புதன், 24 டிசம்பர், 2008

அங்கீகாரம் இல்லாத மனைகள்: அரசு புது முடிவு?

சென்னைப் பெருநகர் பகுதியில் அங்கீகாரம் இல்லாமல் உருவாகும் மனைப் பிரிவுகளின் (லே-அவுட்) எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதுசென்னையில் நாளுக்குநாள் மக்கள் நெரிசல் அதிகரித்து வருகிறது.

வெளிமாவட்டங்களில் இருந்து குடிபெயர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் புறநகர் பகுதிகளில் குடியேற மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவர்களின் தேவைகளைப் பயன்படுத்தி பணம் பார்க்க நினைத்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் புறநகர்பகுதிகளில் விவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை மனைப் பிரிவுகளாக மாற்றி தனித்தனி மனைக ளாக விற்று வருகிறார்கள்.

"சி.எம்.ஏ.' பகுதி என அழைக்கப்படும் சென்னை பெருநகர் பகுதியில் இவ்வாறு உருவாகும் புதிய மனைப் பிரிவுகள் அனைத்தும் இதற்காக சி.எம்.டி.ஏ. வகுத்துள்ள விதி முறைகளின்படியே இருக்க வேண்டும்.

சி.எம்.ஏ. பகுதிக்கு வெளியே புதிய மனைப் பிரிவு களை உருவாக்க நகர மற்றும் ஊரமைப்பு துறை அனுமதியைப் பெற வேண்டும்.

விதிகள் அவசியம்:

சி.எம்.டி.ஏ. விதிகளின்படி விளை யாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட பொதுப் பயன்களுக்கு தேவையான நிலத்தை ஒதுக்க வேண்டும்வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு சாலைகளுக்கு இடம் விடவேண்டும்.

இவை உள்ளிட்ட விதிகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டுள்ள மனைப் பிரிவுகளுக்கு மட்டுமே சி.எம்.டி.ஏ. அங்கீ காரம் வழங்கும்.

பட்டா உள்ள விவசாய நிலத்தில் அங்கீகாரம் இன்றி உருவாகும் மனைப் பிரிவுகள் தொடர்பான பிரச்னைக ளைவிட நத்தம் புறம்போக்கு நிலத்தில் உருவாக்கப்படும் மனைப்பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதில் பல்வேறு பிரச் னைகள் ஏற்படுகின்றன.

சி.எம்.டி.ஏ. நிலை என்ன?

சென்னைப் பெருநகர் பகுதியில் 1976-க்கு பின்னர் உருவான அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவுகளை ஒழுங்குபடுத்த சி.எம்.டி.ஏ. 1990 ஏப்ரலில் நடவடிக்கை எடுத்தது.

1989-க்கு முன்னர் உருவான வீட்டுமனைகளை சில நிபந்தனைகளுடன் ஒழுங்குபடுத்த சில நடவடிக்கை களை சி.எம்.டி.ஏ. 1992-ல் அறிவித்தது இதையடுத்து, அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை ஒழுங்குபடுத்த இவற்றுக்கான வரன்முறைத் திட்டத்தை சி.எம்.டி.ஏ. 1999-ல் அறிவித்தது.

இவ்வாறு வரன்முறைப்படுத்த உருவாக்கப்பட்ட திட்டம் 2000, 2001, 2002-ம் ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டதுஇத்திட்டங்கள் மூலம் அங்கீகாரம் பெறாமல் உருவாக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகளுக்கு வரன்முறைக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.

அரசு புதிய முடிவு?

1999-ம் ஆண்டு வரன்முறைத் திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட் டது. விதிமீறல் கட்டடங்களுக்கு ஆதரவாக இந்த நடவ டிக்கை இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக இந்த திட்டம் தடைப்பட்டது.

அங்கீகாரம் இன்றி உருவாக்கப்பட்டதால் இந்த மனைகளில் வீடு கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டனவிதிகளை மீறி உருவான மனைப் பிரிவுகளை உருவாக்கியவர்கள் எவ்வித பிரச்னையையும் எதிர்கொள்வ தில்லை.

மாறாக, இவற்றை வாங்கியவர்களே பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர்இந்த மனைகளை வரன்முறைப்படுத்த அரசு தனி யான கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

ஆனால், பல ஆண்டுகளாக அரசு இதில் மெüனமாகவே இருந்து வந் ததுஇந்த நிலையில் 2-வது மாஸ்டர் பிளான் நடைமு றைக்கு வந்துள்ள நிலையில் அங்கீகாரம் இல்லாத மனைகள் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை உரு வாகியுள்ளது.

இதையடுத்து 2000-ம் ஆண்டு முதல் 2005- ம் ஆண்டு வரை சென்னைப் பெருநகர் பகுதியில் அங்கீகாரம் இன்றி உருவான மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவு எடுக்க அரசு முன்வந்துள்ளது.

இதற்காக, அங்கீகாரம் இன்றி உருவான மனைப்பிரிவுகள் குறித்த பட்டியல் அடங்கிய கோப்பு சி.எம்.டி.ஏ.விடம் இருந்து வீட்டுவசதித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கோப்பு தொடர்பாக முடிவு எடுக்க வேண்டிய வீட்டுவசதித் துறை 2007-ம் ஆண்டு வரையிலான பட்டியலுடன் சேர்த்து புதிய பட்டியலை அளிக் குமாறு கேட்டுள்ளது.

இதையடுத்து அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை
வரன்முறைப்படுத்துவது குறித்து அரசின் முடிவு விரைவில் வெளியாகும் என பல்வேறு தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதன், 19 நவம்பர், 2008

பத்திரப் பதிவுத்துறை, மக்களை வஞ்சிப்பது ஏன்?

சென்னை, நவ. 18: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை கடைப்பிடிக்காமல், முந்தைய உயர் மதிப்பு அடிப்படையில் சொத்து விற்பனையைப் பதிவு செய்துள்ளனர் பதிவுத்துறையினர்.

தமிழகத்தில் நில விற்பனையைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டி மதிப்புகள் பல ஆண்டுகளாகத் திருத்தப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் நில விற்பனைக்கான வழி காட்டி மதிப்புகளைத் திருத்தி அமைக்க தமிழக அரசு 2005 ஜூன் 8-ம் தேதி (அரசாணை எண்: எம்.எஸ். 69 வ.வ. ஜே1) உத்தரவிட்டது.

இதன்படி மைய மதிப்பீட்டுக் குழு, மாவட்டக் குழு, வட்டக் குழுக்கள் அமைக் கப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்புகள் வெளியிடப்பட்டு அதன் மீது பொது மக்களின் கருத்துகளும் பெறப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த இறுதி அறிக்கை சில மாற்றங்களுடன் 2007 ஆகஸ்ட் 1 முதல் திருத்தி அமைக்கப்பட்டு, புதிய வழிகாட்டி மதிப்புகள் நடை முறைக்கு வந்தன.

2007 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வந்த வழிகாட்டி மதிப்பே இறுதியானது என்றும் பதிவுத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

முரண்பாடு:

ஆனால், பதிவுத் துறைத் தலைவர் தலைமையில் அனைத்து துணைப் பதிவுத் துறைத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் 7-9-2007-ல் நடைபெற்றது.

திருத்தி அமைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புக ளைக் கடைபிடித்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் குறித்து 11-9-2007-ல் நடைபெற்ற மைய மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் மேலும் விவாதிக்கப்பட்டது.

2007 ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன்பு தற்போ தைய வழிகாட்டி மதிப்பைவிட உயர் மதிப் பில் பதிவாகியுள்ள சர்வே எண். தெரு. நகர் மதிப்புகளை அந்த சர்வே எண். தெரு. நகருக்கு மட்டும் சார்பதிவாளர்கள் கடைப்பிடிக்கலாம் என்ற கருத்து ஏற்கப்பட்டது.

இந்த முடிவு 2005, 2006-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் உயர் மதிப்பை முன்தேதியிட்டு கடைப்பிடிக்க பதிவுத்துறை அலுவலர்களை நிர்பந்திக்கிறது.

நிதி சார்ந்த புதிய முடிவுகளை முன்தேதி யிட்டு அமல்படுத்தக் கூடாது என்ற நீதி மன்ற தீர்ப்புகளுக்கு இது எதிராக உள்ளது.

மையக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் "கடித எண்: 34000/ எல்.1.2007, நாள் 12.9.2007' என்று குறிப் பிட்டு ஒரு சுற்றறிக்கை நிலையில் பதிவுத்து றைத் தலைவர் அலுவலக அனைத்து உயர் அதிகாரிகள், அனைத்து மாவட்டப் பதிவாளர்கள், அனைத்து சார்பதிவாளர்கள், அனைத்துப் பிரிவு கண்காணிப்பாளர்கள்- பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், பதிவுத் துறை பயிற்சி அலுவலகம் என அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பாதிப்பு என்ன?

2007 செப்டம்பர் 11-ம் தேதி தீர்மானத்தின்படி 2007 ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முந்தைய உயர் மதிப்பை கடைபி டிக்க வேண்டும் என தணிக்கை மாவட்டப் பதிவாளர்களால் குறிப்புரை எழுதப்பட்டு, அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு அறிவிப்புகள் அனுப்பி அதிகாரப்பூர்வ அறி விப்பின்படி பதிவு செய்யப்பட்ட தொகைக்கும் அதற்கு முந்தைய உயர் மதிப்புக்கும் இடையிலான வேறுபடும் தொகை வசூலிக் கப்படுகிறது.

உதாரணமாக, சென்னை நங்கநல்லூரில் அரசு அறிவித்த அதிகாரப் பூர்வ மதிப்பின் அடிப்படையில் (ஆவண எண்: 472/08) ஒரு சொத்தின் மதிப்பு ரூ. 6,40,800 என நிர்ணயித்து பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், பதிவுத்துறையின் 11-9-2007-ம் தேதி திடீர் முடிவு அடிப்படையில் முந்தைய உயர் மதிப்புகளை கருத்தில் கொண்டால் அந்த சொத்தின் மதிப்பு ரூ. 6,67,500 என பதி வுத்துறை தணிக்கை அதிகாரி குறிப்பு அனுப் பியுள்ளார்.

இதன்படி அந்த சொத்தை வாங்குபவரிடம் கூடுதல் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனை செலுத்தாதவர்கள் மீதும், வசூலிக்க நடவடிக்கை எடுக்காத சார்பதிவாளர்கள் மீதும் தணிக்கைத் துறை ஆட்சேபணைகள் அடிப்ப டையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதுபதவி ஓய்வு பெறும் நிலையில் உள்ள சார் பதிவாளர்களிடம் இத்தகைய ஆட்சேபனைகள் அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கூடு தலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

கூடுதல் தொகையைச் செலுத்தாதவர்கள் மீது இந்திய முத்திரைச் சட்டத்தின் 47 (ஏ) பிரிவின்படி வருவாய்த்துறை மூலம் வசூலிப்பு நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிவுத்துறையினர் பரிந்துரைகளை அனுப்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஏராளமானோர் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்க பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன என பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய், 4 நவம்பர், 2008

ஒதுக்கீடு பெற்றவர்கள் உரியவர்கள் தானா?

சென்னை, நவ. 1: சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் வீட்டுவசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட 170 அடுக்குமாடி குடியிருப்புகள் பல் வேறு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்தந்த பிரிவுகளின்படி தகுதியானவர்கள் தானா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

வீட்டுவசதி வாரியம் ஒரு பொது நிறுவனம் என்பதால், இதன் மூலம் வீடுகள், மனைகளை ஒதுக்கும் போது அனைத்து தரப்பினரும் பயன் பெற வேண்டும் என்பதற்காக அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதன்படி பொதுப்பிரிவில் தொடங்கி சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் அவரவர் மக்கள் தொகை அடிப்படையில் வீடுகளின் எண்ணிக்கை பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவின்கீழும் தகுதி உடையவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு ஒதுக்கீடு பெறுவதற்கு விண்ணப்பிப்போர் அதற்கான தங்களது தகுதியை உறுதிப்படுத்த உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டியது அவசியம். இதுவே பொதுவான நடைமுறையாகவும் இருந்து வருகிறது.

வீட்டுவசதி வாரியம் முகப்பேர் ஏரி திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்காக பொதுப் பிரிவு மொத்த கொள்முதல், பொதுப் பிரிவு தவணை முறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர் கள், முன்னாள் ராணுவத்தினர், பத் திரிகையாளர்கள், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள், சலவை, சவரத் தொழிலாளர்கள், வீட்டுவசதி வாரிய ஊழியர்கள் என மொத் தம் 18 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.

விண்ணப்பத்தில் இந்த பிரிவுகளை குறிப்பிட்டால் மட்டும் போதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 18 பிரிவுகள் மட்டுமல்லாது பாதுகாப்புத் துறையினரா என்றும், சிறப்பு பிரிவினரா என்பதை மட்டும் தனியாக குறிப்பிட வேண்டும் என வாரியம் அறிவு றுத்தி இருந்தது.

இவ்வாறு விண்ணப்பத்தில் அவரவர் குறிப்பிட்டிருந்த தகவல் அடிப்படையிலேயே சனிக்கிழமை நடைபெற்ற குலுக்கலில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை பெறும் போது தங்க ளது தகுதியை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்ப நடைமுறைகளை எளிமைப்படுத்துவதாக கூறி வீட்டுவசதி வாரியம் எவ்வித சான்றும் இல்லாமல் முதல் தகவலின் அடிப் படையிலேயே ஒருவரின் பெய ருக்கு வீடுகளை ஒதுக்குவது மறைமுக பேரங்கள் மற்றும் முறைகேடுகளுக்கே வழிவகுக்கும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரி வித்துள்ளனர்.

அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு பொது அமைப்புகள் விண்ணப்பிக்கும் போதே அந்த ஒதுக்கீட்டின் கீழ் வருவதற்கான தகுதியை நிரூபிக்கும் ஆவணங்களின் நகல்களை பெறும் நடைமுறைகளை வீட்டுவ சதி வாரியமும் ஏன் பின்பற்றுவது இல்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அப்படி செய்தால் மட்டும்தான் தகுதி உள்ள நபர்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு வீடு, மனை ஒதுக்கீடு பெற முடியும் என்று பரவலாக விமர்சனம் எழுந் துள்ளது.

திங்கள், 20 அக்டோபர், 2008

ஏரிகளை தூர்வாரும் திட்டம் நடைமுறையில் இல்லை

சென்னை, அக். 19: காஞ்சிபுரம் மாவட் டத்தில் ஏரிகளை தூர்வாரும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இல்லை என பொதுப் பணித்துறையின் கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் சிவபெருமான் தெரிவித் தார்.

இது தொடர்பாக தகவல் பெறும் உரி மைச் சட்டம் - 2005-ன் கீழ் "ஐந்தாவது தூண்' அமைப்பின் பொதுச் செயலாளர் ரத்தின பாண்டியனுக்கு பொதுப்ப ணித்துறை அளித்துள்ள பதில்கள் விவரம்:

""காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம் பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏரிகள், ஊராட்சி ஒன்றியங்களால் பரா மரிக்கப்படும் ஏரிகள் நீங்கலாக 84 தாங் கல்கள் உள்பட 917 ஏரிகள் கீழ்ப்பா லாறு வடிநிலக் கோட்டம் மூலம் பராம ரிக்கப்படுகின்றன.

ஏரிகளை தூர்வாரும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இல்லைஏரிக்கரைகளை பலப்படுத்தும் போது தேவைப்படும் மண் ஏரியுனுள் இருந்து எடுக்கப்படுகிறது.

இதேபோல வணிக நோக்கத்துக்காக கனிமத் துறையிடம் அனுமதி பெற்றவர் களால், பொதுப்பணித்துறை அதிகாரிகளால் காண்பிக்கப்படும் இடங்களில் இருந்து மண் எடுக்கப்படுகிறதுஇந்த இரு நோக்கங்களுக்காக தவிர, ஏரியுனுள் முழுவதும் மண்ணை வெட்டி எடுத்து தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை.

ஏரிகளை தூர்வாரும் பணிகளுக்கு அரசு அனுமதி அளித்து சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கனிமவளத் துறை அனுமதி பெற்று நீர் நிலைகளில் மண் எடுப்பது குறித்து பொதுப் பணித்துறைக்கு என அரசின் தனியான வழிகாட்டுதல்களோ, உத்தரவுகளோ இல்லை.

ஏரிகள் உடைப்பு:

கடந்த ஐந்து ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் 117 இடங்களிலும் ஆறுகளில் 11 இடங்களிலும், வாய்க்கால்களில் 40 இடங்களிலும், ஏரிகளில் 66 இடங்களி லும் கரைகள் உடைந்தன.

இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் ஏதும் இல்லைஎந்த காலங்களில் நீர் நிலைகளில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்வது என்பது குறித்தும், அது தொடர்பான கோப் புகளை ஆய்வு செய்து முடிவு எடுப்பது குறித்தும் அரசு விதிகள், வழிகாட்டுதல் கள் ஏதும் இல்லை'' என அவர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் பாழாக்கப்பட்டு வரும் நிலையில், ஏரி களை பாதுகாத்து பராமரிக்க வேண்டிய துறை இந்த பணிகளுக்கு 25 ஆண்டுக ளாக அனுமதி அளிக்காமல் உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக சுற் றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

ஏரிகளின் தேவை என்ன?

பொதுவாக தரைப் பரப்பில் ஒரு தடுப்பை செயற்கையாக உருவாக்கி நீரை தேக்கும் வழிமுறையின் அடிப்படையில் உருவாக் கப்பட்டவை ஏரிகள். எனவே, ஏரிகளில் தரை பரப்பில் அதிகமாக படியும் மண்ணை உரிய கால இடைவெளியில் அகற்றுவது அவசியம் ஏரிகளைச் சுற்றியுள்ள விவசாயப் பகுதிகள் குடியிருப்புகளாக மாறியுள்ளன.

இதனால் ஏரிகள் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டன என்று கூறி, இவற்றை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என ஒரு பிரி வினர் கோஷமிட்டு வருகின்றனர்.

ஆனால், ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதி களில் சாகுபடி பணிகளுக்கு தேவைப் பட்டதைவிட தற்போது மக்களின் தண் ணீர் தேவை பலமடங்கு அதிகரித்துள் ளது.

எனவே, ஏரிகளை முன்பிருந்த தரைப்பரப்பைவிட ஆழப்படுத்தி அதிக அளவில் நீரை சேமிக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது என் கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ஏரிகளின் பராமரிப்பு பொறுப்பு பொதுப்பணித்துறையிடமும், அதில் மண் எடுப்பது தொடர்பான பணிகளுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் கனிமவள துறையிடமும் உள்ளது.

இந்த முரண்பாடுகள் காரணமாக ஏரிகளில் மண் எடுப்பதில் ஊழல் அதிகரித் துள்ளது. இது தொடர்பான நடைமுறைகளும் தெளிவாக இல்லை.

தீர்வு என்ன?

எனவே, ஆற்றுப்படுகை களில் மணல் எடுப்பது முறைப்படுத்தப் பட்டு அரசின் மூலமே மணல் விற்பனை நடைபெறுவது போல, ஏரிகள் உள் ளிட்ட நீர் நிலைகளில் மண் எடுப்பதும் முறைப்படுத்தப்பட்டு அரசின் மூலமே நடைபெற வேண்டும்.

அப்போது தான் ஏரிகள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டு மக்களின் தண்ணீர் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படும்.

நீர் நிலைகள் பாதுகாக்கப்படுவதோடு மண் எடுப்பதில் நிலவும் ஊழலும் கட்டுப்படுத்தப்படும் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

சனி, 18 அக்டோபர், 2008

கட்சி மாறியதற்கு கைமாறு!

சென்னை, அக். 15: ம.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எல்கணேசனுக்கு "விருப் புரிமை' திட்டத்தின் கீழ் சென்னை முகப் பேர் ஏரி திட்டத்தில் மனை ஒதுக்கி தமி ழக அரசு உத்தரவிட் டுள்ளதும.

தி.மு.க.வில்...:

கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ம.தி.மு.க., தி.மு.க. அணியில் இருந்து விலகி அதிமுகவு டன் கூட்டணி சேர்ந்தது. தேர்தல் முடிந்து சில மாதங்கள் கழித்து 2006 டிசம்பர் மாதம் கட்சி யின் அவைத் தலைவராக இருந்த எல். கணே சன், துணை பொதுச் செயலாளராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில நடவடிக்கைகளை எடுத்தனர்.

தி.மு.க. ஆதரவு...:

தாங்கள்தான் உண்மை யான ம.தி.மு.க.வினர் என்று கூறி திமுக தலை வரும் முதல்வருமான கருணாநிதியை எல்கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் சந்தித்தனர்.

இதன் பின்னர் திமுக சார்பில் நடத்தப்ப டும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் ம.தி.மு.க.வினராக இவர்கள் இருவரும்தான் அழைக்கப்பட்டனர்ம.தி.மு.க.வில் உள்ள சிலரை தங்கள் பக்கம் இழுத்து, குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற் சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி வந்தார்.

மேலும், இவர்கள் இருவ ரும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்தும் நீக் கப்பட்டனர்இந்த விவகாரத்தில், வைகோ தலைமையி லான கட்சியே மதிமுக என்றும், கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்ப டுத்த மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், மதிமுக உறுப்பினர் கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என வைகோ அறிவித்திருந்தார்.

ஆனால், கட்சியின் கொறடா உத்தரவை மீறி எல். கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்இதையடுத்து இவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும்
நீக்கப்பட்டனர்.

மனை ஒதுக்கீடு:

இத்தகைய சூழலில் மதிமுக வின் மக்களவை உறுப்பினராக உள்ள எல்கணேசனுக்கு சென்னை முகப்பேர் ஏரித் திட் டத்தில் உயர் வருவாய்ப் பிரிவில் மனை (எண்: 1052) ஒதுக்கப்பட்டுள்ளதுஅரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஒதுக்கீடு செய்யப்படுவதாக மார்ச் 8-ம் தேதி யிட்ட வீட்டுவசதித் துறை அரசாணையில் (2 டி எம்.எஸ். எண்: 157) குறிப்பிடப்பட்டுள்ளது".

முகப்பேர் ஏரி திட்டப்பகுதியில் உள்ள உயர் வருவாய்ப் பிரிவு மனை எண்: 1052-ஐ சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ், அரசு விருப்புரிமை யில் எல். கணேசன் என்பவருக்கு தவணை முறையில் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்படுகி றது' என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட் டுள்ளது.

மனை ஒதுக்கீடு தொடர்பான எந்த ஆவணத் திலும் எல். கணேசன் மக்களவை உறுப்பினர் என்பதைக் குறிப்பிடாமல், சமூக சேவகர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவை உறுப்பினராக உள்ள ஒருவருக்கு அனைத்துச் சலுகைகளும் இருக்கும்போது அவர் தன்னை மக்களவை உறுப்பினராக அடையாளம் காட்டாமல், ஒரு சமூக சேவகர் என்று கூறி அரசின் மனை ஒதுக்கீட்டுச் சலுகை யைப் பெறுவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்சி மாறியதற்காகவா...:

அரசியல் மற்றும் பொது வாழ்வில் நீண்ட நாள் அனுபவம் கொண்டவர் என்ற முறையில் அரசின் விருப்பு ரிமையின் கீழ் மனை ஒதுக்கீடு பெற எல். கணே சன் தகுதியுடையவர்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், அவர் தற்போது மதிமுகவில் இருந்து திமுகவில் சேர்வது என்ற நிலைப் பாட்டை எடுத்த பின்னர், அரசியல் காரணங்க ளுக்காக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

தியாகராய நகரில் ஒரு கிரவுண்ட் நில மதிப்பு ரூ. 5.57 லட்சம்?

சென்னை, செப். 27: சென்னையில் தியாக ராய நகர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு ரூ. 5.57 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை கிரையம் பெற்றவர்களுக்கு வரன்முறைப்படுத்தி அளிப்பது குறித்து தமிழக அரசு வெளி யிட்ட அரசாணையில் நிலத்தின் மதிப்பாக குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

1978-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல் சட் டத்தின் கீழ் உச்சவரம்புக்கு மேல் மிகை நிலம் வைத்திருந்த நில உரிமையாளர்களிடம் இருந்து ஏராளமான நிலங்கள் அர சால் கையகப்படுத்தியது.

ஆனால், இந்த நிலங்களை அவை உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டவை என்பது தெரியாமல் பலரும் வாங்கியுள்ளனர்இவ்வாறு, கிரயம் பெறப்பட்ட நிலங் களை பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட மண்டல மதிப்பின் அடிப்படையில் நிலமதிப்புத் தொகை யினை பெற்றுக் கொண்டு வரன்முறைப்படுத்தலாம் என கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் வரு வாய்த்துறை முதன்மைச் செயலர் அம்புஜ் சர்மா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அர சாணை (எண்: 565) விவரம்:

உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்ப டுத்தப்பட்டவை என்று அறியாமல் கிரயம் பெற்றவர்களது நிலத்தை வரன்முறைப்ப டுத்த 29-7-1998 தேதியிட்ட அரசாணை யின் (எண்: 649) கீழ் நிர்ணயிக்கப்பட்ட நில மதிப்புத் தொகையை செலுத்த வேண்டும்.

இதன்படி, சென்னை நகரக் கூட்டுப்பகுதி யில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நில மதிப்பு விவரங்கள் (ஒரு கிரவுண்ட்): தியாகராய நகர், எழும்பூர், தண்டையார் பேட்டை: ரூ.5,57,500அம்பத்தூர்: ரூ. 22,300; குன்றத்தூர், பூந்த மல்லி, தாம்பரம், ஆலந்தூர், மாதவரம்: ரூ55,750.

மற்ற நகரக்கூட்டுப் பகுதிகளில் நிர்ணயிக் கப்பட்ட விலை விவரம்: திருச்சிராப்பள்ளி: ரூ. 47,388; சேலம்: ரூ1,42,162; கோவை: ரூ. 30.105; திரு நெல்வேலி: ரூ. 12,544.

அரசாணை வெளியிடப்படும் நாளில் நிலத் தின் தற்போதைய உரிமையாளர்கள் இந்த ஆணையின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள். குடியிருப்பு நோக்கத்திற்காக பயன்படுத் தப்படும் நிலம் மட்டுமே வரன்முறைப்படுத் தப்படும் என்ற முந்தைய விதிகள், 31.12.1994- க்குள் வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் தளர்த்தப்படுகின்றன.

குழப்பம்:

உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்திய பின்னர் அந்த நிலம் மோசடியாக கிரயம் செய்யப்பட்டதை தடுக்கத் தவறிவிட்டு, தற்போது நடுத்தரப் பிரிவு மக்களுக்காக என்று கூறி வரன்மு றைப்படுத்துவதாக அரசு முடிவெடுத்ததே பல்வேறு தரப்பினருக்கும் சந்தேகத்துக்குரி யதாக உள்ளது.

நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்காக என்று கூறி 3 கிரவுண்ட் மற்றும் அதற்கு மேலும் வைத்துள்ளவர்களின் நலனுக்காகவே அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக பரவலாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழ கத்தின் நிலத்தின் விலை கடந்த சில ஆண்டு களில் வெகுவாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் விலை கோடிகளில் மதிப்பிடப்படும் தற்போதைய சூழலில் தமிழக அரசோ, 1998-ம் ஆண்டு நிர்ணயிக் கப்பட்ட நிலமதிப்புத் தொகையை வசூலிக்கப் போவதாக அரசாணை வெளியிட்டிருப்பது முதலில் ஏற்பட்ட சந்தேகங்களை உறு திப்படுத்துவதாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சொந்த வீட்டிலும் தொடரும் சிக்கல்...

சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் ராமன். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊரை விட்டு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடியேறிய லட்சக்கணக்கானோரில் இவரும் ஒருவர்.

தனது நிதி நிலை, விலைவாசி உள்ளிட்ட காரணங்களால் ராமன் தனது குடும்பத்தினருடன் புறநகரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.

கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கும் வீட்டு வாடகை, கூடுதல் மின் கட்டணம், அபரிமிதமான முன்பணம் என வருமானத்தில் பெரும் பகுதியை வீட்டின் உரி மையாளருக்கே கொடுக்க வேண்டிய நிலை, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆர்வம் ராமனுக்கும் வந்தது.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலத் தின் விலையை கருத்தில் கொண்டு புறநக ரில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 1000 சதுர அடி பரப் பளவில் 2 படுக்கை அறை வீடு ஒன்றை ரூ20 லட்சத்துக்கு ராமன் வாங்கினார்.

நிலத்தின் உரிமையாளரிடம் அதிகாரம் பெற்ற கட்டுமான ஒப்பந்ததாரரிடம் இருந்து, முறைப்படி ஒப்பந்தம் போட்டு விற்பனையை பதிவு செய்து வாங்கிய அவ ருக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தன.

காரணம், இவர் அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 8 வீடுகள் கட்டப்பட்டதில் 3 வீடு களை அந்த நிலத்தின் உரிமையாளர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்ராமன் உள்பட 6 பேர் இங்கு வீடுகளை வாங்கியுள்ளனர்.

ஆனால், அந்த குடியி ருப்பில் காலியாக உள்ள இடங்கள், மொட்டை மாடி உள்ளிட்ட பொது உப யோக பகுதிகள் தனது கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறி அதிகாரம் செய்ய ஆரம் பித்தார் உரிமையாளர்.

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய வீட்டில் வாகன நிறுத்தும் இடம் உள்பட எந்த இடத்தையும் வீடு வாங்கியவர்கள் முறை யாக பயன்படுத்த அனுமதிக்காமல் உரி மையாளர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்இவர் மட்டுமல்ல இவரைப் போல பலரும் சொந்த வீடு வாங்கியும் வாடகை வீட் டில் இருப்பது போன்ற உணர்விலேயே செய்வதறியாது நிற்கின்றனர்.

சில இடங்களில் உரிமையாளர்கள் வீடு வாங்கியவரின் அனுமதியை பெறாம லேயே அவரது தளத்துக்கு மேல் கூடுதலாக கட்டடம் கட்ட முயற்சிப்பது உள்ளிட்ட பல்வேறு அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறைந்த எண்ணிக்கை வீடுகள் உள்ள குடியிருப்புகள் மட்டுமின்றி 20 மற்றும் 30 வீடுகள் உள்ள குடியிருப்புகளிலும் இத்த கைய அத்துமீறல்கள் நடைபெறுகின்றன.

சொந்த வீடு வாங்கும் போது இது போன்ற பிரச்னைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

நீங்கள் வாங்கும் நிலத்தின் மொத்த பரப் பளவு. அதில் எத்தனை வீடுகள் என் னென்ன அளவுகளில் கட்டப்படுகின்றனஅந்த குடியிருப்பு அமைந்துள்ள நிலத் தில் உங்களுக்கான பங்கு எவ்வளவு என் பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மொத்த நிலத்தில் பங்கிடப்படாத பகுதி களின் அளவு, நிலத்தின் உரிமையாளருக்கு சிறப்பு ஒதுக்கீடு உள்ளதா என்பது குறித்த விவரங்கள் கட்டுமான ஒப்பந்ததாரருட னான ஒப்பந்த ஆவணத்தில் உள்ளதா என் பதை சரிபார்க்க வேண்டும்.

அவ்வாறு ஆவணத்தில் குறிப்பிடப்பட் டுள்ளபடி பொது பயன்பாட்டு இடங்கள் உள்ளனவா என்பதையும் நேரில் பார்த்து உறுதிச் செய்துக் கொள்ள வேண்டும்.

அந்த வளாகத்தில் உங்களுக்குள்ள உரிமைகளை முழுமையாக தெரிந்து கொள்வது அவசி யம்.

4-க்கும் அதிகமான வீடுகள் இருக்கும் பட்சத்தில் வீடு வாங்கியவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற் படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் உரிமையாளரின் தொல்லைகளை ஒற் றுமையுடன் சமாளிக்கலாம்.

இது போன்ற பிரச்னைகளில் சிக்கி அவ திப்படுபவர்கள் அந்த வீட்டை தங்களுக்கு விற்ற கட்டுமான ஒப்பந்ததாரரிடம் போட்ட ஒப்பந்த விதிகளின் அடிப்படை யில் நீதிமன்றத்தை அணுகி பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

சங்கம் இல்லாவிட்டா லும், வீடு வாங்கிய அனைவரும் இத்த கைய பிரச்னைகளுக்காக தனித்தனியாக வும் நீதிமன்றத்தை அணுகலாம்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

லஞ்ச ஒழிப்புத்துறை உளவுப் பிரிவா?

சென்னை, செப். 21: லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணைக்கு பல் வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வலுக்கிறது.

இவ்வாறு விலக்கு அளிக்கப்படுவதால் ஊழல் மற் றும் முறைகேடுகள் அதிகரிக்கும் என முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் என். விட்டல் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித் துள்ளார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் 24(4) பிரி வின் படி மாநில அரசு எந்தெந்த துறைகளுக்கு விலக்கு அளிக்கலாம் என அதிகாரம் வழங்குகிறது.

ஆனால், இந்த பிரிவின்படி மாநில அரசு தனது அதி காரத்தை பயன்படுத்தி உளவு மற்றும், தேச பாது காப்பு அடிப்படையிலான துறைகளுக்கு மட்டுமே தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க முடியும்.

இவ்வாறு, விலக்கு அளிக்கப்பட்ட துறையில் ஊழல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக தக வல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட் பதை தடுக்க முடியாதுமேலும், உளவு, தேச பாதுகாப்பு தொடர்பானவை மற்றும் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர் பான கேள்விகளுக்கும் பதில் அளிப்பதில் இருந்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் 8 (1) (எச்) பிரி வின்படி ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஊழல் புகார்களின் மீதான புலனாய்வின் ஒரு பகு தியாக புகார் தெரிவிக்கப்படும் நபர் / அலுவலகத் தின் பணிகளை ரகசியமாக கண்காணிப்பது என்ற நிலையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறையின் உளவுப் பணிகள் அமைகின்றன.

இந்த நிலையில், தேச பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான உளவு பணிகளில் ஈடுபடாத லஞ்ச ஒழிப்புத் துறை, கண்காணிப்பு ஆணையத்துக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டு அதிக எண்ணிக்கையில் மனுக்கள் வருவதால் அது லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கமான பணிகளை பாதிக்கும் என்பதால் இந்த விலக்கு அளிக்கப்படுவதாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர் திருத்தத் துறை அரசாணையில் (எம்.எஸ். 158) குறிப் பிடப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

என். விட்டல்:

மத்திய அரசின் முன்னாள் தலைமை கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற என். விட்டல் கூறியது:

தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப் பட்ட ஆரம்ப நிலையில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தில் விசாரணையில் இருக்கும் வழக்குக ளில் தொடர்புள்ளவர்கள் தங்களைப் பற்றி யார் புகார் அளித்தது என்பது உள்ளிட்ட விவரங்களை பெறுவதற்கு இந்தச் சட்டத்தை தவறாக
பயன்படுத்தினர்.

இதற்காக மட்டுமே, விசாரணையில் இருக்கும் வழக்குகள் தொடர்பான விவரங்களை இந்த சட்டத் தின் படி அளிப்பது தடை செய்யப்பட்டது.

ஆனால், பொது மக்களுக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ள துறைகளுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால் அது அங்கு நிர்வாக வெளிப்படைத் தன்மையை குறைத்து ஊழல் அதிகரிக்க வழிவகுக்கும் என்றார் விட்டல்.

விலக்கு ஏன்?

மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு மற் றும் கண்காணிப்பு துறை, விசாரணையில் இருக்கும் வழக்குகள் நீங்கலாக மற்ற வழக்குகள் குறித்த விவரங் களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்து வருகிறது.

அந்த துறைக்கு தேவைப்ப டாத விலக்கு ஒரு மாநிலத்தில் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எந்த வகையில் தேவைப்படுகிறது என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர்.

போராட்டம்:

நீதி மன்றங்களில் விசாரணை முடிவ டைந்த வழக்குகள் குறித்த அனைத்து விவரங்களும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்ப டும் போது மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மட்டும் விலக்கு அளிப்பது தேவையற்ற ஒன்று என ஐந்தாவ துத் தூண் அமைப்பின் தலைவர் விஜய்ஆனந்த் தெரி வித்தார்.

மேலும், தமிழகத்தில் செயல்படும் பல்வேறு ஊழல் எதிர்ப்பு இயக்கங்களை ஒருங்கிணைத்து இந்த அரசாணையை நீக்கக் கோரி போராடுவோம் என்றார் அவர்.

லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளைமூடிமறைக்க அரசாணை?

சென்னை, செப். 20: லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கு தகவல் பெறும் உரிமைச் சட் டம் பொருந்தாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் அண்மைக்காலமாக அதிக ரித்து வரும் முறைகேடுகள் தொடர்பான புகார்களுக்கு பதில் அளிப்பதை தவிர்ப்பதற் காகவே இந்த அரசாணை பிறப் பிக்கப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

அரசு நிர்வாகத்தில் வெளிப்ப டைத் தன்மையை உறுதி செய் வது மற்றும் லஞ்ச ஊழலை ஒழிக்க உதவும் வகையில் தக வல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு நிறைவேற்றப் பட்டது.

2-வது சுதந்திரம்:

அரசின் நிர்வாக நடைமுறையை மக்கள் தெரிந்து கொள்வதைத் தடுத்த இரும்புத்திரையை விலக்கும் வகையில் இந்தச் சட்டம் அமைந்திருந்தது.

பல்வேறு துறைகளில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட பல பிரச்னைகளுக்கு இதனால் தீர்வு ஏற்பட்டதுஇந்தச் சட்டத்தின் 24 (2) வது பிரிவின்படி, நாட்டின் பாது காப்பு தொடர்பான தகவல்க ளும், 8 (1) (எச்) பிரிவின்படி விசாரணையில் குற்ற வழக்குக ளின் முக்கிய தகவல்களும் அளிக்க முடியாது என்று விலக்கு தரப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் விசாரணை அமைப்புகளின் சுதந்திரத் தன்மையை உறுதி செய்வதற்காக இந்த விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

லஞ்ச ஒழிப்புத்துறை:

மற்ற துறைகளில் லஞ்ச ஊழலை ஒழிப்பதற்காக தனி அதிகாரத் துடன் லஞ்ச ஒழிப்புத்துறை யும், மாநில கண்காணிப்பு ஆணையமும் ஏற்படுத்தப்பட் டனபுகாரின் உண்மைத் தன்மை யைப் பொறுத்து அரசின் எந்த நிலையில் இருப்பவரானாலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவ தற்கான அதிகாரம் இந்தத் துறைக்கு அளிக்கப்பட்டுள் ளது.

ஆனால், அண்மைக்கா லமாக லஞ்ச ஒழிப்புத் துறை யில் முறைகேடுகள் அதிகரித் துள்ளதாக புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.

கடிதம் வாங்க மறுப்பதா?

இந்தத் துறையின் செயல்பாடு கள் குறித்து விவரங்களை தெரி விக்குமாறு, சில மாதங்களுக்கு முன்னர் தகவல் பெறும் உரி மைச் சட்டத்தின் கீழ் அனுப்பப் பட்ட கடிதத்தை துறையில் பொதுத் தகவல் அதிகாரியாக உள்ள மத்திய சரக எஸ்.பிவாங்க மறுத்தார்.

மாநில தகவல் ஆணையம், லஞ்ச ஒழிப்புத் துறையின் உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு இது தொடர்பாகப் புகார் தெரி விக்கப்பட்டது. இந்தப் பிரச்னையின் தீவி ரத்தை உணர்ந்த அப்போதைய தலைமைச் செயலர் எல்.கேதிரிபாதி, தகவல் பெறும் உரி மைச் சட்டத்தின் கீழ் வரும் கடி தங்களை வாங்க அதிகாரிகள் மறுக்கக்கூடாது, அவ்வாறு மறுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று குறிப்பிட்டு சுற்ற றிக்கை அனுப்பினார்.

கடந்த சில மாதங்களாக அமைச்சர்கள், அதிகாரிகள் மீது பல்வேறு தரப்பில் இருந்து ஊழல் புகார்கள் வருவது அதிக ரித்து வருவதாகக் கூறப்படுகி றது.

அதிகாரிகள் மீதான ஏராள மான வழக்குகள் அந்தந்த துறையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் நிலுவையில் கிடக் கின்றனபணியாளர் மற்றும் நிர்வாகத் துறை சார்பில் அமைக்கப் பட்ட குழுவினர், முதல்வர் அலுவலகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட முக்கிய துறை அலு வலகங்களை இந்த சட்டத்தில் இருந்து விடுவிப்பது குறித்து ஆய்வு செய்ததாகவும், இதில் தற்போதைக்கு லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் கண்காணிப்பு ஆணையத்தை மட்டும் முதலில் விடுவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகி றது.

எதிர்ப்பு:

சட்டத்தில் குறிப்பி டப்பட்டுள்ள விதிமுறைக ளுக்கு உட்பட்டு உரிய
தகவல்களைப் பெற மக்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் விதமாக இந்த அரசாணை அமைந்துள்ளது என ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு இயக்கமான ஐந் தாவது தூண் அமைப்பின் பொதுச் செயலாளர் ரத்தின பாண்டியன் தெரிவித்தார்.

மக்கள்நலனுக்கு விரோத மான இந்த ஆணையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே அனைத் துத் தரப்பினரின் கருத்து என் றார் அவர்.

வியாழன், 4 செப்டம்பர், 2008

கட்டட விதி மீறல்: தமிழக அரசின் நிலை என்ன?

சென்னை, செப். 3: விதி மீறல் கட்டடங்கள் விவகாரத்தில் தமி ழக அரசு எடுத்துவரும் நிலைப் பாடு முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாக பல்வேறு தரப்பின ரும் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட் டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதி மீறல்களை அங்கீகரிக்கும் அர சின் வரன்முறைப்படுத்தும் திட் டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விதி களை மீறி கட்டப்பட்ட சுமார் 30 ஆயிரம் கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டது.

இது தொடர்பான புகார்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணிக ளுக்காக 30 உறுப்பினர் கொண்ட கண்காணிப்புக்கு ழுவை நீதிமன்றம் அமைத்தது.

உச்ச நீதிமன்றத்தில்...:

எனி னும் மக்கள் நலன்கருதி அளிக் கப்பட்ட நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நிறைவேற்றாமல், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசின் இந்த முயற்சியை கடுமை யாகச் சாடிய உச்ச நீதிமன்ற நீதிப திகள் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தனர்.

அவசரச் சட்டம்:

இதையடுத்து வேறு வழி இல்லாமல் கட்ட டத்தை இடிக்க வேண்டிய தமி ழக அரசு, உயர் நீதிமன்றத் தீர்ப் பின்படி விதிமீறல் கட்டடங் களை இடிப்பது தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து, விதி மீறலுக்கு ஆதர வாக அவசரச் சட்டத்தை 2007 ஜூலையில் பிறப்பித்தது.

இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவ சரச் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. ஆனால் விதி மீறல் கட்டடங்களை பாதுகாப்ப தில் விடாப்பிடியாக இருந்த தமி ழக அரசு இதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு, தற்போது நிலுவையில் உள்ள நிலையில் அவசரச் சட் டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக் கப்பட்டுள்ளது.

மேலும் கட்டட விதிகளை மாற்றி அமைப்பதற்காக 1971-ம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊர மைப்புச் சட்டத்தை திருத்துவ தற்கு உரிய பரிந்துரைகளை அளிக்குமாறு நீதிபதி மோகன் தலைமையில் ஒரு குழுவை தமி ழக அரசு அமைத்தது.

கட்டுமான வல்லுநர்களிட மும், நகரமைப்பு வல்லுநர்களிட மும் கருத்துக் கேட்க வேண்டிய நீதிபதி மோகன் குழு, தியாகராய நகர் உஸ்மான் சாலை வணிக வளாகங்களின் உரிமையாளர் களை அண்மையில் அழைத்து அவர்களது கருத்துகளை கேட் டுப் பெற்றுள்ளது.

இருப்பினும் தற்போது விதி களை மீறி கட்டப்பட்டுள்ள கட் டடங்களை இடிப்பது என்பது தவிர்க்க முடியாதது என்பதே அந்தக் குழுவில் இடம் பெற்றுள் ளவர்களின் பொதுவான கருத் தாக இருந்து வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் விபத்து:

இந்த நிலையில், காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத் தில் திங்கள்கிழமை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கடை யின் ஊழியர்கள் இருவர் இறந் துள்ளனர். இது தொடர்பாக கடையின் மேலாளரும், கண்கா ணிப்பாளரும் கைது செய்யப்பட் டுள்ளனர்.இருப்பினும், விதி மீறலுக்குக் காரணமான உண்மையான குற்ற வாளிகள் இதுவரை கைது செய் யப்படவில்லை.

தற்போதைய சூழலில் இந்தக் கட்டடத்தை இடிப்பது தவிர்க்க முடியாதது.

அரசின் குழப்பம்:

இந்த நிலை யில் சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து குறித்து கருத்துத் தெரி வித்த முதல்வர் கருணாநிதி, ""விதி முறைகளின்படி கட்டப்பட்டி ருந்தால் இத்தகைய பெரும் விபத்தை தவிர்த்திருக்கலாம். நீதி மன்றங்களில் தடை பெறலாம், விதிமுறைகளை மீறி செயல்பட லாம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை அடுக்குமாடிகள் மட்டு மல்ல சாதாரணக் கட்டடத்தின் பாதுகாப்பைக்கூட உறுதிப்ப டுத்த முடியாது என்பதற்கு இந் தச் சம்பவம் ஓர் உதாரணம்.'' என கூறியுள்ளார்.

விபத்துக்குக் காரணம் விதி மீறல்தான் என கருத்துத் தெரி விக்கும் முதல்வர் கருணாநிதி, இதே விதிமீறல் கட்டடங்களைப் பாதுகாக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பித்தது ஏன் என பல்வேறு தன்னார்வ அமைப்பி னரும், கட்டுமான வல்லுநர்க ளும் கேள்வி எழுப்புகின்றனர்.

தீர்வு என்ன?

விதி மீறல் கட்ட டங்களுக்கு ஆதரவாக உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடு வதை விடுத்து நேர்மையான முறையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்ப டுத்த வேண்டும்.

இவ்வாறு முன்னர் ஒரு விதமா கவும், விபத்து ஏற்பட்ட சமயத் தில் ஒரு விதமாகவும், கருத்துத் தெரிவிப்பதை விடுத்து, விதி மீறல் கட்டடங்களை அடுத்த கட்டடத்துக்கும், அங்கு வந்து செல்லும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு இடிப்ப தற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு முன்வர வேண்டும் என்பதே தற்போதைய தேவை.

திங்கள், 1 செப்டம்பர், 2008

தலைமைச் செயலகத்தில் நிம்மதிப் பெருமூச்சு!

சென்னை, ஆக. 31: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த எல்.கே.திரிபாதி ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெற்றதை அடுத்து, பல்வேறு துறை அமைச் சர்களும், உயர் அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சுவிடத் தொடங்கியுள்ளனர்.

1971-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எல்.கே. திரிபாதி 1972-ம் ஆண்டு நில வருவாய்த்துறை அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார்.தமிழக அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் பணி புரிந்திருந்த அவர் 2005-ம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றவுடன், முதல்வர் பதவியேற்ற நாளிலேயே தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

முதல்வர் கருணாநிதியிடம் தனக்கு இருந்த நெருக்கம் மூலம் அரசின் அதி கார மையங்களாக இருந்த மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, முதல்வரின் துணை வியார் ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோரிடம் நெருங்கிய தொடர்பு கொண் டிருந்தார் திரிபாதி.

இதனால், அரசு நிர்வாகத்தில் இவர்கள் தெரிவிக்கும் அனைத்து விருப்பங்களும் திரிபாதி மூலமே மற்ற அமைச்சர்களுக்கும், அதிகா ரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு அந்தந்த பணிகள் முடிக்கப்பட்டன.

தலைமைச் செயலர் என்ற முறையில் அனைத்துத் துறைகளின் நிர்வாக நடவ டிக்கைகளில் திரிபாதி அளவுக்கு அதிகமாக தலையிட்டதாகவும், இதனால் அமைச்சர்களும், பல்வேறு அதிகாரிகளும் சுயமாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு துறைகளில் பல்வேறு விதங்களில் திரிபாதியின் தலையீடு இருந்தாலும், குறிப்பாக, சி.எம்.டி.ஏ., நகர் மற்றும் ஊர மைப்புத் துறைகளில் இது அதிகமாகவே இருந்துள்ளது. சென்னைக்கு அருகே துணை நகரங்கள் அமைப்பது குறித்த அரசின் அறிவிப்புக்கு மூலகார ணமாக இருந்த திரிபாதி, அத் திட்டம் கைவிடப்படுவதாக அரசு அறிவித்த பிற கும் தான் பங்கேற்ற கூட்டங்களில் துணை நகரங்களின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

தலையீடு:

இது மட்டுமின்றி, புதிய குடியிருப்புத் திட்டங்கள், பெரிய அள விலான மனைப் பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள் ஆகியவற் றுக்கு அனுமதி அளிப்பதற்கான நிர்வாக நடைமுறைகளில் திரிபாதியின் தலை யீடு சற்று அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தங்களுக்குள் குமுறிக் கொண்டிருந்தனர்.

உதாரணமாக, சென்னை அமைந்தகரையில் கட்டப்படும் ஒரு மல்டி பிளக்ஸ் கட்டடத்தில் இருந்த சில விதிமீறல்கள் இருந்தன. இவற்றை சரி செய் தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறிவந் தனராம்.

ஆனால், திரிபாதியின் தலையீட்டால் அனுமதி அளிக்கப்பட்டது என்றும் சி.எம்.டி.ஏ. அலுவலகம் தரப்பில் கூறப்படுகிறது.

யாருக்காக இந்த நில உச்சவரம்பு சலுகை?

சென்னை, ஆக. 31: தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங் களை வரன்முறைப்படுத்தி கிரை யம் பெற்றவர்களுக்கே அளிப் பது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆளும்கட்சியி னர் உள்ளிட்ட அரசியல் பிரமு கர்கள் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நில உரிமை காரணமாக சமு தாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு களை போக்கவும், நிலச் சுவான் தார்களிடம் முடங்கிக்கிடக்கும் ஏராளமான நிலங்களை விவசா யிகள் உள்ளிட்ட ஏழை மக்க ளுக்கு பிரித்தளிக்கவும் 1961-ம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத் தச் சட்டம் (உச்சவரம்பு நிர்ண யத்துக்காக) கொண்டுவரப்பட் டது.

இருப்பினும், 1960-களின் பிற்ப குதியில் திமுக ஆட்சிக்கு வந்தவு டன் இந்த சட்டத்தில் 1970, 1972 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு உச்சவரம்புக்குட் பட்டு அனுமதிக்கப்படும் நிலத் தின் அளவு குறைக்கப்பட்டது.

இந்த சட்டத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு நிலச்சுவான்தார்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் கள் கையகப்படுத்தப்பட்டன.இதில், மத்திய அரசின் 1976-ம் ஆண்டு நகர்ப்புற நில உச்சவரம் புச் சட்டத்தை பின்பற்றி 1978-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற் றப்பட்டது.

முன்தேதியிட்டு 1976-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத் தப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் 2,381 ஹெக்டேர் நிலம் கையகப் படுத்தப்பட்டது. இதில் 109 ஹெக்டேர் நிலங்கள் தொடர் பான வழக்குகள் நீதிமன்றங்க ளில் நிலுவையில் உள்ளன.

அரசின் கொள்கை விளக்க குறிப்புகளில் தெரிவிக்கப்பட் டுள்ள விவரங்களின் அடிப்படை யில், 343 ஹெக்டேர் நிலம் பல் வேறு அரசுத் துறைகளின் திட் டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள் ளது. 55 ஹெக்டேர் நிலங்கள் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் உள் ளன.

538 ஹெக்டேர் நிலம் அரசி யல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல் வேறு தரப்பினரால் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளன. 1,336 ஹெக் டேர் நிலம் உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக வைக் கப்பட்டன.

1999-ம் ஆண்டு திமுக ஆட்சி யில், 1978-ம் நகர்ப்புற நில உச்சவ ரம்பு சட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட திருத்தத்தின் மூலம் 1266.68 ஹெக்டேர் நிலம் அதன் உரிமையாளர்களுக்கே திருப்பி அளிக்கப்பட்டன.

அமைச்சரவை முடிவு:

சனிக் கிழமை நடைபெற்ற அமைச்ச ரவை கூட்டத்தில், 1978-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ் நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல் சட் டத்தின்படி கையகப்படுத்தப் பட்டு மேல் மிகை வெற்று நிலம் என்று அறிவிக்கப்பட்ட நிலங் களை கிரையம் பெற்றவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு வரன்முறை செய்துவிடலாம் என முடிவெ டுக்கப்பட்டுள்ளது.

யாருக்காக?

உச்சவரம்பு சட் டப்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் கிரையம் செய்யப்பட் டுள்ளது என அரசு கூறியுள்ளது.இவ்வாறு கிரையம் பெறுவது செல்லாது என்றும் அப்படி கிரை யம் பெற்றவர் அதில் உரிமை கோர முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் 2000-ம் ஆண்டு ஒரு வழக்கில் தீர்ப்பளித் துள்ளது.

ஆனால், சட்டவிரோதமாக நடைபெற்றுள்ள கிரையங்களை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசின் தற்போதைய முடிவு உள் ளது. இவ்வாறு சட்டவிரோத மாக யார், யார் அரசு நிலத்தை கிரையம் செய்தார்கள் என கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை உரியவர் களுக்கு ஒதுக்க வேண்டிய அரசு கிரையத்தை அங்கீகரிப்பது ஏன்?

நிலங்களை தெரியாமல் வாங்கி அதில் வீடு கட்டி குடியி ருக்கும் நடுத்தர மக்களின் நலன் கருதி முடிவெடுப்பதாக கூறுவ தென்றால், ஒன்றரை கிரவுண்டு வரையிலான நிலங்களை மட்டும் மதிப்புத் தொகை கூட வாங்கா மல் வரன்முறை செய்து தரலாம்.

நிலத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் நகர்ப்புறத்தில் நடுத்தர மக்கள் அரை கிரவுண்டு நிலத்தை கூட வாங்க முடியாத நிலையில் ஒன்றரை கிரவுண்டு நிலம் வைத்திருப்பவர்களை நடுத் தர பிரிவு மக்களாக அரசு கருது வது வியப்பாக உள்ளது.

ஒன்றரை கிரவுண்டுக்கு மேல் மூன்று கிரவுண்டு வரையும் அதற்கு மேலும் பரப்பளவு கொண்ட (அரசு கையகப்படுத்தி வைத்துள்ள) நிலங்களை பெரும் பாலும் அரசியல் பிரமுகர்களே கிரையம் செய்து வைத்திருக்கின் றனர்.

இதனால், நில உச்சவரம்பு சட் டத்தின் அடிப்படை அம்சத் துக்கு எதிராக நடப்பவர்களை, அங்கீகரித்து அந்த நிலங்களை அவர்களுக்கே வரன்முறைப்ப டுத்தி அளிக்க வேண்டிய அவசர அவசியம் என்ன என்பதே அனைத்து தரப்பினரிடம் தற் போது எழுந்துள்ள கேள்வி.

அரசியல் பின்னணி கொண்ட பலர் கல்வி நிறுவனம், அறக்கட் டளை, தொழிற்சாலை உள்ளிட் டவை பெயரில் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலங்களை அவர்க ளுக்கே அளிப்பதற்காகவே அரசு இவ்வாறு முடிவெடுத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அடுக்குமா டிக் கட்டடங்களை ஏழைகளின் நலனுக்காக என்று கூறி வரன்மு றைபடுத்திய விவகாரம் நீதிமன் றத்தில் நிலுவையில் உள்ள நிலை யில் இந்த அடுத்த வரன்முறை தேவையா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

புதன், 20 ஆகஸ்ட், 2008

குடிசை மாற்று வாரியத்தில் அதிகரிக்கும் குளறுபடிகள்

சென்னை, ஆக. 18: மனை ஒதுக் கீடு செய்யப்பட்ட நாளுக்கு முன்தே தியிட்டு தவணை நிர்ணயம், கூடுதல் தொகையை வசூலிப்பது என தமிழ் நாடு குடிசை மாற்று வாரியத்தில் நிர் வாகக் குளறுபடிகள் அதிகரித்துள் ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரி யம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான நிலங்களை தேர்வு செய்து அதில் குடியிருப்புகளை கட்டி ஏழை எளிய மக்களுக்கு அளித்து வருகிறது.

வாரிய நிர்வாகத்தில் உள்ள சிலர் தங்கள் விருப்பம் போல் செயல்படுவ தால் தற்போது குளறுபடிகள் அதிக ரித்துள்ளன என பல்வேறு தரப்பின ரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

உதாரணமாக, சென்னை எம்.ஜி.ஆர். நகர் திட்டப்பகுதியில் பி. அழகிரி என்பவருக்கு 0.77 சதுர மீட்டர் பரப்பளவுள்ள மனை (எண்: 1309) 1986-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.

கிரையத்தொகை ரூ. 2,980 என்ற விலையில் இந்த மனை ஒதுக் கீடு செய்யப்பட்டது.தவணை முறையில் இந்த கிரையத் தொகையை அழகிரி 1988-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதிக்குள் செலுத்தி அதற்கான ரசீதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து தவணைத் தொகைகளையும் செலுத்தி முடித் ததை அடுத்து நிலுவை ஏதும் இல்லை என்பதால் மாநகராட்சியி டம் கட்டட அனுமதி பெறுவதற் கும், வங்கியில் கடன் பெறுவதற்கும் தடையின்மைச் சான்றிதழ் ஆகி யவை 1988-ம் ஆண்டிலேயே வழங் கப்பட்டது.

கூடுதல் கட்டணம்:

1988-ம் ஆண்டிலேயே அனைத்து தவணை களும் செலுத்தி முடிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ. 14,782 செலுத்துமாறு 8-6-2007-ல் குடிசை மாற்று வாரிய நிர்வாகம் அழகி ரியை அறிவுறுத்தியுள்ளது.

தான் ஏற்கெனவே தவணைகள் செலுத்தியதற்கான ரசீதுகள் உள் ளிட்ட ஆவணங்கள் குறித்து அழ கிரி தெரிவித்த விவரங்களை வாரிய நிர்வாகம் ஏற்காததால், கூடுதல் தொகையை 2007 ஜூலை மாதம் 27- ம் தேதி அவர் செலுத்தியுள்ளார் (ரசீது எண்: 36477/78/79).

கைகொடுத்த தகவல் பெறும் உரிமை சட்டம்: இவ்வாறு விதிக ளுக்கு புறம்பாகக் கூடுதல் தொகை வசூலித்தது தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சதீஷ், கோபால கிருஷ்ணன் ஆகியோர் மூலம் குடிசை மாற்று வாரியத்துக்கு மனு செய்யப்பட்டது.

அதிகாரி பதில்:

இதையடுத்து, இந்த பிரச்னை குறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் டி.கே. ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். நகர் அழகிரிக்கு கடந்த ஜூலை 15-ம் தேதியிட்ட ஒரு கடி தத்தை அனுப்பினார்.

""உங்கள் கணக்கு தணிக்கை செய் யப்பட்டதில் கூடுதல் தொகை வசூ லிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.எனவே, தாங்கள் கடைசியாகச் செலுத்திய கூடுதல் தொகைக்கான அசல் ரசீதை அளித்து ரூ. 10,156-ஐ திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.

தவணை நாள் மாற்றம்:

ரூ. 14,782 கூடுதலாக வசூலித்தக் குடிசை மாற்று வாரியம் ரூ. 10,156 திரும்ப அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.இந்த வேறுபாடு தொடர்பாக குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் அளித்துள்ள பதில்:

எம்.ஜி.ஆர். நகர் திட்டத்தில் அழ கிரி என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட மனையின் அளவை ஆய்வு செய்ததில் 0.77 சதுர மீட்டர் மனை ஒதுக்கப்பட்டதில், அவரிடம் 0.75 சதுர மீட்டர் பரப்பு மட்டுமே உள் ளது தெரிய வந்துள்ளது.இதையடுத்து அவரது ஒதுக்கீட்டு ஆணையில் மனையின் பரப்பளவு 0.75 சதுர மீட்டர் என திருத்தம் செய் யப்பட்டுள்ளது.

மேலும், எம்.ஜி.ஆர். நகர் திட்ட பகுதியில் மற்ற பய னாளிகளுக்கு 1-10-1981 தேதியிட்டு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட் டுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு அழகிரியின் மனை ஒதுக் கீட்டுக்கான தவணை காலமும் 1-9- 1986 என்று இருப்பது 1-10-1981 என திருத்தம் செய்யப்படுவதாக டி.கே.ராமச்சந்திரன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒதுக்கீட்டு நாளுக்கு முன்தேதி யிட்டு தவணையை கணக்கிட்டு, தவ றுதலாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையில் ஒரு பகுதியை அதற்கு ஈடாக கணக்கு காட்டி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் குளறு படி செய்துள்ளது உறுதியாகிறது.

இவர் மட்டுமல்ல குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட ஏராளமான ஒதுக்கீட் டுதாரர்கள் தங்கள் கணக்குகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை புரிந்துக் கொள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு வருவது தொடர்கதையாக மாறி வருகிறது.

சரியா?

ஒதுக்கீட்டு தேதியை மாற் றுவதற்கு விதிகளில் இடம் இருப்ப தாக வாரிய அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். ஆனால், 1986-ம் ஆண்டு பெறப்பட்ட விண்ணப்பத்துக்கு தவணை 1981-ம் ஆண்டு தொடங் கும் என குறிப்பிடுவதை எப்படி ஏற்க முடியும் என்பதே அனைத்து தரப்பினரிடமும் தற்போது எழுந் துள்ள கேள்வி.

திங்கள், 4 ஆகஸ்ட், 2008

செராமிக் டைல்ஸ் வாங்கும்போது...

தனியார் கட்டுமான நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையில் தாங்கள் கட்டும் வீடுகளை வாங்க நடுத்தர வருவாய்ப் பிரிவினரை ஈர்ப்பதில் போட்டி ஏற்பட் டது.இதன் விளைவாக, பங்களாக்களில் மட்டும் இருந்து வந்த டைல்ஸ், பளிச்சென வண்ணங்களை பூசுவது, மாடு லர் சமையல் அறை கட்டமைப்புகளை அமைப்பது உள் ளிட்ட வசதிகள் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீடு களிலும் கிடைக்கும் சூழல் உருவானது.

உங்கள் வீட்டை கட்டும் பணியை ஒப்பந்ததாரரிடம் ஒப் படைத்திருந்தாலும், வீட்டிற்கு போடப்படும் டைல்ஸ்களை தேர்வு செய்ய வேண்டியது நீங்கள் தான்.எனவே, இவ்வாறு செராமிக் டைல்ஸ்களை தேர்வு செய் யும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் விவரம்:

(1) ஒரு அடிக்கு ஒரு அடி முதல் 2 அடிக்கு 2 அடி நீள அகலத்தில் உள்பட பல்வேறு அளவுகளில் டைல்ஸ்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

(2) உங்கள் வீட்டு அறையின் பரப்பளவை பொறுத்து அங்கு போடுவதற்கான டைல்ஸின் அளவை முடிவு செய்ய வேண்டும்.

(3) பெரும்பாலும் நிறுவன தயாரிப்புகளாக வரும் டைல்ஸ்களை வாங்குவது நல்லது.

(4) இணைப்புகள் தெரியக் கூடியது, இணைப்புகள் தெரியாதது என இரு வகையில் டைல்ஸ்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அழகாக இருக்கும் வகையை தேர்வு செய்வது நல்லது.

(5) மார்பிள் போன்ற வடிவங்களிலும் டைல்ஸ்கள் விற் பனைக்கு வந்துள்ளன. உங்கள் பட்ஜெட் மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ற வகையை தேர்வு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு.

(6) பொதுவாக மொசைக் போடுவதை விட டைல்ஸ்கள் போடுவதற்கும், பராமரிப்பதிலும் செலவு குறைவானது என கூறப்படுகிறது. ஒரு முறை போடப்படும் டைல்ஸ்கள் முறையாக பராமரித்தால் 10 ஆண்டுகள் வரை பயன்பாட் டில் இருக்கும்.

(7) மேலும், ஒப்பந்ததாரர் கூறும் நிதி நிலைமைக்குள் தேர்வு செய்வது என்று இல்லாமல் சற்று கூடுதல் செலவா னாலும் உங்கள் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகை டைல்ஸ்களை தேர்வு செய்வது திருப்திகரமாக இருக்கும்.

(8) வீட்டுக்கு பளிச்சென இருக்கும் என்பதற்காக அதிக வெண்மை நிற டைல்ஸ்களை தேர்வு செய்வதை விட வெண்மை குறைவான வகையை தேர்வு செய்வது பராம ரிப்புக்கு எளிதானதாக இருக்கும்.

(9) நீங்கள் தேர்வு செய்யும் வடிவமைப்பு அடுத்த சில ஆண்டுகளில் மார்க்கெட்டில் இல்லாமல் போக வாய்ப்புள் ளது. எனவே, வீட்டில் ஏதாவது பொருள் விழுந்து டைல்ஸ் உடைந்தால் அதற்கு மாற்றாக வேறு வடிவமைப்பு டைல்ûஸ அங்கு பயன்படுத்தும் நிலையைத் தவிர்க்க, தேர்வு செய்யும் போதே முன்யோசனையுடன் கூடுதலாக 10- டைல்ஸ்களை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

(10) நிறுவன தயாரிப்புகள் பெரும்பாலும் சதுர அடி ரூ.20 முதல் வகைக்கு ஏற்ப பல்வேறு விலைகளில் கிடைக் கின்றன. எனினும், விலை குறைவு என்பதற்காக நிறுவன தயாரிப்புகள் அல்லாத வகைகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

கழுத்தை நெரிக்கும் கட்டுமானச் செலவு

பெ ட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு கட்டுமானத்துறையையும் விட்டு வைக்கவில்லை.

சிமென்ட், கம்பி, மணல், ஜல்லி போன்ற அத்தியாவசிய கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவில் ஏற்படும் சிறு மாற்றங்களும் கட்டுமானத் துறையை பாதிக்கும் சூழல் தற்போது உருவாகியுள் ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்த பட்ச கட்டுமானச் செலவு ஒரு சதுர அடிக்கு ரூ. 900-ஆக இருந்தது.சிமென்ட், கம்பி போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டு இறுதி யில் இது ரூ. 1,100-ஆக அதிகரித்தது.இது தற்போதைய விலை உயர்வு கார ணமாக ரூ. 1,500 வரை அதிகரித்துள்ளது.

சிமென்ட்:

கடந்த ஆண்டு தொடக்கத் தில் ஒரு மூட்டை ரூ. 200-ஆக இருந்த சிமென்ட் விலை ஆண்டு இறுதியில் ஒரு மூட்டை ரூ. 280 -ஆக அதிகரித்தது.இதனால் நாடு முழுவதும் கட்டுமானப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, மலிவு விலையில் சிமென்ட் விற்பனை, வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்வது உள்ளிட்ட தமிழக அரசின் சில நடவடிக் கைகள் காரணமாக சிமென்ட் விலை ஒரு மூட்டை ரூ. 235- ஆக குறைந்தது.

ஓரிரு மாதங்களில் சிமென்ட் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. இதைய டுத்து சென்னை உள்ளிட்ட தமிழக நகரங் களில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.280 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரித்து ஒரு மூட்டை விலை ரூ. 300 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.டி.எம்.டி. கம்பி விலை கடந்த 6 மாதங் களில் டன்னுக்கு ரூ. 10 ஆயிரம் அதிக ரித்துள்ளது.

மணல் விலை கடந்த 6 மாதங்களில் ஒரு லோடுக்கு ரூ. 2 ஆயிரம் வரை அதி கரித்துள்ளது.இதேபோல ஜல்லி உள்ளிட்டவற்றின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது.அதிக ஆடம்பரம் இல்லாமல் அடிப்ப டைத் தேவைகளுடன் கட்டுவது என் றால் ஒரு சதுர அடிக்கு குறைந்த பட்ச செலவு ரூ. 1,500 ஆகிறது என இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மையத் தலைவர் எம்.கே. சுந்தரம் கூறுகிறார்.

கட்டடத்தின் வரைபடத்துக்கு அனுமதி வாங்குவது, குடிநீர்- கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட விவகாரங்களை வீட்டின் உரி மையாளரே பார்த்துக் கொண்டால் மட் டுமே இந்தத் தொகையில் வீடு கட்ட முடி யும்.

கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு மட்டுமல்லாது தொழிலாளர்க ளின் ஊதியம், அரசின் அபிவிருத்திக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயர் வும் கட்டுமானச் செலவுகள் அதிகரிக்க காரணம் என்றார் சுந்தரம்.

இப்படியும் முடியும்:

கட்டுமானப் பணி யின் போது மரம் வாங்குவது, தரை போடுவது, வண்ணம் பூசுவது ஆகியவற் றில் சில சிக்கன வழிமுறைகளை கடைபி டித்தால் தற்போதைய நிலையில் ஒரு சதுர அடிக்கு 1,200க்குள் வீடு கட்ட முடியும் என்றார் கட்டுமான வல்லுநர் குமணன்.

முறையான திட்டமிடலுடன், தரத்தில் எவ்வித சமாதானமும் செய்து கொள் ளாமல் சிக்கன நடவடிக்கைகளை கடை பிடித்தால் குறைந்த செலவில் வீடுகட்ட முடியும் என்றார் அவர்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது கட்டுமானச் செலவுகள் அதிக ரித்திருப்பது சென்னையில் புதிய வீடுகள் கட்டும் பணிகளை பெருமளவில் பாதித் துள்ளது.ஒப்பந்ததாரரிடம் பணியை ஒப்படைக்காமல் நிலத்தின் உரிமையா ளரே அனைத்து பணிகளையும் கண்காணித்து கட்டுமானப் பணியை மேற்கொண்டால் சதுரஅடி ரூ.900த்தில் வீடு கட்ட முடியும். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதே தற்போதைய கேள்வி?

வி. கிருஷ்ணமூர்த்தி

இனிப்பான ஆபத்து!

"சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப் பான செய்தி!' என்பது போன்ற கவர்ச்சியான விளம்பரங்களோடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டாத இனிப்புகளையும், சர்க்க ரைக் கட்டிகளையும் நிறைய நிறுவனங்கள் விற்பனை செய்வதைப் பார்த்திருப்பீர்கள்.

உண்மையில் குளுக்கோஸ் உள்ள சர்க்கரை யைப் பயன்படுத்துவதை விட, வேறு வகை யான ரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக் கப்படும் "சுகர் ஃப்ரீ' தயாரிப்புகளால் உடலின் பல பாகங்களுக்கு மருத்துவ ரீதியாகப் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு கள் இருக்கின்றது, என்கின்றனர் இதைத் தீவி ரமாக ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கும் வல்லு நர்கள்.

சர்க்கரை என்பது "குளுக்கோஸ்', "ப்ரக் டோஸ்' ஆகிய இரண்டும் கலந்த கலவையா கும். வெளிப்படையாக பார்த்தால் இவை இரண்டுக்கும் இடையே உருவத்தில் பெரிய வேறுபாடு எதுவும் தெரியாது.

இதில் குளுக்கோஸ் தன்மீது விழும் ஒளி யின் கதிர்களை வலது பக்கமாகக் கடத்தும் தன்மையுள்ளது என்பதால் "டெக்ஸ்ட்ரோஸ்' என்றும், ஒளிக் கதிர்களை இடது பக்கமாக கடத்தும் "ப்ரக்டோஸ்', "லெவுலோஸ்' என் றும் குறிப்பிடப்படுகிறது.

பழங்களில் பெருமளவில் காணப்படும் ப்ரக்டோஸ் தனித்திருக்கும் போது இனிப்புத் தன்மை அதிகம் உள்ள பொருளாகும்.ஆனால், குளுக்கோசுடன் சேர்ந்து சர்க்கரை யாக உருப்பெறும்போது இதன் இனிப்புத் தன்மை குறைவாகவே இருக்கும்.

இவ்வாறு உருவாகும் சாதாரண சர்க்கரை உடலில் கலக்க இன்சுலின் தேவைப்படுகிறது.ஆனால், தற்போது லெவுலோஸ் என்ற பெய ரில் உள்ள ப்ரக்டோஸ் உட லில் கலக்க இன்சுலின் தேவை யில்லை என மாற்று இனிப்புப் பண்ட தயா ரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்சுலின் தேவை இல்லை என்பதையும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்னும் வியாபாரிகளின் கூற்றுகளையும் மருத்துவ ஆய்வாளர்கள் மறுக்கின்றனர்.

சர்க்கரையில் உள்ள குளுக்கோஸ் எனப்படும் டெக்ஸ்ட்ரோஸ் உடலில் உள்ள எல்லா பாகங்களிலும் எளிதாக கலக்கும் தன்மையு டையது. ஆனால், ப்ரக்டோஸ் பெரும்பா லும் கல்லீரலில் தான் கலக்கிறது.

இதன் கார ணமாக கல்லீரலின் அனைத்து செயல்பாடுக ளும் பாதிக்கப்படும். குறிப்பாக கல்லீரலில் "லெப்டின்', "இன்சுலின்' உள்ளிட்ட ஹார் மோன்கள் வெளியேறுவது பாதிக்கப்படுகி றது.

இதனால், பசியைத் தூண்டும் செல்கள் பாதிக்கப்படுவதோடு, குறைவாகச் சாப்பிட் டாலே வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும்.கல்லீரலில் ப்ரக்டோஸ் கலப்பதால் வழக்க மான ஹார்மோன்கள் வெளியேறுவது பாதிக்கப்படுவதோடு, வேறு சில தேவையற்ற சுரப்பிகள் சுரக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இத னால், மாற்று இனிப்புப் பண்ட தயாரிப்பா ளர்கள் கூறுவது போல இன்சுலின் தேவை இல்லை என கூறுவது சரியல்ல என்ற கருத்து வலுவடைந்து வருகிறது.

ப்ரக்டோûஸ அடிப்படையாகக் கொண்டு இனிப்புப் பண்டங்களைத் தயாரிப் பவர்கள் இது "லோ கிளைசமிக் இன்டெக்ஸ்' (கர்ஜ் ஞ்ப்ஹ்ஸ்ரீங்ம்ண்ஸ்ரீ ண்ய்க்ங்ஷ்) உடையது என்றும். இத னால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக ரிக்க வாய்ப்பில்லை என்றும் கூறுவதை ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.

இதனால் வேறு சில கெடுதல்களும் உட லுக்கு ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது."பிளாஸ்மா லிபிட்ஸ்', "யூரிக் ஆசிட்' அளவு அதிகரிக்கும். எனவே, குறைந்த அளவு மாதிரி களைக் கொண்டு ப்ரக்டோûஸ நல்லது என நம்புவது மனிதர்களின் உடல் நலத்துக்கு நல் லதல்ல என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அதிக அளவில் ப்ரக்டோஸ் சேர்வதால் உடலில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிக ரிக்கும், உடல் பருமன் அதிகரிக்கும், "லோ டென்சிட்டி லிபிட்ஸ்' (கர்ஜ் க்ங்ய்ள்ண்ற்ஹ் ப்ண்ல்ண்க்ள்), "டிரைகிளைசரைட்ஸ்' (பழ்ண்ஞ்ப்ஹ்ஸ்ரீங்ழ்ண்க்ங்ள்) போன் றவை அதிகரிக்கும். இதன் காரணமாக உட லில் கொழுப்புச் சத்து அதிகரித்து இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின் றன.

சர்க்கரை நோயாளிகளுக்கு புரதச்சத்து இழப்பை ஏற்படுத்தி உடல் நல பாதிப்பை உண்டாக்குவதில் குளுக்கோûஸவிட ப்ரக் டோஸ் ஒரு விதத்திலும் குறைந்தது அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிறு வர்களுக்கு ப்ரக்டோஸ் அதிகமாகக் கொடுத் தால் பல் சிதைவு ஏற்படும்.ப்ரக்டோஸ் எனப்படும் லெவுலோஸ் அடிப்படையில் தயாரிக்கப்படும் இனிப்புப் பண்டங்கள் குறித்த பரிசோதனைகள் முன்பே திட்டமிடப்பட்ட ஒரு முடிவை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டுள் ளன.


ஆனால், மனிதர்களின் உடல் நலத்து டன் தொடர்புடைய இத்தகைய ஆய்வுகள் உண்மையைத் தேடும் முறையில் நடைபெற்றி ருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர் கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மத்திய அர சின் மருந்து கட்டுப்பாட்டு அதிகார அமைப் பும் இதனை கடுமையாக நடைமுறைப்படுத்த வில்லை என்பதே வேதனை அளிக்கக் கூடிய தாக உள்ளது.

குறிப்பிட்ட சிலரின் லாபத்துக்காக அப் பாவி மக்களின் உயிருக்கு உலை வைக்கும் இத் தகைய இனிப்புப் பண்டங்களை அரசு எப் படி அனுமதித்தது என்பதே தற்போது எழுந் துள்ள கேள்வி?

நகராட்சி நிலத்தை பயன்படுத்துவதில் குளறுபடி?

சென்னை, ஜூலை 30: சென்னை பல்லாவரத்தை அடுத்த கீழ்க் கட்டளையில் நகராட்சி நிலத்தை பொதுத் தேவைக்கு பயன்படுத்துவதில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்துள் ளது.பல்லாவரம் நகராட்சிக்கு சொந்தமான கீழ்க்கட்டளை யில் பொது தேவைக்கு பயன்ப டுத்துவதற்காக சுமார் ஒரு ஏக்க ருக்கும் குறைவான நிலம் ஒதுக் கப்பட்டுள்ளது.


கீழ்க்கட்டளையில் உள்ள திரெüபதி அம்மன் கோயி லுக்கு சொந்தமான இந்த நிலம் கீழ்க்கட்டளை பஞ்சாயத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பல்லா வரம் நகராட்சி உருவாக்கத் தின் போது கீழ்க்கட்டளை பஞ்சாயத்தும் அதற்கு ஒதுக்கப் பட்ட நிலமும் பல்லாவரம் நக ராட்சியிடம் சென்றது.

நிலத்தின் ஒரு பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் மட்டும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நிலத்தில் காலியாக இருக்கும் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்ப தற்காக ரூ. 7 லட்சத்தில் கட்ட டம் கட்டப்பட்டது.கட்டுமானப் பணிகள் முடிவ டைந்த நிலையில் ஆரம்ப சுகா தார நிலையம் அமைக்கும் திட் டம் வேறு இடத்துக்கு மாற்றப் பட்டதை அடுத்து இதனை நக ராட்சி பள்ளியின் கூடுதல் கட் டடமாக மாற்ற முடிவு செய் யப்பட்டது.

கீழ்க்கட்டளை நகராட்சி பள்ளிக்கு வேறு கட்டடம் கிடைத்ததை அடுத்து இந்த திட்டமும் கைவிடப்பட்டது.இந்த நிலையில் நகராட்சி நிதி யில் கட்டப்பட்ட இந்த கட்ட டத்தில் ஆரம்ப சுகாதார நிலை யம் அமைப்பது அல்லது மின் வாரிய அலுவலகம் அல்லது தபால் அலுவலகம் உள்ளிட்ட தேவைகளுக்கு அளிக்க வேண் டும் என இப் பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் பல ஆண்டு களாக காலியாக இருந்த இந்த கட்டடத்தில், ஆதரவற்றோர் இல்லம் என்றுக் கூறி சிலர் திடீ ரென தங்க வைக்கப்பட்டுள்ள னர். இவ்வாறு நகராட்சி நிலத்தை தனியார் நடத்தும் இல்லத்துக்கு பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக நக ராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர் வமாக எவ்வித முடிவும் எடுக் காத நிலையில் இவ்வாறு சிலர் தங்க வைக்கப்பட்டுள்ளது இப் பகுதியைச் சேர்ந்த பலருக்கும் புதிராக உள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமைக ளில் இங்கு குறிப்பிட்ட ஒரு மதத்தினர் கூடி பிரார்த்தனை நடத்தி வருவதை அடுத்து நக ராட்சிக்கு சொந்தமான நிலம் மதவழிபாட்டுத் தலமாக மாற் றப்பட்டுள்ளதோ என்ற சந்தே கம் ஏற்ப்பட்டுள்ளதாக கீழ்க் கட்டளை பகுதி மக்கள் தெரி வித்தனர்.

நகராட்சி பதில்:

இந்த நிலம் நகராட்சிக்கு சொந்தமானது தான் என்றும் இங்கு எந்த தவ றும் நடைபெறவில்லை என வும் நகர்மன்றத் தலைவர் இ.கருணாநிதி தெரிவித்தார்.இந்த நிலத்தில் மக்களின் குடிநீர்த் தேவைக்காக ஒரு மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி யும், கீழ்நிலைக் குடிநீர் தொட் டியும் அமைக்கப்பட உள்ளது என்றார்.

மின் வாரியம்:

கீழ்க்கட்ட ளையில் மின் வாரிய அலுவல கம் இடம் இன்றி தவித்து வருகி றது. தற்போது செயல்படும் இடம் போதுமானதாக இல்லை என்பதால், நகராட் சிக்கு சொந்தமான இந்த இடம் மின் வாரிய அலுவலகத்துக்கு அளிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என மின்வா ரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி நிலத்தை பயன்படுத்துவதில் குளறுபடி?

சென்னை, ஜூலை 30: சென்னை பல்லாவரத்தை அடுத்த கீழ்க் கட்டளையில் நகராட்சி நிலத்தை பொதுத் தேவைக்கு பயன்படுத்துவதில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்துள் ளது.பல்லாவரம் நகராட்சிக்கு சொந்தமான கீழ்க்கட்டளை யில் பொது தேவைக்கு பயன்ப டுத்துவதற்காக சுமார் ஒரு ஏக்க ருக்கும் குறைவான நிலம் ஒதுக் கப்பட்டுள்ளது.

கீழ்க்கட்டளையில் உள்ள திரெüபதி அம்மன் கோயி லுக்கு சொந்தமான இந்த நிலம் கீழ்க்கட்டளை பஞ்சாயத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பல்லா வரம் நகராட்சி உருவாக்கத் தின் போது கீழ்க்கட்டளை பஞ்சாயத்தும் அதற்கு ஒதுக்கப் பட்ட நிலமும் பல்லாவரம் நக ராட்சியிடம் சென்றது.

நிலத்தின் ஒரு பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் மட்டும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நிலத்தில் காலியாக இருக்கும் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்ப தற்காக ரூ. 7 லட்சத்தில் கட்ட டம் கட்டப்பட்டது.

கட்டுமானப் பணிகள் முடிவ டைந்த நிலையில் ஆரம்ப சுகா தார நிலையம் அமைக்கும் திட் டம் வேறு இடத்துக்கு மாற்றப் பட்டதை அடுத்து இதனை நக ராட்சி பள்ளியின் கூடுதல் கட் டடமாக மாற்ற முடிவு செய் யப்பட்டது.கீழ்க்கட்டளை நகராட்சி பள்ளிக்கு வேறு கட்டடம் கிடைத்ததை அடுத்து இந்த திட்டமும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நகராட்சி நிதி யில் கட்டப்பட்ட இந்த கட்ட டத்தில் ஆரம்ப சுகாதார நிலை யம் அமைப்பது அல்லது மின் வாரிய அலுவலகம் அல்லது தபால் அலுவலகம் உள்ளிட்ட தேவைகளுக்கு அளிக்க வேண் டும் என இப் பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் பல ஆண்டு களாக காலியாக இருந்த இந்த கட்டடத்தில், ஆதரவற்றோர் இல்லம் என்றுக் கூறி சிலர் திடீ ரென தங்க வைக்கப்பட்டுள்ள னர்.

இவ்வாறு நகராட்சி நிலத்தை தனியார் நடத்தும் இல்லத்துக்கு பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக நக ராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர் வமாக எவ்வித முடிவும் எடுக் காத நிலையில் இவ்வாறு சிலர் தங்க வைக்கப்பட்டுள்ளது இப் பகுதியைச் சேர்ந்த பலருக்கும் புதிராக உள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமைக ளில் இங்கு குறிப்பிட்ட ஒரு மதத்தினர் கூடி பிரார்த்தனை நடத்தி வருவதை அடுத்து நக ராட்சிக்கு சொந்தமான நிலம் மதவழிபாட்டுத் தலமாக மாற் றப்பட்டுள்ளதோ என்ற சந்தே கம் ஏற்ப்பட்டுள்ளதாக கீழ்க் கட்டளை பகுதி மக்கள் தெரி வித்தனர்.

நகராட்சி பதில்:

இந்த நிலம் நகராட்சிக்கு சொந்தமானது தான் என்றும் இங்கு எந்த தவ றும் நடைபெறவில்லை என வும் நகர்மன்றத் தலைவர் இ.கருணாநிதி தெரிவித்தார்.இந்த நிலத்தில் மக்களின் குடிநீர்த் தேவைக்காக ஒரு மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி யும், கீழ்நிலைக் குடிநீர் தொட் டியும் அமைக்கப்பட உள்ளது என்றார்.

மின் வாரியம்:

கீழ்க்கட்ட ளையில் மின் வாரிய அலுவல கம் இடம் இன்றி தவித்து வருகி றது. தற்போது செயல்படும் இடம் போதுமானதாக இல்லை என்பதால், நகராட் சிக்கு சொந்தமான இந்த இடம் மின் வாரிய அலுவலகத்துக்கு அளிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என மின்வா ரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறையும் நீர்மட்டம்; தவிப்பில் விவசாயிகள்

சென்னை, ஜூலை 28: பருவமழை பாதிப்பு, நீர் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத் தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பிரச் னைகளுக்கிடையில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்னதாகவே இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், மழைப் பொழிவு பற்றாக்குறையாகவே உள்ளது. தமிழ கத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் கேரளம், கர் நாடகத்தில் இருந்து வரும் தண்ணீரையே நம்பியுள் ளன.

இந்த நிலையில் நடப்பாண்டில் கேரளத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும், கர்நாடகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் பருவமழை இயல் பைவிட வெகுவாக குறைந்துள்ளது.ஏற்கெனவே, இந்த மாநிலங்கள் தமிழகத்துக்கு திறந் துவிடும் தண்ணீரின் அளவை குறைப்பதற்கான பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பருவமழை பற்றாக்குறை தமிழ கத்தை நேரடியாக பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்கு தண்ணீர் வழங்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கர்நாடகத்தில் இருந்து கடந்த இரு மாதங்களில் 30 டி.எம்.சி. தண்ணீர் வர வேண்டிய நிலையில் 9.5 டி.எம்.சி. தண்ணீர் மட் டுமே வந்துள்ளது.

அணையில் தற்போது உள்ள தண் ணீரில் 22 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே பாசனத்துக்கு திறந்து விட முடியும். அதுவும், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மட்டுமே இவற்றை பாசனத்துக்கு பயன்ப டுத்த முடியும். இதனால், டெல்டா மாவட்டங்களில் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப் பட்டுள்ள குறுவை பயிர்களின் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அறுவடைக் காலமான செப்டம்பர் முதல் வாரம் வரை இந்த பயிர்க ளுக்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போதைய சூழல் விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியாறு, கோவி லாறு, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை, சோத்துப் பாறை, மஞ்சளாறு, பரம்பிக்குளம் ஆழியாறு அணைத் திட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலை யாறு, ஆழியாறு, திருமூர்த்தி, தூணக்கடவு, பெருவா ரிப்பள்ளம், நீராறு, மேல்ஆழியாறு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோமுகி, நெல்லை மாவட்டத் தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள் ளிட்ட முக்கிய அணைகளில் அவற்றின் முழு கொள் ளளவைவிட சுமார் 20 முதல் 40 சதவீதம் குறைவான அளவிலேயே தற்போதைய நீர்மட்டம் உள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், விழுப்புரம் உள் ளிட்ட மாவட்டங்களில் முக்கிய பாசன ஆதாரங்க ளான ஏரிகள், கண்மாய்கள் ஆகியவற்றின் நீர்மட்ட மும் நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

மின் வெட்டு காரணமாக பம்ப்செட்களை இயக்க முடியாததால், கிடைக்கும் குறைந்த அளவு நிலத்தடி நீரையும் பாசனத்துக்கு முறையாக பயன்படுத்த முடி யாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அரசு மின் வெட்டை கிராமங்களில் அதிக அளவில் அமல் படுத்துவது அவர்களின் பாதிப்பை மேலும் அதிகரிக்கும் வகையி லேயே அமைந்துள்ளது.

பருவமழை பாதிப்பு மட்டுமல்லாது, பெரும்பாலான நீர்த்தேக்கங்களும், கண்மாய்களும், பாசன கால்வாய்க ளும் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளில் பெய்த மழை நீரையும் சேமிக்க முடி யாமல் போயுள்ளது.

அதிக மழை பெய்த காலங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து கிடைத்த உபரி நீரை யும் தேக்கிவைக்கும் பணிகளில் நிர்வாகத்தின் அலட்சி யமும் இந்த நிலைக்கு முக்கிய காரணம்.பல மாவட்டங்களில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் அணைகளில் இருந்து கிடைக்கும் குறைந்தபட்ச நீரை யும் கடைமடை பகுதி விவசாயிகள் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

""தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு பருவமழை பொய்த்து போவதை மட்டும் காரணமாக கூறிக்கொண்டு இருக்காமல் குறைந்த அளவு நீரும் விவசாயிகளுக்கு உரிய முறையில் கிடைக்க தேவை யான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மேலும், மின் வெட்டு, உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்தும் விவசாயிகளை பாதுகாப்ப தன் மூலமே ஏற்கெனவே, வீழ்ச்சிப்பாதையில் உள்ள விவசாய உற்பத்தியை மீட்டெடுக்க முடியும்'' என்று டெல்டா விவசாயிகள் குரலெழுப்புகிறார்கள்.

சனி, 5 ஜூலை, 2008

ஓய்வு நாளில் "ஆண்டவர்' இடைநீக்கம்

சென்னை, ஜூலை 1: தலைமைச் செயலக ஊழியர்க ளுக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முக்கிய எதிரியான தனி அலுவலர் ஆர்.ஆண்டவர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் (திங்கள்கிழமை) இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், இந்த முறைகேட்டை நியாயமாக விசா ரித்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு இன்ஸ்பெக்டரும், காவ லரும் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு ஒக்கி யம் துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக 4 அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால், இந்த முறைகேட்டில் முக்கிய எதிரியாக புகார் கூறப்பட்ட தனி அலுவலர் ஆர். ஆண்டவர் எவ்வித நடவடிக்கைக்கும் உட்படாமல் இருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

இந்த நிலையில், ஆர். ஆண்டவர் தனது செல் வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கில் எவ்வித நடவ டிக்கைக்கும் ஆளாகாமல் திங்கள்கிழமை ஓய்வு பெற இருப்பது குறித்து "தினமணியில்' செய்தி வெளியானது.

இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கா தது ஏன் என அரசின் பல்வேறு நிலைகளில் இருந் தும் கேள்வி எழுப்பப்பட்டது.இத்தகைய சூழலில், ஆர். ஆண்டவர் ஓய்வு பெறும் நாளான திங்கள்கிழமை (ஜூன் 30) அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கான உத் தரவு வழக்கத்துக்கு மாறாக இரவு 7 மணிக்கு அவரி டம் அளிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக ஒரு அலுவலர் முறைகேடு செய்துள் ளது தெரியவந்தால் அவர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் அலுவலக வேலை நேரமான மாலை 5.45 மணிக்குள் அதற்கான உத்தரவு வழங் கப்பட வேண்டும்.

ஆனால், ஆண்டவர் மீது நடவடிக்கை எடுப் பதை தவிர்க்க வேண்டும் என விரும்பிய சில உயர் அதிகாரிகள், இந்த நடவடிக்கையும் அவருக்குச் சாதகமாக வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு 7 மணிக்கு பணி இடைநீக்க உத்தரவை வழங்கியிருக்க லாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தக் காலதா மதத்தையே காரணம் காட்டி இடைக்காலத் தடை பெற அவர் முயற்சிக்கலாம் என்று தெரிகிறது.

நியாயமாக நடந்ததால் தண்டனையா?

ஆர்.ஆண்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலை யில், இந்த வழக்கில் நியாயமாக விசாரணையை நடத்திய லஞ்ச ஒழிப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் நல் லதுரை மற்றும் காவலர் விஜயகுமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது காத்திருப் போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பது ஏன் என்று தலைமைச் செயலகப் பணியாளர்கள் மத்தி யில் பரவலாகப் பேசப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் லஞ்சம் வாங்கிய புகா ருக்கு ஆளாகும் நிலையில் மட்டுமே ஒரு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டு துறையைவிட்டு காவல் துறை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம்.

ஆனால், இதுபோல எவ்விதப் புகாருக்கும் ஆளா காத நிலையில் நல்லதுரையும், விஜயகுமாரும் இடமாற் றம் செய்யப்பட்டிருப்பது இவர்களைப் போல நியாய மாக நடக்க விரும்பும் அதிகாரிகளை சோர்வடையச் செய்வதாக உள்ளது என்கின்றனர் போலீஸôர்.

புதன், 2 ஜூலை, 2008

அட, ஆண்டவா.... !

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு

சென்னை, ஜூன் 29: தலைமைச் செயலக பணியா ளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்தது தொடர்பாக 4 அதிகாரிகள் சனிக்கிழமை தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.ஆனால், இந்த முறைகேட்டில் முக்கியக் குற்றவா ளியாக புகார் கூறப்பட்ட பதிவுத்துறை அதிகாரி ஆர். ஆண்டவர் எவ்வித நடவடிக்கைக்கும் உட்ப டாமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சி அளிப்ப தாக உள்ளது.

சென்னையை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத் தில், கடந்த 1999-ம் ஆண்டு தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கான வீட்டுமனைத் திட் டம் உருவாக்கப்பட்டது.56 ஏக்கர் பரப்பளவில் இந்த திட்டத்தை மேற் கொள்ள தலைமைச் செயலக பணியாளர்கள் கூட்டு றவு வீட்டுமனை சங்கம் ஏற்படுத்தப்பட்டது.

ஆர். ஆண்டவர் தனி அலுவலராகவும், ஆர். பத்மநாபன், ஜி.தேவதாஸ், ஆர். கோபால், இளஞ்செழியன், இளமதி, விஜய லட்சுமி, தேவராஜ் ஆகியோர் இயக்குநர்களாகவும் இருந்துவந்தனர்.

இத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிலத்தை இவர்கள் முறைகேடாக பினாமி பெயரில் ஒதுக்கீடு செய்துள்ளதாக தலைமைச் செயலக ஊழியர்களின் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட் டது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில், தலை மைச் செயலக பணியாளர்களின் புகார்களில் உண்மை உள்ளது என்று கண்டறிந்து தவறுக ளுக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவ டிக்கை மேற்கொள்ளுமாறு அரசுக்கு லஞ்ச ஒழிப் புத்துறை பரிந்துரை செய்தது.

இடம் மாறிய ஆண்டவர்:

இந்த நிலையில் தலை மைச் செயலக பணியாளர்கள் கூட்டுறவு வீட்டு மனை சங்கத்தின் சிறப்பு அலுவலராக இருந்த ஆர்.ஆண்டவர், லஞ்ச ஒழிப்புத்துறை பணியாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் சிறப்பு அலுவல ராக பொறுப்பேற்றார்.

ஆனால், ஆர். ஆண்டவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டாம் என்றும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பணியா ளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் அலுவல் சாரா தலைவரும் மத்திய சரக எஸ்.பி.யுமான ஆசி யம்மாள் விசாரணை அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.


இந்த நிலையில் ஏற்கெனவே பணி புரிந்த இடத் தில் முறைகேடுகள் செய்ததாக புகார் கூறப்பட்ட ஆர். ஆண்டவர் லஞ்ச ஒழிப்புத்துறை பணியாளர் கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் சிறப்பு அலு வலராக இருக்கக் கூடாது என்றும் அவர் மீது விசா ரணை நடத்த வேண்டும் என்றும் இந்த சங்கத்தின் உறுப்பினர்களே புகார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்த இந்தத் துறை யின் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ். கிரிமுருக னுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் இந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையின் உயர் அதிகா ரிக்கு தொடர்பு இருப்பதால் இதனை வேறு அதிகா ரிக்கு மாற்றுமாறு துறையின் இயக்குநருக்கு ஜூன் 25-ம் தேதி கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் சார்பு செயலாளர் ஆர்.கோபால், கைத்தறி மற்றும் கதர் துறையில் சார்புச் செயலாளராக பணிபுரிந்து வரும் ஜி. தேவதாஸ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் உதவிப் பிரிவு அலுவலராக உள்ள விஜய லட்சுமி ஆகியோர் தாற்காலிகப் பணி நீக்கம் செய் யப்பட்டதாக அரசு சனிக்கிழமை (ஜூன் 28) அறிவித்தது.

இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த வீட்டு மனைச் சங்கத்தின் அப்போதைய தனி அலு வலர் லட்சுமணன் தாற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். ஆர்.பத்மநாபன் உள்ளிட்ட ஏனைய இயக்குநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசின் அறிவிப் பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று ஓய்வு:

ஆனால், வீட்டுமனை ஒதுக்கீட் டில் முறைகேடு செய்தவர்களில் முக்கிய நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள தனி அலுவலர் ஆர்.ஆண்டவர் எவ்வித நடவடிக்கைக்கும் ஆளாகா மல் இருப்பது ஏன்? என தலைமைச் செயலக ஊழி யர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தனி அலுவலர் ஆர். ஆண்டவர் எந்த நடவடிக் கைக்கும் ஆட்படாமல் திங்கள்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 30 ஜூன், 2008

சும்மா... அதிராம இருக்க!

ஒரு டன் கம்பி, ஒரு டன் கருங்கல் ஜல்லி, ஒரு டன் மணல், ஒரு டன் சிமென்ட் இவை அனைத்தும் சேர்ந்த சுமார் நான்கு டன் எடை யுள்ள உங்கள் வீட்டின் தளத்தை தாங்குவது எது? இவ்வாறு தளத்தை தாங்கும் அமைப்புகள் உறுதியானவைதானா? அவை முறைப்படி அமைக்கப்பட்டுள் ளனவா? தளத்தை தாங்கும் அமைப்புகளில் குறைபாடுகள் ஏற்பட்டால் உங்கள் வீட்டின் நிலை என்ன? இந்த கேள்விக ளுக்கு பதிலை தேடுவதற்கு முன்னர் கட்டடங்கள் கட்டப்ப டும் முறை குறித்த சில தகவல் கள்...

பொதுவாக "பிரேம்டு ஸ்ட் ரெக்ட்சர்', "லோடு பேரிங் ஸ்ட் ரெக்ட்சர்' ஆகிய 2 விதங்களில் தற் போது கட்டடங்கள் கட்டப்படுகின் றன.திட்டமிட்டு தூண்கள் மற்றும் கீழும்- மேலும் பீம்கள் அமைத்து கட்டுவது "பிரேம்டு ஸ்ட்ரெக்ட்சர்' எனப் படுகிறது.

இதில் அஸ்திவா ரத்தை அதிக எடை தாங்கும் வகை யில் கட்டினால் அதன் மீது அமைக் கப்படும் தூண்களை நம்பி எவ்வ ளவு தளங்கள் வேண்டுமானாலும் கட்டலாம்.பெரும்பாலான கட்டுமான நிறு வனங்கள் இந்த முறையை பின்பற் றியே கட்டடங்களை கட்டுகின்றன.

அஸ்திவாரத்தை மட்டும் மிக வலுவாக அமைத்துவிட்டு தூண் கள் அமைக்காமல் சுவர்களை எழுப்பி அதன் மீது தளம் போடு வது லோடு பேரிங் ஸ்ட்ரெக்ட்சர் எனப்படுகிறது. இதில் தளத்தின் சுமை அனைத்தையும் சுவர்களே தாங்குகின்றன.இதில் காலம் எனப்படும் தூண் கள் இருக்காது என்பதால் இந்த வகையில் அதிகபட்சம் 2 மாடிகள் வரை மட்டுமே கட்ட முடியும்.

மேலும், அஸ்திவாரத்துக்கு மேல் கட்டப்படும் அனைத்து சுவர்களும் முக்கால் அடி அதாவது 9 அங்குல அகலத்தில் இருக்க வேண்டும்.அப்போதுதான் அந்த சுவர் தளத் தின் சுமையை தாங்கும்.சிலர் தேவை இல்லாமல் இந்த வகை கட்டடங்களில் தூண்களை எழுப்புகின்றனர்.

ஆனால் பாதியி லேயே இந்தத் தூண்களை நிறுத்தி விடுகின்றனர்.இவ்வாறு கட்டும்போது அறை களை பிரிக்கும் வகையில் சுவர் களை நமது விருப்பத்துக்கு ஏற்ப கட்ட முடியாது. கட்டுமானப் பொருளில் தரக்குறைப்பாடு இருந் தாலோ அல்லது சுவர்களில் விரி சல் ஏற்பட்டாலோ கட்டடத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்படும்.

பொதுவாக தனி வீடு கட்டு வோர் இந்த வகை கட்டுமானத்தை பயன்படுத்துகின்றனர். இதனால், கூடுதல் தளங்கள் அல்லது அறை கட்ட வேண்டுமானால் முழு கட்ட டத்தின் தன்மையும் மாற வேண் டிய நிலை ஏற்படும்.பெரும்பாலான கட்டுமான வல் லுநர்கள் இந்த முறையை பயன்ப டுத்துவதை தவிர்த்து வருகின்ற னர்.

ஆனால், அனுபவத்தை மட் டும் வைத்து கட்டுமானப் பணி களை மேற்கொள்ளும் சிலர் மட் டுமே இந்த முறை கட்டடங்களை கட்டி வருகின்றனர்.திட்டமிட்டு கட்டும் பிரேம்டு ஸ்ட்ரெக்ட்சர் முறையில் முதலில் கட்டட வரைபடத்தின் அடிப்படை யில் வலுவான அடித்தளம் அமைக்கப்படுகிறது.

அதன் மீது தூண்கள் எழுப்பப்படுகின்றன.அடித்தளத்தில் இருந்து சில அடி உயரத்தில் இந்த தூண்களை இணைக்கும் வகையில் பீம்கள் எனப்படும் கான்கிரீட் இணைப்பு கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதே போல மேலே தளம் போடுவதற்கு முன்னர் மீண்டும் பீம்கள் அமைக் கப்படும்.

இதன் மீது தளம் அமைக் கப்பட்டால் கட்டடத்தின் உறுதித் தன்மை 100 சதவீதம் உறுதிப்படுத் தப்படும்.மேலும் இந்த வகையில் கட்டும் போது தளத்தின் சுமையை தாங்கு வதில் சுவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்பதால் நமது விருப்பம் போல சுவர்களை அமைத்துக் கொள்ளலாம். தளத் தின் மீது தேவையான அளவு அடுக்குகளை கட்டிக் கொள்ள லாம்.

இங்குதான் பிரச்னை:

முறை யாக தூண்கள் மற்றும் பீம்களை அமைத்து கட்ட வேண்டிய பிரேம்டு ஸ்ட்ரெக்ட்சர் முறையில் அடுக்குமாடி கட்டடம் கட்டும் பெரும்பாலானோர் முறையாக நடந்துக் கொள்கின்றனர்.

ஆனால், இந்த முறையில் குறைந்த பரப்பளவில் தனி வீட்டு கட்டும் சிலர் கம்பி செலவை குறைப்பதாகக் கூறியோ அல்லது வேறு காரணங்களை கூறியோ தளத்தை தாங்குவதற்கான பீம் போடுவதை தவிர்த்து விடுகின்ற னர்.

இதனால், தளத்தின் சுமை முழு வதும் தூண்களுக்கு மட்டும் இறங் காமல் சுவர்கள் மீதும் இறங்கும் நிலை ஏற்படும். சுமை அதிகரிப்ப தால் சுவரில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது ஒட்டு மொத்த கட்டடத்தின் உறுதித் தன் மையையும் பாதிக்கும் நிலை ஏற்ப டும்.

லேசான அதிர்வு ஏற்பட்டாலும் கூட இத்தகைய கட்டடங்கள் சரிந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் தூண்களை இணைக்கும் பீம்களின் அவசியத்தை உணரலாம்.கட்டி முடித்துவிட்ட பின்னர் தூண்களை துளைத்து கம்பிகளை செருகி பீம்களை அமைப்பது நடை முறையில் வெற்றிகரமாக அமை யாது என்பது கட்டுமான வல்லுநர் களின் கருத்து.

எனவே, உங்கள் வீட்டை கட்டும் பொறியாளரிடம் இத்தகைய பீம்களை அமைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டி யது உரிமையாளர்களான உங்களின் அடிப்படை கடமை.

வி. கிருஷ்ணமூர்த்தி

மலிவு விலை சிமென்ட் விற்பனை நிறுத்தம்

சென்னை, ஜூன் 27: தமிழகத்தில் நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகள் மூலம் நடைபெற்ற மலிவு விலை சிமென்ட் விற்பனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஒரு மூட்டை ரூ. 200 என விற் பனை செய்ய தனியார் ஆலை நிர் வாகங்களிடம் இருந்து சிமென்டை பெறுவதில் அரசு அதிகாரிகள் ஆர் வம் இன்றி செயல்படுவதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் வெளிச்சந்தையில் ஒரு சிமென்ட் விலை ரூ. 275 ஆக அதிகரித்துள் ளது.தமிழகம் உள்பட பல்வேறு மாநி லங்களில் கடந்த ஆண்டு முன்பு எப் போதும் இல்லாத வகையில் சிமென்ட் விலை அதிகரித்தது.

இதன் காரணமாக கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக முடங்கும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து ஒரு மூட்டை ரூ.200 என்ற விலையில் மாதந்தோறும் 20 லட்சம் சிமென்ட்டை விற்க தமிழக அரசின் தலையீட்டின் பேரில், தனியார் சிமென்ட் ஆலைகள் முன்வந்தன.

பிரச்னை ஆரம்பித்தது:

சில மாதங்கள் தொடந்து இந்த முறை யில் மக்களுக்கு சிமென்ட் கிடைத் தது. இந்த நிலையில் தமிழக அர சின் "டான்செம்' நிறுவனம் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார் பில் நேரடியாக சிமென்ட் இறக்கு மதி செய்து மக்களுக்கு இதே விலைக்கு வழங்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங் கியது.

இந்த நிலையில், சிமென்ட் இறக்கு மதி தொடர்பான பணிகள் அரசின் ஆர்வம் இன்மை காரணமாக தடை பட்டது. மேலும், தனியார் ஆலை நிர்வாகங்களிடம் இருந்து மாதம் தோறும் 20 லட்சம் மூட்டை சிமென்டை வாங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

"நாங்கள் வழங்க தயாராக இருந் தும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளின் சில நடைமுறைகள் காரணமாக அறிவிக்கப்பட்ட அளவு சிமென்ட்டை குறைந்த விலை விற்பனைக்கு அனுப்புவதில் தடை ஏற்பட்டுள்ளது' என பிரபல தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் சிமென்ட் வாங்க மக்களிடம் ஆர்வம் இன்மை காரணமாக அதிக அளவு சிமென்ட் விற்பனையாகவில்லை. இருப்பு தீரா ததால் புதிதாக தனியார் ஆலைகளி டம் இருந்து சிமென்ட் வாங்கும் அளவு குறைந்து வருகிறது என நுகர்பொருள் வாணிபக் கழக அதி காரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சென்னை உள் பட தமிழகத்தின் பல்வேறு பகுதிக ளில் குறைந்த விலை சிமென்ட் விற் பனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் படிப்படியாக நிறுத் தப்பட்டு வருவதாகவும் கட்டுமானத் துறையினர் புகார் தெரிவித்தனர்.

மீண்டும் விலை உயர்வு: இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகங்கள் ஒரு மூட்டை சிமென்ட் விலையை ரூ.275 வரை மீண்டும் அதிகரித்துள் ளன.கடந்த ஜனவரி மாதம் அரசு டைமை என்ற அரசின் அறிவிப்பு வரும்போது இருந்த நிலையே தற் போது மீண்டும் உருவாகியுள்ளது.

இதனால், கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கட்டுமான வல் லுநர்கள் கருத்து தெரிவித்துள்ள னர்.

கட்டடம் கட்ட சிறப்பு விதிகள் அறிவிப்பு

சென்னை, ஜூன் 24: சென்னை திருவான்மியூரை அடுத்துள்ள கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையிலான பகுதிகளில் கட்டப்படும் புதிய கட்ட டடங்களுக்கான சிறப்பு விதிகளை அரசு அறிவித் துள்ளது.

கடலோர பகுதி நிலத்தடி நீர் வளம் மற்றும் கனிம வளம் ஆகியவற்றை பாதுகாக்கும் விதமாக கடலின் உயர் அலை மையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத் துக்கு அப்பாலும், பக்கிங்காம் கால்வாயில் இருந்து 100 மீட்டர் தூரத்திலும் உள்ள பகுதிகளில் புதிய கட்டடங்கள் வருவதை ஒழுங்குப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

தடை விதிப்பு:

இதன்படி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், உத்தண்டி ஆகிய கிராமங்களில் புதிய கட்டடங்க ளுக்கு அனுமதி வழங்குவதற்கு தடை விதித்து அரசு 23-12-1980-ல் உத்தரவிட்டது.

நகர்ப்புற வளர்ச்சி, புதிய குடியிருப்புகள் தேவை மற்றும் நீர்வளம், கனிமவள வல்லுநர்கள் மேற் கொண்ட ஆய்வு முடிவுகளின் படி இந்தப் பகுதியில் புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

தடை நீக்கம்:

இந்த கோரிக்கைகள் அடிப்படை யில் கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையி லான பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்க விதிக்கப்பட்டிருந்த தடை 27 ஆண்டுக ளுக்கு பின்னர் 13-3-2007-ல் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், இந்தப் பகுதியில் புதிய கட்டடங்க ளுக்கு அனுமதி வழங்குவதற்கான சிறப்பு விதிகளை உருவாக்குமாறு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) கேட்டுக் கொள்ளப்பட்டது.இதன்படி, சி.எம்.டி.ஏ. அனுப்பிய புதிய சிறப்பு விதிகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

அரசின் ஒப்புதலை அடுத்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் ஆர். செல்லமுத்து இதற் கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.

புதிய விதிகள்:
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு உட்பட்டு இந்த விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதன்படி சாதாரண குடியிருப்புகள் கட்டிக்கொள்ள நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்படும்.

மேலும், அலுவலகக் கட்டடங்கள், சிறு கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கான கட்டடங் கள் 40 சதுர மீட்டர் பரப்பளவிலும், தரை தளம் மற் றும் முதல் தளத்துடன் கூடிய கட்டடங்களாக இருக்க வேண்டும்.

பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கான கட்டடங்கள் 100 சதுர மீட்டர் பரப்பளவிலும் 15 மீட்டர் உயரத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.மக்கள் கூடும் அரங்குகள், அரசு கட்டடங்கள், வங்கிகள், மின்வாரிய கட்டடங்கள் உள்ளிட்டவை 300 மீட்டர் பரப்பளவிலும், 15 மீட்டர் உயரத்துக் குள்ளும் இருக்க வேண்டும்.

புதிய மனைப் பிரிவுகளின் பரப்பளவு ஒரு ஹெக் டேருக்குள் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் புதிய கட்டடங்கள் அரசின் சிறப்பு விதிகளில் குறிப் பிடப்பட்டுள்ள அளவுக்கு சாலைகளுக்கு இடம் விட்டு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு, கழிவுநீரை முறையாக வெளியேற்றுவது தொடர் பான விதிகள் முழுமையாக பின்பற்றப்பட வேண் டும்.

ஏற்கெனவே கட்டியிருந்தால்...:

தடை விதிக்கப் பட்டிருந்த காலத்தில் கட்டப்பட்டு தற்போது அறி விக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு விதிகளுக்கு உட்பட் டதாக இருக்கும் கட்டடங்கள் வரைமுறைப்படுத் தப்பட்டதாக கருதப்படும்.

சிறப்பு விதிகளுக்கு முரணாக இருக்கும் கட்டடங் கள் மீது அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தப் பகுதியில் விதிகளுக்கு உட் பட்டு புதிய கட்டடங்கள் கட்டுவதில் இருந்த 28 ஆண்டு கால பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுள் ளது.

சி.எம்.டி.ஏ. 2-வது மாஸ்டர் பிளானை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு

சென்னை, ஜூன் 23: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) உருவாக்கியுள்ள 2- வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கையை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 ஆண்டு தாமதத்துக்கு பின்னர் கடந்த ஆண்டு சி.எம்.டி.ஏ.2-வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கையை தயாரித்தது.இது தொடர்பாக பொது மக்கள், கட்டுமான வல்லுநர்கள், நகர மைப்பு வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகள் பெறப்பட்டன.

இந்த கருத்துகள் அடிப்படையில் 2-வது மாஸ்டர் பிளான் இறுதி அறிக்கை தயாரிக் கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.இருப்பினும் அரசின் ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மாஸ்டர் பிளான் நடைமுறைக்கு வருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள் ளது.

இதனால், அதிகரித்து வரும் மக்கள் தொகையின் தேவைக்கு ஏற்ப புதிய குடியிருப்புகள் கட்டுவ தற்கு ஒப்புதல் கிடைக்காமல் உள் ளது.

அரசாணை வெளியீடு:

இந்த நிலையில் 2-வது மாஸ்டர் பிளான் தொடர்பாக, தமிழக அரசின் வீட் டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அண்மையில் வெளியிட் டுள்ள அரசாணை விவரம்:

சி.எம்.டி.ஏ. துணைத் தலைவர் அனுப்பி இருந்த 2026-ம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்துவதற் கான 2-வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கையை அரசு தீவிர மாக ஆராய்ந்தது. இந்த வரைவு அறிக்கை மீது அமைச்சர்களின் பரிந்துரைகளை பெற முடிவு செய் யப்பட்டது.

5 அமைச்சர்கள்:

இதற்காக முக்கி யத் துறைகளை சேர்ந்த 5 அமைச் சர்கள் கொண்ட குழு அமைக்கப்ப டுகிறது.(1) மின் துறை அமைச்சர், (2) பொதுப் பணித்துறை மற்றும் சட் டத்துறை அமைச்சர், (3) உயர் கல் வித்துறை அமைச்சர், (4) போக்குவ ரத்துத் துறை அமைச்சர், (5) செய் தித் துறை அமைச்சர் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள் ளது.

பரிந்துரை எப்போது?

மாஸ்டர் பிளான் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு தனது பரிந்துரைகளை எப்போது அளிக்க வேண்டும்? குழுவின் ஆய்வு வரை யறை என்ன? இவர்களுக்கு மாஸ் டர் பிளான் குறித்து யார் விளக்கு வார்கள்? என்பன போன்ற வினாக் களுக்கு விடை இல்லை.

எனவே, 2-வது மாஸ்டர் பிளான் நடைமுறைக்கு வருவதை நிரந்தர மாக நிறுத்தி வைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளதா என்பதே பல்வேறு தரப்பி னருக்கும் தற்போது எழுந்துள்ள சந் தேகம்.

மனைகளை ஒதுக்க தொலைபேசி மூலம் உத்தரவு

வீட்டுவசதி வாரியத்தில் அதிகரிக்கும் முறைகேடுகள்

சென்னை, ஜூன் 21: தமிழ்நாடுவீட்டுவசதி வாரியத் தலைவர்,நிர்வாக இயக்குநர் உள்ளிட்டஉயர் அதிகாரிகள் தொலைபேசி மூலம் அளிக்கும் உத்தரவின் படியே மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இத்தகைய செயல்பாடுகள்வீட்டுவசதி வாரிய நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வீட்டுமனைகள் மட்டுமல்லாது வணிக மனைகள், பள்ளிகளுக்கான மனைகள் ஆகியவற்றையும் உருவாக்கி,அதனை மேம்படுத்தி உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.

இவ்வாறு மனைகளைஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்என்பதற்காக மனைகளைஒதுக்குவது தொடர்பானநடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால், இந்த நடைமுறைகள் எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகின்றன என்பது தான்தற்போது எழுந்துள்ளகேள்வி.

எந்த ஒரு மனையானாலும்பொது அறிவிப்பு வெளியிட்டுஏலம் மூலமே ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது வீட்டுவசதி வாரியத்தின் விதியாக உள்ளது. ஆனால், இந்த விதிகள்முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதாகமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வீட்டுவசதி வாரியத்தில்வணிக பகுதிக்கான மனைகளை பெறுவதற்கு எப்போதுமே பலத்த போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக இந்தமனைகளை பெற விரும்புவோர் தங்களது அனைத்துவிதமான பலத்தினையும் பிரயோகப்படுத்துவதாக பரவலாக புகார் கூறப்படுகிறது.

இந்தப் புகார்களை உறுதிப்படுத்தும் விதமாக சில ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதிகாரி வெளியிட்ட ஆதாரம்:

சென்னை மேற்கு அண்ணாநகர் பஸ் நிலையம் அருகில்தந்தை பெரியார் சமுதாயமைய வளாகத்தின் ஒரு மூலையில் கோபாலன் என்பவர்கடை நடத்தி வருகிறார்.இந்தக் கடை ஆக்கிரமிப்பாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எழுந்தபுகார்களுக்கு பதில் அளித்துதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயலர் சி.காமராஜ் அளித்த விவரம்:

மேற்கு அண்ணா நகர் பஸ்நிலையம் அருகில் உள்ளதந்தை பெரியார் சமுதாயமைய வளாகத்தில் 60 சதுரஅடி நிலம் எஸ்.கே. கோபாலனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த நிலத்தை எஸ்.கே. கோபாலன் என்பவருக்கு ஒதுக்குமாறு வீட்டுவசதி வாரிய தலைவர் தொலைபேசி மூலம் உத்தரவிட்டதால்இதற்கான ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஒதுக்கீட்டுக்கானஆணையில் (எண்:பி8.89249.84-1) வீட்டுவசதிவாரியத்தின் அண்ணா நகர்கோட்ட செயற் பொறியாளர்குறிப்பிட்டுள்ளார்.

1984-ம் ஆண்டு இந்த ஒதுக்கீடு நடைபெற்று இருந்தாலும், இது தொடர்பான உத்தரவு தொலைபேசி மூலம்அளிக்கப்பட்ட விவரம் தற்போது தான் வெளியாகியுள்ளது.

தொடரும் முறைகேடுகள்:

இது மட்டுமல்லாமல்,சென்னை உள்பட தமிழகம்முழுவதும் ஏராளமான வீட்டுமனைகள், வணிக மனைகள்,பள்ளி வளாகங்களுக்கானமனைகள் உயர் அதிகாரிகளின் தொலைபேசி உத்தரவுகள் அடிப்படையிலேயே ஒதுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் புகார்தெரிவித்துள்ளனர்.

இதனால், விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மனைகள் கிடைக்காமல் போகிறது. விதிகளுக்குமுரணான இந்த அணுகுமுறைகள் வீட்டுவசதி வாரியத்தின்ஊழலுக்கு வழிவகுப்பதாகவேஉள்ளது என ஊழலுக்கு எதிரான பிரசார இயக்கமான "ஐந்தாவது தூணின்' சென்னைமாவட்ட செயலர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

திங்கள், 16 ஜூன், 2008

ரயில் பயணிகளை அச்சுறுத்தும் அல்ட்ராஸôனிக் எலி விரட்டிகள்

சென்னை, ஜூன் 15: எலிகளை விரட்டு வதற்காக குறிப்பிட்ட சில ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள அல்ட்ராஸôனிக் கருவிகள் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற் படுத்தும் வகையில் இருப்பதாக ரயில் பய ணிகள் அச்சம் தெரிவித்தனர்.

பயணிகள் உணவுப் பொருள்களைக் கண்டபடி வீசி எறிவதும், ரயில் பெட்டி களை முறையாகப் பராமரிக்காததும், எலிகள், கரப்பான்பூச்சிகளை வரவேற் கின்றன.

இந்தப் பிரச்னையால் ரயில் பயணிக ளுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்குவது குறித்து ஆலோசித்த ரயில்வே நிர்வாகம் எலிகள், பூச்சிகளை விரட்ட அல்ட்ரா ஸôனிக் கருவிகளைப் பயன்படுத்த முடிவு செய்தது.

இதன்படி, சென்னை உள்ளிட்ட பல் வேறு நகரங்களில் வட மாநிலங்களுக்குச் செல்லும் நீண்டதூர எக்ஸ்பிரஸ் ரயில்க ளில் இத்தகைய கருவிகள் சோதனை முறையில் பொருத்தப்பட்டது. தற்போது சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இக்கரு விகள் பொருத்தப்பட்டுள்ளன என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில் பயன்படுத்தப்படும் அல்ட்ரா சவுண்ட் டிரான்ஸ்மிட்டர்கள் மனிதர்களின் உடல் நலனைப் பாதிக்கும் தன்மை கொண் டவை என மருத்துவர்களும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ள னர்.

பாதிப்பு என்ன?

இவை எழுப்பும் ஒலி அலைகள் மனிதர்களின் காதுகளில் கேட் காது என்றாலும், இவற்றால் மனிதர்க ளுக்கு உடல்ரீதியாக பல்வேறு பாதிப்பு கள் ஏற்படும் என தற்போது தெரியவந் துள்ளது.

இந்த அலைகள் மனிதர்களின் உடலில் உள்ள அட்ரீனல் சுரப்பியின் செயல் பாட்டை வேகப்படுத்தும். இதனால், உட லில் அட்ரீனலின் ஹார்மோன் சுரப்பது அதிகரிக்கும்."அட்ரீனலின் சுரப்பது அதிகரித்தால் உடலில் உள்ள இனவிருத்தி ஹார்மோன் களின் வழக்கமான செயல்பாடு பாதிக்கப் படும்' மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

அல்ட்ராஸôனிக் கருவிகள் பரப்பும் ஒலி அலைகள் காரணமாக மனிதர்க ளுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். இந்த ஒலி அலைகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் பாதிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் மேற் கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள் ளது.

வெற்றி கிடைக்கவில்லை:

வட சென் னையில் உள்ள ஒரு தொழிலக வளாகத் தில் பறவைகளைக் கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அல்ட்ராஸô னிக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.ஆனால், இந்த கருவிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்த குருசாமி தெரி வித்தார்.

ஏற்கெனவே, தோல்வி அடைந்த இந்த முயற்சியை மீண்டும் ரயில்வே நிர்வாகம் மேற்கொள்வது தேவையற்ற ஒன்று என் றும் அவர் கூறினார்.பெருமளவில் மக்கள் பயன்படுத்தும் ரயில்கள் போன்றவற்றில் இத்தகைய புதிய கருவிகளை பொருத்துவதால் எத்த கைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து நீண்டகால ஆய்வுகள் மேற் கொள்ள வேண்டும்.

ஆனால், அல்ட்ராஸôனிக் கருவிகள் விவகாரத்தில் இத்தகைய ஆய்வுகள் மேற் ù க ô ள் ள ப் ப ட் ட ன வ ô ? அதன் முடிவு என்ன? என்பது குறித்த தக வல்களை ரயில்வே நிர்வாகம் வெளிப்ப டையாக தெரிவித்து மக்களின் பாதுகாப்பு உணர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நவீன கருவிகளைப் பொருத் துவதற்கு பதில் ரயில்களில் பராமரிப்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டியதே அவசியம் என்பது பயணிக ளின் கருத்து.

காயத்திற்கு மருந்து கருணை!

உடல் ஆரோக்கியத்துடன் இருந்தாலும், பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையுமே சுமையாகக் கருதும் அளவுக்கு தனி மனித மனோபாவங்கள் மாறியுள்ளது. இதில் விபத்துகளில் காயமடைந்த மற்றும் நோயுற்ற பிராணிகளின் நிலை குறித்து யாராவது கவலைப்படுவார்களா?


இந்தக் கேள்விக்குப் பதிலாக மட்டுமல்லாமல் நமக்குப் பாடமாகவும் இருக்கிறார் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (மாலை நேரப் பிரிவு) ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் பிந்து.


காயமடைந்த, நோயுற்ற நாய்களை எங்கு பார்த்தாலும் அவற்றைத் தாயுள்ளத்தோடு அரவணைத்து, மிகுந்த பொறுப்புடன் மருத்துவ சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறார் பிந்து. நாயைப் பார்த்தவுடன் கல்லை எடுத்து அடிக்க நினைப்பவர்கள் மத்தியில் இவர் பார்வை மட்டும் இப்படி மாறியது எப்படி? அவரே சொல்கிறார்:

""சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர் பிரதான சாலையில் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்து நடந்தது. வேகமாகச் சென்ற வாகனத்தில் சிக்கிய ஒரு நாய் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநர் உள்பட அவ்வழியே சென்ற எல்லோரும் இந்தச் சம்பவத்தை ஒரு பொருட்டாகக் கூட நினைக்காமல் தங்களது சொந்த வேலை நிமித்தமாகச் சென்றுகொண்டிருந்தனர். இந்த விபத்தும், மக்களின் போக்கும் நாயின் உடலை மட்டுமல்ல எனது மனதையும் காயப்படுத்துவதாக அமைந்தது.

உடனடியாக அந்த நாயை அங்கிருந்து எனது வீட்டுக்கு கொண்டு சென்று, முதல் உதவி அளித்தேன். எலும்பு முறிவுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததால் நாயை "ப்ளு கிராஸ்' அமைப்பினரிடம் ஒப்படைத்தேன். இதன்பிறகுதான் நோயுற்ற நாய்களின் பக்கம் என் கவனம் திரும்பியது.


இதைப்போல் விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி அருகே இன்னொரு விபத்தைப் பார்த்தேன். பஸ் சக்கரம் ஏறி காலில் பலத்த காயமடைந்து கதறுகிறார் ஒரு வாலிபர். பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் சக மனித உயிர் ஒன்று அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் தவிப்பதை ஒரு பொருட்டாகக் கருதாமல் அடுத்த வண்டியைப் பிடித்து அவரவர் போகவேண்டிய இடங்களுக்குச் சென்றனர்.

அந்த விபத்தை நேரில் பார்த்த நான் உடனடியாக அருகில் இருந்த தெரிந்தவர் ஒருவரின் காரைக் கேட்டுப் பெற்று காயமடைந்தவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன்.

இதோடு நிற்காமல் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜராகி நடந்த சம்பவம் குறித்து சாட்சியம் அளித்ததன் பயனாக அந்த வாலிபரின் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைத்தது.

இந்த இரண்டு சம்பவங்களும் பாதிக்கப்படும் சக உயிர்கள் மீதான பரிவை எனக்குள் பலப்படுத்தியது. அடுத்த சில சம்பவங்களில் நான் நம்பிய தன்னார்வ அமைப்பின் செயல்பாடுகளும் திருப்தி தராததால், பாதிக்கப்படும் நாய்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்து பராமரிக்கத் தொடங்கினேன். 18 வருடங்களாக இந்தப் பணி தொடர்கிறது.


பி.எச்.இ.எல். நிறுவனத்தில் உயரதிகாரியாக இருந்த தந்தை பிஷ்ராடே 2005-ல் உயிரிழந்தார். இதையடுத்து, பணி நிமித்தமாக உடன் பிறந்தவர்கள் அமெரிக்காவில் குடியேற அவர்களுடன் தாயும் சென்றுவிட பாதிக்கப்பட்ட நாய்களுடன் நான் முழுமையாக ஐக்கியமாகிவிட்டேன்.


நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை வெறுப்புடன் பார்க்கும் பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும். எது எதற்கோ மேற்கத்திய நாடுகளின் பழக்கங்களைக் கடைப்பிடிக்கும் நாம் விலங்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் தவிர்ப்பது ஏன்?


விலங்குகளுக்காக நீங்கள் எதையும் பிரத்யேகமாகச் செய்ய வேண்டியதில்லை. வீட்டில் மிச்சம்மீதியாக இருக்கும் உணவுப் பண்டங்களை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசாமல் அதனை ஒரு காகிதத்திலோ அல்லது ஒரு துண்டு இலையிலோ போட்டு முறையாக வைத்தாலே போதும்.

நீங்கள் அதன் பசியை, அதன் தேவையை உணர்ந்துள்ளீர்கள் என்று அது உங்களை நம்பி இருக்கத் தொடங்கிவிடும். சில மனிதர்களைப் போன்று நாய்களுக்குப் பொய் சொல்லி உதவிகளைப் பெற்று ஏமாற்றத் தெரியாது. எனவே, உதவ வேண்டும் என்று நினைத்தால் நாய்களை நம்பி உதவலாம்.


அடிபட்ட, நோயுற்ற நாய்களை அருவருப்புடன் பார்த்து வெறுக்காமல் நம்மால் முடிந்த அளவில் சிறிய உதவிகளைச் செய்தாலே போதும் பல பெரிய பிரச்னைகள் தீர்ந்துவிடும். உதாரணமாக, புதிதாக யாரையாவது பார்த்தால் குரைப்பது நாய்களின் இயல்பான குணம்.

இதனைத் தவறாக புரிந்துக் கொள்ளும் சிலர் கையில் கிடைக்கும் கல்லால் அதனைத் தாக்குகின்றனர். இவ்வாறு தாக்கப்படுவதால் நாய்களின் உடலில் காயங்கள் ஏற்படும். இந்தக் காயங்கள் மீது கிருமி தொற்று ஏற்பட்டால் சிறு புழுக்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நாய்களின் உடலில் காயம் ஏற்பட்ட பகுதியில் மஞ்சள் தூள் அல்லது டர்பைன்டைனைக் கொட்டினாலே போதும் காயம் ஆறத் தொடங்கிவிடும். இதைவிடுத்து புழு வைத்துவிட்டது என்று கூறி நாயை மேலும் அடித்து துன்புறுத்துவது மற்றும் விரட்டி அடிப்பதால் அதனிடம் வெறி உணர்வை வளர்த்துவிடும். இது நமக்கே பாதகமாக முடியும்.


பொதுவாக நாய்கள் இனப்பெருக்கத்துக்கு எதிர்பாலினத்தைத் தேடும் போது ஒருவித ஒலியை எழுப்பும். இதனை நம்மில் பலரும் அது அழுவதாகவும் அவ்வாறு நாய் அழுவது அருகில் இருக்கும் வீட்டில் யாராவது இறக்கப்போவதற்கு முன்னெச்சரிக்கை என நினைப்பது தவறு. இவ்வாறு கூறப்படுவதும் முற்றிலும் மூட நம்பிக்கையே அன்றி வேறில்லை.

மனிதர்களுக்கு ஏற்படுவது போன்று நாய்களின் உடலில் ஏற்படும் தோல் பாதிப்பே சொறியாகும். உரிய மருந்துகள் அளித்தால் இந்தச் சொறியைக் குணப்படுத்திவிட முடியும்.

ஆனால், பலரும் தாங்கள் பாசத்துடன் வளர்க்கும் நாயானாலும், அதற்கு இத்தகைய தோல் பாதிப்பு ஏற்பட்டவுடனே வீட்டை விட்டு வெளியே விரட்டிவிடுகின்றனர். இவ்வாறு வெளியேற்றப்படும் நாய்கள் மற்றவர்களால் அருவருப்புடன் பார்க்கப்பட்டு மேலும் துன்புறுத்தப்படுகின்றன.

இத்தகைய சொறி பாதிப்பை ரேபிஸ் என நம்பியும் சிலர் இவற்றைக் கொல்லும் அளவுக்குச் செல்கின்றனர். சொறியால் பாதிக்கப்பட்ட பல நாய்கள் மீட்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு அவை தற்போது நன்றாக இருக்கின்றன.

சொறி வேறு ரேபிஸ் வேறு என்ற அளவுக்கு கூட நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. இந்த வகையான தகவல்களை குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு உணர வைக்க வேண்டும். விலங்குகளில் குறிப்பாக வேறு எதற்கும் இல்லாத வகையில் நாய்களுக்கு ஒரு சிறப்பு குணம் உள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் இருக்கும் இடத்தில் வசிக்கும் மனிதர்களின் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. இதனால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும் என மருத்துவர்களே உறுதிபடுத்தியுள்ளனர். இவ்வாறு அடுத்த ஒரு உயிரின் நலனுக்காக யோசிக்கும் போது மனிதனின் மன நிலை மேம்பட்ட நிலையை எட்டுகிறது.


ராஜபாளையம் உள்ளிட்ட நமது நாட்டு பாரம்பரிய வகை நாய்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கல்லூரி பணி மூலம் கிடைக்கும் வருவாயை வீட்டு வாடகைக்கும், நாய்களைப் பராமரிப்பதற்கும் மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தி வருகிறேன்.

குணப்படுத்தப்பட்ட நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள நாய்களைப் பெற்று பராமரிக்க யாராவது முன்வந்தால் கொடுத்துவிடுகிறேன். புற்று நோய், பார்வை இழப்பு உள்ளிட்ட பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட எட்டு நாய்கள் தற்போது எனது அரவணைப்பில் உள்ளது'' என்றார் பிந்து.

இந்தத் தாய் வழியில் நடைபோடப் போகிறவர் யாரோ!

ஞாயிறு, 15 ஜூன், 2008

தமிழக அரசின் சிமென்ட் இறக்குமதி திடீர் நிறுத்தம்?

சென்னை, ஜூன் 13: தமிழக அர சின் சிமென்ட் கழகம் (டான் செம்) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மேற் கொண்ட சிமென்ட் இறக்குமதி தற்போது திடீரென நிறுத்தப்பட் டுள்ளது.

இறக்குமதி சிமென்ட்டை பெறுவதற்காக செலுத்திய பணத்தை டான்செம் மற்றும் நுகர் பொருள் வாணிபக்கழகம் ஆகியவை திருப்பி அளித்து வருவ தாக கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிமென்ட் விலை கடந்த ஆண்டு அதிகரித் தது. இதனால், தனியார் மற்றும் அரசு திட்டங்களுக்கான கட்டுமா னப் பணிகள் முடங்கும் நிலை ஏற் பட்டது.இந்நிலையில் தமிழக அரசின் அரசுடைமை எச்சரிக்கையை அடுத்து, ஒரு மூட்டை ரூ. 200 விலையில் குறிப்பிட்ட அளவுக்கு சிமென்ட் வழங்க தனியார் சிமென்ட் ஆலை அதிபர்கள் முன் வந்தனர்.

இந்த சிமென்ட் அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழ கத்தின் கிடங்குகள் மூலம் விற் பனை செய்யப்படுகிறது.இது தவிர அதிக அளவில் சிமென்ட் வாங்கும் கட்டுமான நிறுவனங்கள் ஒரு மூட்டை ரூ.160 விலையில் பெறுவதற்காக மத் திய அரசின் எம்.எம்.டி.சி. மூலம் இறக்குமதி சிமென்டை டான் செம் நிறுவனம் சென்னை, தூத் துக்குடி துறைமுகங்கள் மூலம் தொடங்கியது.

மேலும், தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழகத்தின் சார்பில் தமிழ்நாடு சிமென்ட் கழகம் (டான்செம்) வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யும் சிமென்ட் ஒரு மூட்டை ரூ. 220-க்கு விற்பனை செய்யப்ப டும் என அரசு அறிவித்தது.

இதை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கத்தின் கிடங்குகளில் எந்த நிபந்த னையும் இன்றி மக்கள் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து வெளிச்சந்தையில் ஓபிசி 43 கிரேடு சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.235-ஆக குறைந்தது.அரசின் அறிவிப்பின்படி முதல் மாதத்தில் சென்னை துறைமுகத் துக்கு 1,250 டன்களும், தூத்துக் குடி துறைமுகத்துக்கு 1,250 டன்க ளும் சிமென்ட் வந்தன.

இவ்வாறு, இறக்குமதி சிமென்டை பெற அரசு அறிவித்தபடி கட்டுமான நிறுவனங்கள் மற்றும் சிமென்ட் விற்பனையாளர்கள் முன்பணம் செலுத்தினர்.முதலில் இந்தத் தொகையை டான்செம் நிறுவனம் நேரடியாக வாங்கியது. இதன்படி குறிப் பிட்ட சில மாதங்கள் மட்டும் இறக்குமதி சிமென்ட் கிடைத்தது.

சிமென்ட் கிடைக்கவில்லை:

கடந்த சில மாதங்களாக டான் செம் நிறுவனம் இறக்குமதி சிமென்ட்டை வாங்க விரும்பு வோரிடம் இருந்து புதிதாக முன்ப ணத்தை வாங்க மறுத்தது. இந்தத் தொகையை நுகர்பொருள் வாணி பக் கழகத்திடம் செலுத்துமாறு டான்செம் அதிகாரிகள் தெரிவித் தனர்.

நுகர்பொருள் வாணிபக் கழகத் திடம் முன்பணம் செலுத்தியவர்க ளுக்கு சிமென்ட் கிடைக்க வில்லை. இது குறித்து அதிகாரிக ளிடம் விசாரித்த போது முன்ப ணம் திருப்பி அளிக்கப்பட்டது என தமிழ்நாடு அடுக்குமாடி மற் றும் வீடு கட்டுவோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. மணிசங்கர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் சிமென்ட் விலை அதிகரித்துள்ளதால் சிமென்ட் இறக்குமதி தடைப்பட் டுள்ளது. எனவே, இறக்குமதி சிமென்ட்டுக்காக செலுத்திய முன்பணத்தை திரும்ப அளிக்கப் படுவதாக நுகர்பொருள் வாணி பக் கழக மற்றும் டான்செம் அதி காரிகள் கூறுகின்றனர் என இந் திய கட்டுமான வல்லுநர் சங்கத் தின் தென்னக மையத் தலைவர் எம்.கே. சுந்தரம் தெரிவித்தார்.

அரசு அறிவித்தபடி வெளிநாடு களில் இருந்து நேரடியாக சிமென்ட் இறக்குமதி நடைபெறு வது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் உரிமம் பெற்ற தனியார் நிறுவனங் கள் நேரடியாக இறக்குமதி செய் யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

அதிகாரி பதில்:

சிமென்ட் இறக்குமதி தொடர்பான அனைத்து ஆவணங்களும் தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழ கத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.சிமென்ட் இறக்குமதி தொடர் பாக முடிவெடுக்க வேண்டிய அதி காரம் நுகர் பொருள் வாணிபக் கழகத்திடம் அளிக்கப்பட்டுள்ள தால் இந்த விவகாரத்தில் எந்த பதி லும் கூறுவதற்கில்லை என டான் செம் நிறுவனத்தின் தலைவர் மற் றும் நிர்வாக இயக்குநர் கே. சத்ய கோபால் தெரிவித்தார்.

காரணம் யார்?

இறக்குமதி நிறுத்தம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 270-ஆக அதி கரித்துள்ளது. தனியார் ஆலை அதிபர்கள் தலையீடு காரணமா கவே இறக்குமதி நிறுத்தப்பட்டுள் ளதாக கட்டுமானத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கார் நிறுத்த ரூ. 9 லட்சம்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப் புகள் வாங்கும் விலையில் கார் களை நிறுத்தும் இடத்திற்காக ரூ. 9 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.இதனால், கார்கள் இல்லாதவர்களும் வீடு வாங்கும்போது கார் நிறுத்துமிடத்துக்கான தொகையாக பல லட்ச ரூபாய்களை செலவ ழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

சென்னையில் தற்போது அடுக்குமாடி குடி யிருப்புகள் விலை அவற்றில் உள்ள கூடுதல் வசதிகளைப் பொருத்து ஒரு சதுர அடி ரூ.3,500 முதல் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரத்துக் கும் மேலும் விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வகுத்துள்ள வளர்ச்சிக் கட்டுப் பாட்டு விதிகளின்படி அடுக்குமாடி குடியிருப் புக் கட்டடங்கள் கட்டும்போது அவற்றில் கார் கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடவசதி ஏற்படுத்த வேண்டியது கட்டா யம்.

இவ்வாறு இடவசதி ஏற்படுத்தாத கட்டடங் கள் விதி மீறல் புகாருக்கு ஆளாகியுள்ளன.இந்த பிரச்னை ஒருபுறம் இருக்க விதிகளின் படி வாகனங்களுக்கான இட வசதியுடன் ஏரா ளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவ தும் நடைபெறுகின்றன.

புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி குடியி ருப்புகளில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார் நிறுத்தும் அளவுக்கு 120 சதுர அடி அளவுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கப்ப டும் இடங்களுக்கு வீடு விற்பனையின்போது, சென்னையில் ரூ. 2 லட்சம் வரையும், புறநகர்ப் பகுதிகளில் ரூ. 75 ஆயிரம் வரையும் வசூலிக் கப்படுகிறது என இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மையத் தலைவர் எம்.கே.சுந்தரம் தெரிவித்தார்.

இவ்வாறு ஒதுக்கப்படும் இடத்தின் அளவை விற்பனை ஆவணத்திலும் குறிப் பிட்டு வாகன நிறுத்தும் இட வசதியை உறுதிப் படுத்துகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.இவ்வாறு ஒதுக்கப்படும் இடங்களுக்காக எவ்வளவு தொகை வசூலிக்கலாம் என்பது குறித்து எந்த வரையறையும் நிர்ணயிக்கப்படா மல் உள்ளது.

நியாயமாக நடக்க நினைக்கும் சில கட்டுமான நிறுவன உரிமையாளர்கள், தங் களுக்குள் பேசி வைத்துக் கொண்டு ஒரு குறிப் பிட்ட தொகையை வசூலிக்கின்றனர்.

கார் நிறுத்த ரூ. 9 லட்சம்:

சென்னை அடையாறில் பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றிடமிருந்து அனைத்து வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு விற்ப னையின்போது கார் நிறுத்தும் இடத்துக்காக மட்டும் ரூ. 9 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ரூ.80 லட்சம் என்பதால் கார் நிறுத்தும் இடத்துக் கும் இவ்வாறு அதிகபட்ச தொகை வசூலிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது.ரூ. 30 லட்சம், ரூ. 40 லட்சம் விலைகளில் விற்பனை செய்யப்படும் குடியிருப்புகளில் கூட கார் நிறுத்தும் இடத்துக்காக ரூ. 5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.

கார் இல்லாதவர்கள்...:

கார் இருப்பவர்கள் மட்டுமல்லாது கார் இல்லாதவர்களும் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கினால் நிறுத் தும் இடத்துக்கான தொகையாக பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.

இடம் ஒதுக்க வேண்டும் என விதி வகுப் பது போல இவ்வளவு தொகைதான் வசூலிக்க லாம் என்று அரசு நிர்ணயிக்க வேண்டும் என் கிறார் கோடம்பாக்கத்தில் அண்மையில் வீடு வாங்கிய ராமன்.

கார் இல்லாத நடுத்தர வருவாய்ப் பிரிவு மக் களின் நலன் கருதி அடுக்குமாடி குடியிருப்புக ளில் வாகன நிறுத்தும் இடத்துக்கான தொகையை ஒரு குறிப்பிட்ட அளவாக வரை யறை செய்ய அரசு முன்வர வேண்டும் என் பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.

வி. கிருஷ்ணமூர்த்தி

இப்படியும் ஒரு "பிசினஸ்'

சென்னையில் அடுக்குமாடி குடி யிருப்புகளில் கார் நிறுத்தும் இடவசதி இருப்பது கட்டாய மாகியுள்ள நிலையில் இதிலும் ஒரு புதிய வியாபாரம் களைகட்டியுள்ளது.

இவ்வாறு இட வசதியுடன் வீடு வாங்குவோரில் கார் இல்லாதவர்கள் தங்களுக்கான கார் நிறுத்தும் இடத்தை அடுத்த குடியிருப்பில் உள்ளவர்க ளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு அல்லது நட்பு அடிப்படையிலோ அளித்துவிடுகின்றனர்.

தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம் பாக்கம், ஆழ்வார்பேட்டை, தேனாம் பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வாகன நிறுத்தும் இடங்கள் அரு கில் உள்ள வணிக வளாகங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக வாடகை அடிப்படையில் அளிக்கப்ப டுகிறன.

வணிக நிறுவனங்களின் உரிமையா ளர்கள், அடுக்குமாடி குடியிருப்புக ளின் உரிமையாளர்கள் சங்கங்கள் தங் களுக்குள் பேசி வைத்துக் கொண்டு பகல் நேரத்தில் வாகன நிறுத்தும் இடத்தை வாடகைக்கு விட்டு குறிப் பிட்ட தொகையைப் பெறுகின்றனர்.

இது உரிய முறையில் வாகன நிறுத் தும் இட வசதியை செய்யாத கட்டட உரிமையாளர்களுக்கு மறைமுகமாக உதவும் வகையில் அமைந்துள்ளது.எனவே, கட்டட விதிகளை முறையாக அமல்படுத்த இத்தகைய செயல்பாடுக ளைக் கட்டுப்படுத்த வேண்டும் என கட்டுமான வல்லுநர்கள் வலியுறுத்து கின்றனர்.

வாடகை வீடானாலும்...:

அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாடகைக்கு குடியேறுபவர்களிடம் கார் நிறுத்துவது உள்ளிட்ட பார்க்கிங் கட்டணமாக மாதத்துக்கு ரூ. 800 முதல் 1,500 வரை வசூலிக்கப்படுகிறது.வீட்டின் உரிமையாளர்கள் தாங்கள் வீடு வாங்கும்போது வாகன நிறுத்தும் இடத்துக்காக செலுத்திய தொகையை இவ்வாறு வசூலிக்கின்றனர்.