மின்வாரிய கட்டடங்கள் உள்ளிட்டவை 300 மீட்டர் பரப்பளவிலும், 15 மீட்டர் உயரத்துக் குள்ளும் இருக்க வேண்டும்.

புதிய மனைப் பிரிவுகளின் பரப்பளவு ஒரு ஹெக் டேருக்குள் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் புதிய கட்டடங்கள் அரசின் சிறப்பு விதிகளில் குறிப் பிடப்பட்டுள்ள அளவுக்கு சாலைகளுக்கு இடம் விட்டு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு, கழிவுநீரை முறையாக வெளியேற்றுவது தொடர் பான விதிகள் முழுமையாக பின்பற்றப்பட வேண் டும்.

ஏற்கெனவே கட்டியிருந்தால்...:

தடை விதிக்கப் பட்டிருந்த காலத்தில் கட்டப்பட்டு தற்போது அறி விக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு விதிகளுக்கு உட்பட் டதாக இருக்கும் கட்டடங்கள் வரைமுறைப்படுத் தப்பட்டதாக கருதப்படும்.

சிறப்பு விதிகளுக்கு முரணாக இருக்கும் கட்டடங் கள் மீது அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தப் பகுதியில் விதிகளுக்கு உட் பட்டு புதிய கட்டடங்கள் கட்டுவதில் இருந்த 28 ஆண்டு கால பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுள் ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக